Tuesday, October 19, 2010

Share

ஆழமான நட்பு ....

 பகலினை விழுங்கி
இரவினை பிரசவிக்கும்
இயற்கையின்
விந்தையான நேரத்தில்
சில்லென்று வீசும் காற்று
கரையினை தொட்டு
ஆர்ப்பரிக்கும்
அலைகளின் ஓசை
புதர்களின் மறைவில்
காதலர்களின்
முத்தத்தின் சத்தம்
அங்காங்கே காதல் ஜோடிகள்
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் பக்கத்தில் அவள் 
கண்ணீரை அருவியாக கொட்டுகிறாள்
சமுகம் அவர்களை ஏளனம் செய்தது
கள்ள காதல் என்று..
யாருக்கு புரியும் - அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று...

25 comments:

தினேஷ்குமார் said...

நல்ல வரிகள்
வலிகள் மாறினாலும்
வடுக்கள் மறைவதில்லை
உருமாற்றி உயிர்
பெற்றால்லுண்டு
சமுகம் மாறலாம்

எஸ்.கே said...

//அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று... //
வாவ்! அற்புதமான கற்பனை+வரிகள்! வாழ்த்துக்கள் நண்பரே!

Unknown said...

இந்த உலகில் நட்பை புரிந்து கொள்பவர்களாக அனைவரும் இருந்தால் ஆண் பெண் நட்பு எவ்வளவு அழகாக வளர்ந்து இருக்கும்?

Chitra said...

யாருக்கு புரியும் - அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று...

..... Prejudiced.... mmmm.....
Very nice kavithai.

Guruji said...

இயற்கையோடு இயைந்துபோன பல நிகழ்வுகளில் மௌனமாக, ஆழமாக, உணர்வுபூர்வமாக மனதோடு மனதாக நட்பு பேசிக்கொள்ளும் கண்ணீர் மொழியை இதை விட எளிமையாக பதிவு செய்ய முடியாது .வாழ்த்துக்கள்

நிலாமதி said...

அழகான வரிகள். நட்பு ஒரு எல்லை யோடு இருக்கும் வரை அழகு தான்.

mohamed mafaz said...

நட்பை கண்ணீருடன் இணைத்து சோகங்கள் நிறைந்ததாக எழுதியுள்ளீர்கள்
ஆழமான நட்பு கூட சமூகத்துக்கு தப்பாக தெரிகிறது
சுட்டி காட்டியமைக்கு நன்றிகள் பல
இனியாவது நாம் திருந்த வேண்டும் நமது சமூகமும் எதிர்கால சமூகமும் நட்பை நேசிக்கவேண்டும்
வரிகள் வலிக்கின்றன. நன்றி மேலும் சிறந்த கவிதைகள் தர வாழ்த்துக்கள்..

Paul said...

//பகலினை விழுங்கி
இரவினை பிரசவிக்கும்
இயற்கையின்
விந்தையான நேரத்தில்//

மிகவும் அழகான வரிகள்.. ரொம்பவே ரசித்தேன்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

dineshkumar said...
நல்ல வரிகள்
வலிகள் மாறினாலும்
வடுக்கள் மறைவதில்லை
உருமாற்றி உயிர்
பெற்றால்லுண்டு
சமுகம் மாறலாம்
///////////////////////////////////////////
நன்றி நண்பரே......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

எஸ்.கே said...
//அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று... //
வாவ்! அற்புதமான கற்பனை+வரிகள்! வாழ்த்துக்கள் நண்பரே!
//////////////////////////////////////////
நன்றி நண்பா........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Aruntha said...
இந்த உலகில் நட்பை புரிந்து கொள்பவர்களாக அனைவரும் இருந்தால் ஆண் பெண் நட்பு எவ்வளவு அழகாக வளர்ந்து இருக்கும்?
/////////////////////////////////////////////////////
நன்றி அருந்தா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

Chitra said...

யாருக்கு புரியும் - அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று...

..... Prejudiced.... mmmm.....
Very nice kavithai.

///////////////////////////////////////////////////
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அக்கா........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

யோகி ஸ்ரீ ராமானந்த குரு said...

இயற்கையோடு இயைந்துபோன பல நிகழ்வுகளில் மௌனமாக, ஆழமாக, உணர்வுபூர்வமாக மனதோடு மனதாக நட்பு பேசிக்கொள்ளும் கண்ணீர் மொழியை இதை விட எளிமையாக பதிவு செய்ய முடியாது .வாழ்த்துக்கள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜயா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நிலாமதி said...
அழகான வரிகள். நட்பு ஒரு எல்லை யோடு இருக்கும் வரை அழகு தான்.வ
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பி....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பால் [Paul] said...
//பகலினை விழுங்கி
இரவினை பிரசவிக்கும்
இயற்கையின்
விந்தையான நேரத்தில்//

மிகவும் அழகான வரிகள்.. ரொம்பவே ரசித்தேன்..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா........

Unknown said...

இன்று தான் முதன்முறையாக வந்தேன் தங்கள் வலைப்பூவிற்கு. வலைப்பூ மிகவும் அருமை...!! வாழ்த்துக்கள்!!

நெல்லை விவேகநந்தா said...

காட்சிக்கு மட்டுமல்ல, பார்வைக்கும் அர்த்தங்கள் பல உண்டு. ஆனால், மெய்யாய் இருப்பதை உணர வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த கவிதை சூப்பர்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வைகறை said...

இன்று தான் முதன்முறையாக வந்தேன் தங்கள் வலைப்பூவிற்கு. வலைப்பூ மிகவும் அருமை...!! வாழ்த்துக்கள்!!
////////////////////////////////////////////////////////
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நெல்லை விவேகநந்தா said...
காட்சிக்கு மட்டுமல்ல, பார்வைக்கும் அர்த்தங்கள் பல உண்டு. ஆனால், மெய்யாய் இருப்பதை உணர வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த கவிதை சூப்பர்....
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே

karthikkumar said...

யாருக்கு புரியும் - அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று.//// ஆணும் பெண்ணும் நட்புடன் பழகுவதை இந்த சமுகம் இன்னமும் இப்படித்தான் பார்க்கிறது.. NICE LINES

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃசமுகம் அவர்களை ஏளனம் செய்தது
கள்ள காதல் என்று..ஃஃஃஃ எந்தக் காதலைத் தான் விட்டு வைத்தார்கள்

உதயகுமார் said...

அழகான கவிதை, அதற்கு ஏற்றாற்போல படம், அருமை பிரஷா...நீங்கள் எப்படி உணர்ந்தீர்களோ அதேபோல் படிப்பவரும் உணரவேண்டும் என்ற உங்களது முயற்சி அற்புதம் !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி நண்பரே

Meena said...

கவிதை மிகவும் அருமை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Meenaநன்றி தோழி..