Monday, January 10, 2011

Share

கன்னியிவள் வாழ்வில்...

 கன்னியவள் வாழ்க்கையிலே
கானல் நீராய் போனதுவோ
கற்பனைகள் பல கொண்டு
கட்டிச் சென்ற காதல் கோட்டை.
பள்ளி பருவமது துள்ளியே
சென்றுவிடும் என்பதினால்
தள்ளியே வைத்திருந்தால்
தன் காதல் சிந்தனையை.

கல்லூரி காலமதில்
காளையர்கள் கற்கும் வித்தைகளில்
காதலும் ஒன்று என்றதினால் - அது
கற்பதற்கு மட்டுமா? அல்ல
கடந்து செல்ல உதுவுமா?
கலகத்திலே அதை
கடந்தே வந்துவிட்டாள்
கடந்துவந்த பாதைகளில்
கண்ட பல காட்சிகளில்
நின்று அவள் ரசித்ததினால் - தன்
நிகழ்கால வாழ்வினிலே
நிபதந்தைகள் பல கொண்ட
நிச்சயத்தினை தான் எடுத்தால்
கை நிறைய பணம் வேண்டாம்
கள்ளத்தனம் வேண்டாம்
சிந்தனையைச் செயலாக்கி
செலவுகளை சிறிதாக்கி
தன்னிலை தான் அறிந்து
தர்மவழி செல்பவனே
தன் வாழ்க்கைத் துணைவன் என
அவள் தரணியெல்லாம் தேடுகின்றாள்

வெள்ளத்தில் தத்தளித்து
வள்ளத்தில் வந்த இவள்
உள்ள தாகத்திற்காய்
பள்ளத்தில் தேடுகின்றாள்
தெள்ளத் தெளித்த தண்ணீர்
ஆனால் அங்கே
தேங்கியே நின்றின்றது
தப்புத் தண்ணீர் 

66 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃகல்லூரி காலமதில்
காளையர்கள் கற்கும் வித்தைகளில்
காதலும் ஒன்று என்றதினால்ஃஃஃஃஃ

என் போல் குமர்ப் பொடியளை தரங்குறைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

Unknown said...

//ம.தி.சுதா said...
என் போல் குமர்ப் பொடியளை தரங்குறைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..//
me too! :-)

ராஜவம்சம் said...

nice.

Chitra said...

வெள்ளத்தில் தத்தளித்து
வள்ளத்தில் வந்த இவள்
உள்ள தாகத்திற்காய்
பள்ளத்தில் தேடுகின்றாள்
தெள்ளத் தெளித்த தண்ணீர்
ஆனால் அங்கே
தேங்கியே நின்றின்றது
தப்புத் தண்ணீர்

.... very nice.... வார்த்தை பிரயோகம் அருமையாக வந்து இருக்குது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா @ஜீஒருபெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்து கவிதைதானே தம்பி.. இதே ஒரு ஆணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதையாக இருந்தால் பெண்ணை பற்றி கூறாமல்லவா ..... :)

January 10, 2011 1:23 PM

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ராஜவம்சம் நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Chitra நன்றி சித்தராக்கா....

கவி அழகன் said...

ஒரு பெண்ணின் காதல் வாழ்வை சோகத்தை தப்பை அழகாக எழுதிய கவிதை
வாழ்த்துக்கள் தோழி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@யாதவன் நன்றி யாதவன்...

ம.தி.சுதா said...

அக்கா இதெல்லாம் கண்டுக்கக் கூடாது நாங்க இப்படித் தான் கொஞ்ச சேட்டைக்கார பொடியள்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ம.தி.சுதா எனக்கு தெரியுமே சுதா....

ஆமினா said...

//வெள்ளத்தில் தத்தளித்து
வள்ளத்தில் வந்த இவள்
உள்ள தாகத்திற்காய்
பள்ளத்தில் தேடுகின்றாள்//

வார்த்தைகள் ஒவ்வொன்ரும் புகுந்து விளையாடுதுங்க

அன்புடன் மலிக்கா said...

வார்த்தைகளின் விளையாட்டில்
வட்டமிட்டு சுற்றியாடும் றோஜாவே
வரிகளின் வளைவுகளை
வண்ணமிகு ஜாலங்களை
வாழ்த்துகிறாள் உன்னை
வாசித்தவள்..

தோழி பிரோஷா அருமையாக எழுதியிருக்கீங்க.

அன்புடன் தோழி மலிக்கா.

S Maharajan said...

//வெள்ளத்தில் தத்தளித்து
வள்ளத்தில் வந்த இவள்
உள்ள தாகத்திற்காய்
பள்ளத்தில் தேடுகின்றாள்//
.....................
தேங்கியே நின்றின்றது
தப்புத் தண்ணீர் //

அருமையான வரிகள் தோழி!!!!!!!!!!!!!!

karthikkumar said...

good one sister :)

டிலீப் said...

அருமையான கவிகள் பிரஷா

//ம.தி.சுதா said...
ஃஃஃஃஃகல்லூரி காலமதில்
காளையர்கள் கற்கும் வித்தைகளில்
காதலும் ஒன்று என்றதினால்ஃஃஃஃஃ

என் போல் குமர்ப் பொடியளை தரங்குறைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..//

ஹாய்யோ...ஹாய்யோ......
குமர்ப் பொடியனா ??

Unknown said...

நல்ல கவிதை தோழி

ரஹீம் கஸ்ஸாலி said...

super

Arun Prasath said...

ப்ரெசென்ட் சார், இல்ல மேடம்...

Anonymous said...

அருமையாக இருக்கிறது தங்கள் எழுத்துக்கள்...

Unknown said...

வித்தியாசமான வார்த்தைகளை கொண்டு கவிதை எழுதுகிறீர்களே எப்படி?

ஆனந்தி.. said...

//கை நிறைய பணம் வேண்டாம்
கள்ளத்தனம் வேண்டாம்
சிந்தனையைச் செயலாக்கி
செலவுகளை சிறிதாக்கி
தன்னிலை தான் அறிந்து
தர்மவழி செல்பவனே
தன் வாழ்க்கைத் துணைவன் என
அவள் தரணியெல்லாம் தேடுகின்றாள்//

இது பாயிண்ட் ட்டு...நச் :))

(அப்புறம் கண்ணா..என் தோழி உன் ப்ளாக் பார்த்துட்டு ரொம்ப அழகாய் உன் ப்ளாக் இருப்பதை சொன்னாள்..அழகான templete ..கவிதை வரிகளுக்கு பொருத்தமான படங்கள் சுத்தி..அந்த கருப்பு பின்னணி...சிவப்பு கோலங்கள்..சோ..அவள் வாழ்த்துகளை உனக்கு தெரிய படுத்துகிறேன்...)

சக்தி கல்வி மையம் said...

எப்ப பதிவு வருதுன்னு தெரியமாட்டேங்குது..
mail connectகொடுங்க...
கவிதை அருமை..

சுஜா கவிதைகள் said...

அருமையான கவிதை பிரஷா .......

சிவரதி said...

கடந்த காலம் மீண்டும் வருவதில்லை
கனிந்த பழம் மீண்டும் காயாவதில்லை
காலத்தின் பாதையிலே-நம்
கால்களின் பயணம்-இது
கன்னியவள் முடிவல்ல
கடவுள் அமைத்த விதி

ஷஹன்ஷா said...

அருமையான கவிதை அக்கா......

ஃஃஃவெள்ளத்தில் தத்தளித்து
வள்ளத்தில் வந்த இவள்
உள்ள தாகத்திற்காய்
பள்ளத்தில் தேடுகின்றாள்
தெள்ளத் தெளித்த தண்ணீர்
ஆனால் அங்கே
தேங்கியே நின்றின்றது
தப்புத் தண்ணீர் ஃஃஃஃ
..............ரசித்தேன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆமினா நன்றி ஆமினா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@அன்புடன் மலிக்கா மிக்க நன்றி மலிக்கா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@S Maharajan மிக்க நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@karthikkumar நன்றி சகோதரா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@டிலீப் நன்றி டிலீப்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜெ.ஜெ நன்றி தோழி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பதிவுலகில் பாபு நன்றி பாபு...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ரஹீம் கஸாலி நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Arun Prasath வருகைகக்கு நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@virtualworldofme மிக்க நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இரவு வானம் எல்லாம் முயற்சி தான் சகோதரா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஆனந்தி.. மிக்க நன்றி அக்கா... எனது சார்பாக உங்கள் நண்பிக்கு நன்றி கூறிவிடுங்கள் அக்கா....

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sakthistudycentre.blogspot.com விரைவில் mail connect கொடுக்கின்றேன்..நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சுஜா கவிதைகள் நன்றி நண்பி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@sivarathy உண்மை..நன்றி தோழி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@“நிலவின்” ஜனகன் மிக்க நன்றி ஜனகன்..

Anonymous said...

nice

Philosophy Prabhakaran said...

உங்களுடைய விருதுக்கு மிக்க நன்றி பிரஷா... அன்றே பார்த்துவிட்டேன் எனினும் பின்னூட்டம் போடா நேரம் வாய்க்கவில்லை...

Paul said...

ஹ்ம்ம்.. நன்று :)

logu.. said...

nallarukku..

picture athavida super..

'பரிவை' சே.குமார் said...

வார்த்தை பிரயோகம் அருமையாக இருக்குது. Super Kavithai.

Unknown said...

தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

AshIQ said...

கவிதையில் இயம்பிய கருத்து நன்று
தெளிவான தேடல்..தேவையான பாடம்
உங்கள் நட்பு மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்
ஆகிவிடாமல் பாத்துகோங்க.
இப்பெல்லாம்
நல்ல நட்புக்கு ஏக கிராக்கியா இருக்கு.
நட்பு நட்பு என்று எதிர்பார்த்து
மன உளைச்சல் ஆனதுதான் மிச்சம்.
வெகு சில இடங்களைத்தவிர
வேறெங்குமே இல்லீங்க.
Have Great Life
-ஆஷிக்

அன்புடன் நான் said...

கவிதை தெளிந்த நீரோட்டமாய்......

பாராட்டுக்கள்.

உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Harini Resh said...

வெள்ளத்தில் தத்தளித்து
//வள்ளத்தில் வந்த இவள்
உள்ள தாகத்திற்காய்
பள்ளத்தில் தேடுகின்றாள்
தெள்ளத் தெளித்த தண்ணீர்
ஆனால் அங்கே
தேங்கியே நின்றின்றது
தப்புத் தண்ணீர் //

அருமை பாராட்டுக்கள்.

r.v.saravanan said...

நல்ல கவிதை தோழி

ஹேமா said...

வார்த்தைக் கோர்வையும் அதன் உணர்வும் கவிதையை மெருகூட்டுது பிரஷா.
வாழ்த்துகள் தோழி !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@tharsha நன்றி தர்ஷா...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Philosophy Prabhakaran பறவாயில்லை.. நன்றி பிரபாகர்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பால் [Paul] நன்றி பால்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@logu.. நன்றி லோகு...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சே.குமார் நன்றி குமார்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@பாரத்... பாரதி... நினைவு கூறுவோம்.. நன்றி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@AshIQ நிச்சயமாக... மிக்க நன்றி சகோ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சி. கருணாகரசு மிக்க நன்றி உங்களுக்கும் உரித்தாகட்டும்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Harini Nathan நன்றி கரினி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@r.v.saravanan நன்றி சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றி அக்கா...

S.Vaighundan said...

Amazing words... wonderful, how u can write like this...., my best wishes... always..........

சாமக்கோடங்கி said...

ரசிக்க வைத்த கவிதை..!!

நன்று சகோதரி..