Thursday, February 17, 2011

Share

பிரியா நட்பு...!

 சின்ன சின்ன கதை பேசி
சிரித்து மகிழ்வதற்காய்
சென்ற பல பொழுதுகளில்
சேர்ந்திருந்தோம் நாம்...!

சொந்தபந்தம் எதுவுமின்றி
சொந்த கதை பல பேசி
நித்தம் நித்தம் நீண்ட தூரம்
நினைவுகள் பல பகிர்ந்தோம்...!

நோய்வுற்ற நேரத்திலே
நேரம் காலம் பார்க்காது
நேர்த்தியுடன் என்னருகே
நீ இருந்தாய் ஆறுதலாய்...!

உன் சுமைகள் உட் புதைந்தே
என் பாரம் தோள் தாங்கி
ஏற்றம் காண்பதற்காய்
என்னுடனே உழைக்கின்றாய்...!

சோதனைகள் சூழ்ந்து வர
வேதனையால் வேலியிட்டாய்
விளைபயிராம் நட்பிதனை
பாதகமேது இன்றி
பாதுகாப்பதற்காய்...!

பாசமென்னும் பாத்திரத்தில்
வேசமென்னும் உடையணிந்து,
வெறுப்புடனே கதை பேசி
வெட்டி செல்ல நினைத்தாலும்
ஒட்டியே போகிறது
ஓரிடத்தில் உன் பேச்சு...!

உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..!

50 comments:

sakthistudycentre-கருன் said...

நாளைக்கு டீடெய்லா கமென்ட் போடறேன்.. எப்ப பார்த்தாலும் வீட்டிற்கு போகும்போதே பதிவு போடுங்கக்கா ? ஆனா ஓட்டு போட்டட்டேன்..

Chitra said...

சோதனைகள் சூழ்ந்து வர
வேதனையால் வேலியிட்டாய்
விளைபயிராம் நட்பிதனை
பாதகமேது இன்றி
பாதுகாப்பதற்காய்...!


..... ஆத்மார்த்தமாக எழுதி இருக்கீங்க.....

S Maharajan said...

//உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..!//

Arumai........

கே. ஆர்.விஜயன் said...

பாசமென்னும் பாத்திரத்தில்
வேசமென்னும் உடையணிந்து,
வெறுப்புடனே கதை பேசி
வெட்டி செல்ல நினைத்தாலும்
ஒட்டியே போகிறது
ஓரிடத்தில் உன் பேச்சு...!//
இதுதான் கொஞ்சம் பவுண்ஸ் ஆகுது.

Avargal Unmaigal said...

உங்கள் தளத்திற்கு அடிக்கடி வந்து உங்கள் கவிதைகளை வந்து ரசிப்பேன் நேரமில்லை என்ற காரணத்தால் பதில் போடவில்லை. அப்படி போட்டாலும் உங்கள் கவிதைகள் சூப்பர் என்றுதான் சொல்ல வேண்டும் இங்கு வருகின்ற எல்லோரும் அதைத்தான் கூறுகிறார்கள் நானும் அதை சொல்லாமல் வேறு நல்ல வார்த்தைகளை தேடிக் கொண்டுதான் இருந்தேன். இன்னும் கண்டுபிடிக்கவில்லை. முடிந்தால் நீங்கள் நல்ல வார்த்தைகளை கண்டுபிடித்து அனுப்பி வைத்தால் நானும் உங்களை வித்தியாசமாக பாரட்டலாம்.....வாழ்க வளமுடன்.....

Hard times don't last forever but true friendships do...
என்றும் அன்புடன்
Madurai Tamil Guy
( http://avargal-unmaigal.blogspot.com/ )

ம.தி.சுதா said...

அருமையானதும் உணர்வுடன் கூடிய வரிகள்...

இந்தப் படம் எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே...

சே.குமார் said...

KAvithai Arumai... unarvuppurvamaai... athmarthama Solli irukkinga...

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

அழகான நட்பின் கவிதை . பகிர்வுக்கு நன்றி தோழி

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...

உறவுகளில் வலிமையானது நட்பு! அந்த நட்பு பற்றி ஒரு அற்புத கவிதை! வாழ்த்துக்கள் பிரஷா!

Vijay @ இணையத் தமிழன் said...

மூழ்காத ship ?! :)

நிலாமதி said...

பிரஷாவின் பிரியா நட்பு .........பல் கதை பேசி செல்கிறது. நட்பு வலிமை மிக்கது. பாராட்டுக்கள. ......

Riyas said...

ம்ம்ம்ம்ம் நட்புக்கவிதை அழகு..

Philosophy Prabhakaran said...

உணர்ச்சிகரமான கவிதை...

ஆயிஷா said...

அருமை.

இரவு வானம் said...

எப்படித்தான் யோசிக்கிறீஙக???

ஆனந்தி.. said...

இலங்கையில் உள்ள நட்பைஎல்லாம் நீ ரொம்ப மிஸ் பண்ணுவ தான் இல்லையா தங்கச்சி???

தம்பி கூர்மதியன் said...

நட்பு.. எனக்கு மிகவும் பிடித்த டாபிக்.. சூப்பர்..

ஹேமா said...

நட்பை உணர்ந்து அதை இன்னும் அழகுபடுத்தி எழுதியிருக்கிறீர்கள்.அருமையாயிருக்கு பிரஷா !

சுஜா கவிதைகள் said...

நட்பின் அருமையை அருமையாய் உணர்த்துகிறது உங்கள் கவிதை .......மிக அருமை பிரஷா.....

ஜீ... said...

very nice!

FARHAN said...

அழகான நட்பை உங்கள அழகு மொழியில் மேலும் அழகுபடுத்தி உள்ளீர்கள்,

சி.கருணாகரசு said...

நட்பு... சிலிர்ப்பு.

பாராட்டுக்கள்.

! சிவகுமார் ! said...

Wonderful!!

thirumathi bs sridhar said...

மிக ரசித்தேன்.

சந்திரகௌரி said...

அருமையான கவிதை

தோழி பிரஷா said...

@sakthistudycentre-கருன் நன்றி கருன்.

தோழி பிரஷா said...

@Chitra நன்றி சித்திராக்கா

தோழி பிரஷா said...

@S Maharajan நன்றி மகாராஜன்

தோழி பிரஷா said...

@கே. ஆர்.விஜயன் நன்றி..

தோழி பிரஷா said...

@Avargal Unmaigal தொடர்ந்து எனது கவிதைகளை படித்து வரும்உங்களுக்கு எனது நன்றிகள்.

தோழி பிரஷா said...

@ம.தி.சுதா நன்றி சுதா.. படம்பார்த்திருப்பீர்கள் ஞாபகப்படுத்தி பாருங்கள்

தோழி பிரஷா said...

@சே.குமார் நன்றி குமார்.

தோழி பிரஷா said...

@!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ நன்றி

தோழி பிரஷா said...

@மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் நன்றி றஜீவன்

தோழி பிரஷா said...

@Vijay @ இணையத் தமிழன் ம் வருகைக்கு நன்றி சகோ

தோழி பிரஷா said...

@நிலாமதி பாராட்டுக்கு நன்றி அக்கா

தோழி பிரஷா said...

@Riyas நன்றி நண்பரே

தோழி பிரஷா said...

@Philosophy Prabhakaran நன்றி

தோழி பிரஷா said...

@ஆயிஷா நன்றி

தோழி பிரஷா said...

@இரவு வானம் :) வருகைக்கு நன்றி

தோழி பிரஷா said...

@ஆனந்தி.. சரியாக கண்டுபிடித்தீர்கள். நன்றி அக்கா

தோழி பிரஷா said...

@தம்பி கூர்மதியன் நன்றி

தோழி பிரஷா said...

@ஹேமா நன்றி அக்கா

தோழி பிரஷா said...

@சுஜா கவிதைகள் நன்றி சுஜாக்கா

தோழி பிரஷா said...

@ஜீ... நன்றி ஜீ

தோழி பிரஷா said...

@FARHAN நன்றி சகோதரா

தோழி பிரஷா said...

@சி.கருணாகரசு பாரட்டுக்கு நன்றி

தோழி பிரஷா said...

@! சிவகுமார் ! நன்றி

தோழி பிரஷா said...

@thirumathi bs sridhar நன்றி

தோழி பிரஷா said...

@சந்திரகௌரி நன்றி