Sunday, September 18, 2011

Share

விவாகரத்து...



பேசி பேசி பார்த்தாச்சு
பேச்சும் முடியவில்லை
முடிவும் எட்டவில்லை
ஓர் முடிவினை நோக்கி
பல விதங்களில் பேச்சு
விடிய விடிய பேசினர்
விடித்த பிறகும் பேசினர்.

விரிசல்களும் அதிகரித்தன
விரக்தியுடன் வலி அதிகரிக்க
தொடர்ந்தனர் தம் பேச்சை
இருந்தும் முடிவு எட்டவில்லை
அன்பாக பேசினர்
அதிகாரமாக பேசினர்
எல்லை மீறியும் பேசி பார்த்தனர்
தீர்வு ஏதும் எட்டவில்லை
சந்தேகம் இங்கு
ஆட்சி செய்தமையால்,
புரிதல் இங்கு கேலி கூத்தானது
காதல் இங்கு கபடமானது
வாழ்க்கையே சூனியமானது.

இதற்கு பிறகும்
பேச்சு எதற்கு?
இரு மனங்களுடன் உறவாடி
தீர்க்கமான முடிவை எட்டினர்
கணவன் - மனைவி எனும்
உறவை விடுத்து
நண்பர்களாக வாழ என...

18 comments:

ம.தி.சுதா said...

புரிந்துணர்வுள்ள குடும்பம் அமைந்தால் அதைப் போல் சொர்க்கம் வேறேதும் இருக்கா..

settaikkaran said...

//கணவன் - மனைவி எனும்
உறவை விடுத்து
நண்பர்களாக வாழ என...//

கணவனும் மனைவியுமாக இருக்கும்போதும் நண்பர்களாய் இருந்திருந்தால், விவாகரத்து தவிர்க்கப்பட்டிருக்குமோ? :-)

காந்தி பனங்கூர் said...

//சந்தேகம் இங்கு
ஆட்சி செய்தமையால்,
புரிதல் இங்கு கேலி கூத்தானது//

100 சதவீதம் உண்மை சகோ.

அருமையான பதிவு.

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஒன்

Yaathoramani.blogspot.com said...

பேச்சுஉறவை வளர்ப்பதற்காக
உணர்வைப் பகிர்வதற்காக என்கிற நிலை மாறி
அளவுக்கு அதிகமானால் அமிர்தமே விஷமாதல் போல
இன்று பேசுதலே பல மன முறிவினுக்கு விவாகரத்திற்கு
காரண்மாகிப் போகிறது
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ரேவா said...

சந்தேகம் இங்கு
ஆட்சி செய்தமையால்,
புரிதல் இங்கு கேலி கூத்தானது
காதல் இங்கு கபடமானது
வாழ்க்கையே சூனியமானது.

சத்தியமான உண்மை தோழி...சந்தேகம் ஆட்சி செய்யும் இடத்தில் அமைதியும் இருக்காது அன்பும் நிலைக்காது என்பதை அழகாய் சொல்லும் கவிதை வாழ்த்துக்கள் பிரஷா :)

நிகழ்வுகள் said...

///சந்தேகம் இங்கு
ஆட்சி செய்தமையால்,
புரிதல் இங்கு கேலி கூத்தானது
காதல் இங்கு கபடமானது
வாழ்க்கையே சூனியமானது./// பல குடும்பங்களில் நடப்பது இது தானே

வை.கோபாலகிருஷ்ணன் said...

கடைசிவரை நண்பர்களாக அல்லது காதலர்களாக இருப்பது தான் ஜாலி போலிருக்கு. கணவன் மனைவி என்றாலே கஷ்டம் தான் போலிருக்கு.

உண்மையான அன்பு மட்டுமிருந்தால் அங்கு பேச்சுக்கே வேலை இருக்காது.

பேசிப்பேசியே, சின்னச்சின்ன தவறுகளைக்கூட சகித்துக்கொள்ள முடியாமல் வாக்குவாதம் தொடங்கி கடைசியில் சண்டையிலும், மனவருத்தத்திலும், விவாகரத்திலும் போய் முடிகிறது.

என்ன செய்ய! ஒவ்வொருவர் இல் வாழ்க்கையிலும் என்னென்ன விதமான கஷ்டங்களோ!!

நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

நிரூபன் said...

கணவன் - மனைவி எனும்
உறவை விடுத்து
நண்பர்களாக வாழ என...//


புரிதலுடன் நண்பர்களாக வாழ வேண்டும் எனும் உள்ளங்களின் உணர்வலைகளை விவாகரத்து கவிதை தாங்கி நிற்கிறது.

கவி அழகன் said...

அடக்கோதாரி விளுவாரே நண்பர்களாய் வாழ போராரர்களா

Jana said...

அருமையான பதிவு.

நிலாமதி said...

அழகான பண்பட்ட எழுத்துநடை பாராடுக்கள்.சந்தேகம் வரும் போது சந்தோஷத்துக்கு இடமில்லை

Suresh Subramanian said...

சந்தேகம் இங்கு
ஆட்சி செய்தமையால்,
புரிதல் இங்கு கேலி கூத்தானது..

காதலிப்பது சுலபம்... ஆனால் கல்யாணம் கஷ்டம் தான்..

Suresh Subramanian said...

கணவன் - மனைவி எனும்
உறவை விடுத்து
நண்பர்களாக வாழ என...

நட்பு என்றுமே அருமை.. ஏனெனில் எந்த எதிர்பார்ப்பும் அதில் இல்லை...

www.suresh-tamilkavithai.blogspot.com

Anonymous said...

கல்யாணம் கஷ்டம் தான்...அருமையான கவிதை...

மகேந்திரன் said...

சந்தர்ப்ப சூழ்நிலையால் காதல் நட்பாக
மலர்ந்தது எனச் சொல்லும் உங்கள் கவிதை வரிகள் அருமை.

Prem S said...

//சந்தேகம் இங்கு
ஆட்சி செய்தமையால்,
புரிதல் இங்கு கேலி கூத்தானது
காதல் இங்கு கபடமானது
வாழ்க்கையே சூனியமானது.//

அருமை அன்பரே

Anonymous said...

பேசி பேசி பார்த்தாச்சு
பேச்சும் முடியவில்லை
பேச்சு நட்பாகவோ
காதலாகவோ இருந்தால்தானே
முடிவதற்கு
அதிகார பேச்சுக்களுக்கு முடிவேது...