Wednesday, November 2, 2011

Share

மன்னித்துவிடு...



மனச்சாட்சியே இன்றி
இழைத்து விட்டேன்
பெரும் துரோகம் 
மன்னிப்பாயா? - இந்த
அறியாமையின் அசிங்கத்தை...

தனிமையின் கொடுமை
உணர்வுகளின் போராட்டம்
இழப்புகளின் இயலாமை
பாசத்தினை வலை விரிப்பு
தவிப்புகளின் அதிகரிப்பில்
இழைத்து விட்டேன்
பெரும் சங்கடத்தை..

மனதிலே ஆயிரம் வலி
ஒவ்வொறாய் சொல்லிட
ஓராயிரம் அழைப்புகள்
பயனற்று போனது 
எதிர்பார்ப்புகள்.
அசுரனாய் மாறிய என் மனம்
அழிந்து விட்டது 
உன் நிம்மதியை..
வருந்துகிறேன் இப்போது
அங்கணப் பொழுதுகளை எண்ணி..

கனவில் கூட நினைத்தில்லை - உன்
கண்ணீரில் கவி பாட
இடியாய் இன்னும்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
என் இதயம் - உன்
அழுகையின் ஓசையிலே..
மன்னித்து விடு என்னை..

15 comments:

VANJOOR said...

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


.

அஹ்ஸன் said...

ம்ம் அழகான உணர்வுபூர்வமான படைப்பு வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

மன்னித்து விடு என்னை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நெகிழவைக்கும் கவிதை..

SURYAJEEVA said...

மன்னிப்பு கேட்கவும் ஒரு தைரியம் வேண்டும்

இராஜராஜேஸ்வரி said...

மன்னித்து விடு என்னை..

Anonymous said...

மன்னித்து விடு...உணர்வுக் கவிதை...வாழ்த்துக்கள்...

ராஜா MVS said...

கவிதை அருமை... சகோ...

தமிழ்வாசி பிரகாஷ் said...

மன்னிக்க உணர்வு வேண்டுமே. அருமை கவிதை


இரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்

மகேந்திரன் said...

மனதில் மணிமேடையிட்டு
அமர்கிறது உங்கள் கவிதை
அவ்வளவு நேர்த்தி எழுத்துக்களில்...

Lagrin said...

noce tozhi.....
http://lagrin-kavitaigal.blogspot.com

ஓசூர் ராஜன் said...

மன்னிப்பது மனிதனின் அன்பு குணம். மன்னிப்பை யாசிப்பது கூடத்தான்!

kowsy said...

வாழ்த்துகள்

சம்சுதீன் said...

அருமையான உணர்வுபூர்வமான படைப்பு தோழி வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

யாரிடம் யார் மன்னிப்பு கேட்பது; புரியும்படி இருந்தால் இன்னும் ரசிக்கலாம். உறவுகளையும் வேண்டியவரையும் துறந்து வந்த துக்கமா.?