Thursday, February 24, 2011

Share

மூன்று இதயங்கள்..!

 வஞ்சி அவள் நெஞ்சமதில்
கஞ்சதனமெதுமின்றி
பஞ்சமில்லா அன்பினிலே
விஞ்சியிருந்த அவன் - மண
மஞ்சமதில் மங்கைதனை
மாற்றன் மனையாளாக
மண வாழ்து தூவுகின்றான்
மனதில் வஞ்சமின்றி
விதி வரைந்த பாதையில்
சந்திந்த விழிகள் இரண்டு - இன்று
சதியின் வலையில் வீழ்ந்ததனால்
விடும் கண்ணீரை யார் அறிவார்..,!

முகத்தை அலங்கரித்து
முழு மதிபோல் இருந்த அவள் - அவர்கள்
முடிவை நிராகரிக்க தெரியாமல்
முணுக்கும் இதயமதை
மண்டபத்தின் மூலையிலே
அமர்ந்திருக்கும் அவன் தவிர
அருகில் இருப்பார் கூட
அறிய முடியில்லை..!

சனக் கூட்டம் மத்தியிலே
சந்தோஷ ஊஞ்சலிலே
சாதித்த பெருமையிலே - இவன் கூட
சங்கமித்த இதயங்களின்
சங்கடத்தை அறிந்து விட
சந்தர்ப்பம் ஏதுவுமில்லை..!

விழி வழியே வந்த காதல்
பாதி வழியினிலே போகுமென்றோ
பாசம் தந்து கொல்லுமென்றோ
பழகும் போது புரிந்ததில்லை
மண்டபமே மகிழ்ச்சியிலே
மந்திரங்கள் ஒலிக்கையிலே
மணமகனின் அருகினிலே
மங்கை இவள் தவிப்பதனை
மாற்றிட தான் மார்க்கம் உண்டோ...!

உடலால் வடிவமைக்கப்பட்ட அழகிய வடிவங்கள்.

26 comments:

ஜீ... said...

Nice! mmmmm? :(

வேடந்தாங்கல் - கருன் said...

தமிழ் தங்களிடம் விளையாடி இருக்கிறது உங்களிடம் .. அருமை ...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

பாரத்... பாரதி... said...

காதல் கவிதை என்றாலே வார்த்தைகளின் ஊடே, கண்ணீர் வழிவதை தவிர்க்க இயலாததாகி விடுகிறதே...
நல்ல கவிதை..

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃவிழி வழியே வந்த காதல்
பாதி வழியினிலே போகுமென்றோஃஃஃஃ

ஆமாங்க....

நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

MANO நாஞ்சில் மனோ said...

//விழி வழியே வந்த காதல்
பாதி வழியினிலே போகுமென்றோ
பாசம் தந்து கொல்லுமென்றோ
பழகும் போது புரிந்ததில்லை//

அருமை அருமை...

பாரத்... பாரதி... said...

கடைசி வரிகளில், காட்சிகளின் வெளிப்பாடு தெரிகிறது.

பாரத்... பாரதி... said...

தலைப்பின் பொருள் கடைசியில் தான் புரிகிறது.

தமிழ் உதயம் said...

தவிப்பு - இயலாமைகளை சுமந்தப்படி கவிதைகளாக.

ஓட்ட வட நாராயணன் said...

நல்லா இருக்கு பிரஷா! இப்படி எத்தனை பெண்கள் தங்கள் வாழ்க்கையினைத் தொலைத்து இருக்கிறார்கள்! நன்றி அத்தகைய பெண்களின் உணர்வுகளைக் கவிதையில் காட்டியமைக்கு!!

சென்னை பித்தன் said...

எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துவதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் அவனால்?இது கூடப் பரவாயில்லை,காதலித்த பெண் கணவனுடன் ரயிலில் எதிர் இருக்கையிலேயே பயணித்தால்?இருவர் நிலையும் எப்படியிருக்கும்?
நெஞ்சைத் தொட்ட கவிதை தோழி பிரஷா!

VELU.G said...

சந்தத்தோட பட்டைய கிளப்பிறீங்க

நல்லாயிருக்குங்க

logu.. said...

அம்மி மிதிச்சுதான் சடங்கு நடக்குது..
அன்பை மிதிச்சுதான் விதியும் சிரிக்குது..
மேளங்கள் முழங்குதுங்க..
ரத்த நாளங்கள் துடிக்குதுங்க..
பொருந்தாத உறவை ஊருசனம் வாழ்த்துதுங்க..
பொண்ணோட மனசு ஊமையாகி வாடுதுங்க..

டி.ஆர் அவர்களின் மற்க்க முடியாத வரிகள்.
(உங்க பதிவ படிச்சதும் இதன் ஞாபகம் வந்துச்சு..)

பாட்டு ரசிகன் said...

முதல் வணக்கம்

பாட்டு ரசிகன் said...

கவிதை அருமை..
வாழ்த்துக்கள்..

பாட்டு ரசிகன் said...

நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...

தெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html

Lakshmi said...

தலைப்பின் அர்த்தம் கடைசியில்தான் புரிந்தது. அருமை. வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

நல்லா இருக்கு பிரஷா!

Chitra said...

விழி வழியே வந்த காதல்
பாதி வழியினிலே போகுமென்றோ
பாசம் தந்து கொல்லுமென்றோ
பழகும் போது புரிந்ததில்லை


.....என்ன அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

பிரபாஷ்கரன் said...

கவிதை அருமை..

பிரபாஷ்கரன் said...

கவிதை அருமை..

நிலாமதி said...

அழகு தமிழால் காவியமொன்றை கவி வடிவில் வரைந்த ,தங்கள்தமிழ் புலமைக்கு என்
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Philosophy Prabhakaran said...

// கஞ்சதன //

த் மிஸ்ஸிங்...

மற்றபடி சூப்பர்....

சாமக்கோடங்கி said...

அருமையான கவிதை.. சோக முடிவு..

வாழ்த்துக்கள்..

Anonymous said...

மூன்று இதயங்கள்
நிறைய இதயங்களை கொள்ளையிடித்து விட்டது.

Anonymous said...

வாழ்த்துக்கள்..

தோழி பிரஷா said...

தனித்தனியாக பதில் தரமுடியவில்லை...வருகைதந்து பின்னூட்டமளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்