Thursday, October 28, 2010

Share

பிரிவின் தருணம்.....

 காதல் என்னும் இன்பத்தினை
உணர வைத்த ஓர் இதயம்
ஏனோ தெரியவி்ல்லை
துடிக்க மறுக்கின்றது
எனக்கும் சேர்ந்து....

காய்ந்த காயப்பட்ட
என் இதயத்தை விட்டு
பறந்து செல்ல
நினைத்து விட்டாய் நீ
பரவாயில்லை
பறந்து செல் கிளியே...

பாலாறும் தேனாறும்
பாய்ந்தோடும் நதிகளின்
அருகில்,
பூக்களால் நிறைந்த வழியும்
நந்தவன சோலையில்,
பசுமையான இதயத்தில்
நிரந்தரமாக அமர்ந்து கொள்
உன் இனிமையான வாழ்வுக்காக.....

காதல் என்னும் ரணத்தினால்
செல்லரித்துப் போன
இதயமாயிற்றே.
எஞ்சியிருக்கும் நாட்களை
உன் நினைவுகளின் ஸ்பரிசங்களோடு
காலத்தை கடத்தி விடுவேன்..

காயப்பட்ட என் இதயத்தில்
காதல் என்னும் போர்வையில்
ஓய்வு கொண்ட பட்சியே,
புது புது அர்த்தங்களை
என்னில் உணர வைத்த
உன் உறவினை,
உயிர் மூச்சு உள்ளவரை
மறக்க மாட்டேன்...

9 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முத வட,இருங்க படிச்சுட்டு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை அருமை.காதல் என்னும் ரணத்தினால்
சல்லரித்துப் போன
இதயமாயிற்றே. இந்த லைனில் செல்லரித்துப்போன என வர வேண்டும் என நினைக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

காதல் கவிதைகளுக்கு சினிமா ஸ்டில் போடுவதை விட கூகுளில் காதல் என டைப் செய்து தேடினால் சூப்பர் ஸ்டில்கள் கிடைக்கும்,ஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு

கவி அழகன் said...

எல்லாம் காதல் செயிர வேலை வாழ்த்துக்கள் நண்பி
http://kavikilavan.blogspot.com/2010/10/blog-post_27.html

Chitra said...

காதல் என்னும் ரணத்தினால்
செல்லரித்துப் போன
இதயமாயிற்றே.
எஞ்சியிருக்கும் நாட்களை
உன் நினைவுகளின் ஸ்பரிசங்களோடு
காலத்தை கடத்தி விடுவேன்..

.... Very nice! :-)

Unknown said...

nice poem

Unknown said...

காதல் என்னும் இன்பத்தினை
உணர வைத்த ஓர் இதயம்
ஏனோ தெரியவி்ல்லை
துடிக்க மறுக்கின்றது
எனக்கும் சேர்ந்து....

Nice words. i feel this lines

நிலாமதி said...

எஞ்சியிருக்கும் நாட்களை உன் நினைவுகளின் ஸ்பரிசங்களோடு வாழ்ந்து விடுவேன். . உண்மையான் காதல்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சி.பி.செந்தில்குமார்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா.........
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
@யாதவன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா.........
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
@Chitra
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அக்கா...
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
@England
நன்றி நண்பா.......
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
@Aruntha
நன்றி நண்பி.........
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
@நிலாமதி
நன்றி நண்பி.........