Saturday, September 10, 2011

Share

தாய்மை....


இதம் தரும் உணர்வுகளுடன்
அனுதினம் கலண்டர் கிழிக்கையில்
அச்செய்தி கிடைத்திடுமோ - என
ஏங்கத்துடன் இருந்த அவள்,

ஆண்டு பல கடந்தும் - அவள்
புரிந்திட்ட நன்மையின் விளைவால்
ஆண்டவனின் அருளால்
அவள்தன் தங்க வயிற்றில்
குட்டி நிலா துயில் கொள்ள
தனியான இடம் அமைத்து
பெண்மைக்கே பெருமை சேர்க்கும்
தாய்மை என்னும் உறவுக்குள்
நகர தொடங்கி விட்டாள்
இன்று முதல்...

வெறுமையாய் இருந்த அவள்
முழுமையாயாய் ஆனாதினால்
ஆனந்தத்தில் மூழ்கியே
சரணடைகின்றாள் தன்
கணவன் மடியில்....

பிரிவால் துவண்டு இருந்த
உறவினர் முகங்களிலே
ஆயிரம் மின்னல் அடித்திடும்
புன்னகையின் பிரதிபலிப்புக்கள்..

குட்டி நிலவின்
வரவை எண்ணி
கலண்டரின் அருகில்
காத்திருப்பது அவள் மட்டுமல்ல
அவளின் தாய்மையும் கூட...

23 comments:

செய்தாலி said...

அதிகாலையில் வாசித்த முதல் கவிதை
வரிகளில் பெண்மையின் தாய்மை ஏக்கம்

பெண்மையை முழுமைபடுத்தும் தாய்மை
பெண்மைக்கான இறைவனின் மகுடம்

கவிக் குயிலின் வரிகள் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

Anonymous said...

காத்திருப்பது அவள் மட்டுமல்ல
அவளின் தாய்மையும் கூட...
வரிகள் அருமை....

கவி அழகன் said...

தாய்மையின் ஏக்கம் நிறைந்த வரிகள்

மோக போதை நகரம்
http://kavikilavan.blogspot.com

MANO நாஞ்சில் மனோ said...

வெறுமையாய் இருந்த அவள்
முழுமையாயாய் ஆனாதினால்
ஆனந்தத்தில் மூழ்கியே
சரணடைகின்றாள் தன்
கணவன் மடியில்....//


வாவ் தாய்மையின் கவிதை சூப்பர்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

கடைசி பாரா ரியலி சூப்பர்....!!!

அம்பாளடியாள் said...

அழகிய கவிதைவரிகள் வாழ்த்துக்கள் சகோ .....

பிரணவன் said...

குட்டி நிலவின்
வரவை எண்ணி
கலண்டரின் அருகில்
காத்திருப்பது அவள் மட்டுமல்ல
அவளின் தாய்மையும் கூட...
அருமையான வரிகள். . .

'பரிவை' சே.குமார் said...

அருமை...

இந்திரா said...

கடைசி வரிகள் யதார்த்தத்தின் உச்சம்.

அருமையான பகிர்வு. நன்றி.

கும்மாச்சி said...

\\குட்டி நிலவின்
வரவை எண்ணி
கலண்டரின் அருகில்
காத்திருப்பது அவள் மட்டுமல்ல
அவளின் தாய்மையும் கூட...//

நல்லா இருக்கு.

காந்தி பனங்கூர் said...

திருமணமான ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்கும் ஏக்கம் அது. அருமையான பதிவு.

சிசு said...

பேஷ்.. பேஷ்... நன்னாருக்கு...

Praveenkumar said...

தாய்மையின் ஏக்கத்தை விளக்கும் மிகவும் அருமையான கவிதை வரிகள்.

Jana said...

குட்டி நிலவின்
வரவை எண்ணி
கலண்டரின் அருகில்
காத்திருப்பது அவள் மட்டுமல்ல
அவளின் தாய்மையும் கூட...

superb..

F.NIHAZA said...

கவிதை மிக அருமை...

F.NIHAZA said...

இதம் தரும் உணர்வுகளுடன்
அனுதினம் கலண்டர் கிழிக்கையில்
அச்செய்தி கிடைத்திடுமோ - என
ஏங்கத்துடன் இருந்த அவள்,

பெண்ணாய் பிறந்தவளின்..முக்கிய எதிர்பார்ப்பு இதுவன்றோ???

மகேந்திரன் said...

தாய்மையின் அழகு மற்றும் தவிப்பை
இயல்பாகக் கூறும்
அழகுக் கவிதை.

மாய உலகம் said...

தாய்மை கவிதை மனதினுள் தவிப்பை ஏற்படுத்தும் அழகு கவிதை... கலக்கல் கலக்குங்க....

http://maayaulagam-4u.blogspot.com/2011/09/blog-post_9170.html

நிலாமதி said...

தாய்மையை அழகாய் வர்ணித்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் .
ஒருபெண்ணின் முழுமை தாய்மை.

ஆச்சி ஸ்ரீதர் said...

அழகான ஏக்கம்

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

tholi, nailla kavithai , calendar ku kal vanganum pola iruku,parunka ,niraya kavithai yelutha valthukkal.

Anonymous said...

தாய்மை...
கவிதை..,
அழகு..,
அருமை..,
சிறப்பு..,

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

தாய்மையின் உணர்வு கவிதையில் புரிகிறது.காலண்டர்க்கு கால் வாங்குங்க தோழி.கவிதைகள் அருமை.