Saturday, November 5, 2011

Share

காதல் பட்சி..



பட்சியே!!!
உன்னை காணும் வரையில்
என்னை தீண்டியதில்லை
காதல்...

நீ ஜோடியாய்
ஒய்யாரமாய் மரத்தடியில் 
காதல் மொழி பேசுகையில்
கனக்கிறது என் மனம்
காதலை எண்ணி...

பட்சியே!!
உனக்களித்த சிறகுகளை
எனக்கும் அளித்திருந்தால்
பகமை இல்லாத
இடம் தேடி
பறந்தே போய் இருப்பேன்
காதல் கிளி அவளுடன்...

அன்பில் இணைந்து
பாசத்தில் பிணைந்து
கனவுகள் வளர்ந்து 
தினம் தினம்
எண்ணங்களை கவியாக்கி
காதல் ராகம் பாடுகிறேன்
அவள் நினைவால்...

பட்சியே! அறிவாயா?
காதலின் இனிமைக்குள்
ஒளித்திருக்கும்
ரணங்களின் கொடுமையை..

நித்தம் நித்தம்
பித்து பிடிக்க வைக்கும்
அவள் நினைவுகள்
செத்தும் பிழைக்கிறேன்
காதல் புரியும்
தர்ம கொலைகளில் இருந்து..

15 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
ஜோடிக் கிளிகள் காதல் ரணங்களை
கிளறிவிட்டுப் போனாலும்
அதில் கிடைத்த கவிதை அற்புதம்
காதல் என்பதே துயரும் சுகமும் கலந்த கலவைதானே
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப நல்லாஇருக்கு கவிதை வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அன்பில் இணைந்து
பாசத்தில் பிணைந்து
கனவுகள் வளர்ந்து
தினம் தினம்
எண்ணகளை கவியாக்கி/

சொக்கிப்போக வைக்கும் வரிகள்.
பாராட்டுக்கள்..

கவி அழகன் said...

கவிதை அருமமை

மகேந்திரன் said...

காதல் மொழிபேசும்
இனிய கவிதை....

kasupanamthutu said...

கவிதை சுமார்தான் .அடுத்த முறை இதை விட சிறந்ததாக எதிர்பார்க்கிறேன். நன்றி.

Anonymous said...

பாடலாய் பாடிப்பார்த்தேன்...சுகமாய் இருந்தது...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Ramaniநன்றி ரமணி ஜயா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi நன்றி லக்ஸ்மி அம்மா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இராஜராஜேஸ்வரி நன்றி சகோதரி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கவி அழகன்நன்றி கவிழகன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@மகேந்திரன் நன்றி சகோதரா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sivalingamtamilsourceவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரெவெரிநன்றி ரெவெரி

Tamilthotil said...

பட்சியே! அறிவாயா?
காதலின் இனிமைக்குள்
ஒளித்திருக்கும்
ரணங்களின் கொடுமையை..

ரணம் இந்த வார்த்தையை படிக்கும் பொழுதே இதயத்தில் ஒரு வலியை உணர முடிகிறது. கவிதையில் எல்லா வரிகளும் படிப்பவர்களின் மனதை ஆக்கிரமிப்பதில்லை. சில வரிகளே முழு கவிதையின் பாதிப்பைத் தந்துவிடுகிறது. அப்படி என்னைப் பாதித்த வரிகள்.
அருமை.