Thursday, August 5, 2010

Share

காதலின் மாயம்

 காதல்..காதல்..காதல்
மந்திரவார்த்தைகள் கொண்டு
மயக்குகின்றதா இந்த மூன்றெழுத்து
வார்த்தை....

காதல் கொண்டேன்
பயித்தியம் ஆனேன்...

உன்னைக் கண்டேன்
இதயத்தை இழந்தேன்...

கண்டுபழகியவை எல்லாம்
புதிதாய் தோன்ற புதியவை எல்லாம்
பழையதாய் தோன்றுகிறது...

வானத்தில் போட்டி போட்டுப்
பறக்கின்றேன் உன்னை பிடிப்பதற்காய்
கையில் சிக்காத காற்றாய்
பறந்து செல்கின்றாய்...

உளரும் வார்த்தைகள் அனைத்தும்
கவிதையாக மாற
கவிதைகள் அனைத்தும்
உளரல்களாக மாறுகின்றது

நீயின்றி நாட்கள்
முற்றுப் பெற மறுக்கின்றன..

அம்மாவாசையாய் இருந்த
வாழ்வை பெளர்ணமியாக்கி
கண்சிமிட்டுகின்றாய் மின்னும்
நட்சத்திரமாய்....

இருட்டைக் கண்டு மிரண்டவள்
இருட்டை ரசிக்கின்றேன்...

பகலில் உன் நிஜத்தோடு வாழ்கின்றேன்
இரவில் உன் நிழலோடு வாழ்கின்றேன்...

உன்னோடு இருக்கும் நேரங்களில்
சந்தோஷம் கை நீட்டி என்னை அரவணைக்க
நீயற்ற தனிமை என்னை பயமுறுத்துகின்றது...

என் காதலை கண்டு கொண்டேன் உன்னிடம்
உன் காதலை கண்டு கொண்டாயா என்னிடம்..??

கேள்விக்குறியுடன் ஆரம்பித்த என் காதலை
முடித்து வைப்பாயா முற்றுப்புள்ளி வைத்து...

2 comments:

p said...

கவிதை பிடித்திருக்கிறது.... :-)
தொடருங்கள்.

p said...

திரும்பி பாத்தபோது தான் தெரிந்தது நான் மட்டுமல்ல நீயும் என்னை காதலித்திருக்கிறாயென‌....
அற்புதம்.. :-)