Wednesday, February 22, 2012

Share

வெண்ணிலவே!


வெண்ணிலவே!
உன்னை பார்க்க
என் விழிகள் காத்திருக்கின்றன.
அதனை அறிந்திருந்தும்
மறைந்து மறைந்து
செல்லும் மர்ம
குணத்தை என்னால்
தாக்க முடியவில்லை.

உன்னை பார்த்த பின்பு
தான் என்னுள்
எத்தனை மாற்றம்.
சுவாசமே
உன்னால் நடைபெறுவதாக
உணர்கிறேன்..

காதல்
கணை தொடுக்கும் - உன்
காந்த விழிகளை கண்டவுடன்
கவிதைகளில் வளர்கிறாய்
பகல் நேரத்திலும்..

நீ சிந்தும்
முத்து சிரிப்புக்களால்
சிறை பிடிக்க
நினைக்கிறேன் உன்னை..
உன் கடைக் கண் பார்வையின்றி
என் அணுவும் 
அசைய மறுக்கிறது.

அழகிய முகம்
அதிலொரு மச்சம்
சீரான பல் வரிசை
சிவந்த உன் உதடுகள்
இயற்கையின் அதிசயம் நீ!
உண்மையில்
நான் கண்ட
பேரழகியும் நீயே.
அதனால் தான்
என் இதயராணி ஆனாயோ?

வெண்ணிலவே! 
பல லட்ச நட்சத்திர 
தோழிகள் இருந்தும்
நீ மட்டும் 
தனித்திருக்கும் நிலை
எனக்கு பிடிக்கவில்லை.
எல்லைகள் அற்ற
வான வெளியில்
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்
ஆசையாய் கேட்கிறேன்
அமாவாசையான என்னுடன்
கைகோர்த்து வலம் வரும்
வரம் தருவாயா?

14 comments:

Unknown said...

வெண்ணிலவே!
பல லட்ச நட்சத்திர
தோழிகள் இருந்தும்
நீ மட்டும்
தனித்திருக்கும் நிலை
எனக்கு பிடிக்கவில்லை.

nice words

மகேந்திரன் said...

நிலவிடம் கேட்ட வரமொன்று பலித்திட
வண்ணநிலவு வாசல் வந்திடும் சகோதரி....

Anonymous said...

//காதல்
கணை தொடுக்கும் - உன்
காந்த விழிகளை கண்டவுடன்
கவிதைகளில் வளர்கிறாய்
பகல் நேரத்திலும்.//
nice

Prakash said...

It is very nice. your thinking are so quite.

இராஜராஜேஸ்வரி said...

அமாவாசையான என்னுடன்
கைகோர்த்து வலம் வரும்
வரம் தருவாயா?

முப்பது நாளும் பௌர்ணமியாய் ஒளிரவைக்கும் கவிதைக்கு பாராட்டுக்கள்..

விச்சு said...

உண்மையான நிலவிடம்தான் இந்த வரம் கேட்கிறீர்களா? நிலவின் தனிமை பிடிக்கவில்லை.நல்ல கற்பனை.

Yaathoramani.blogspot.com said...

எல்லைகள் அற்ற
வான வெளியில்
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம்
ஆசையாய் கேட்கிறேன்
அமாவாசையான என்னுடன்
கைகோர்த்து வலம் வரும்
வரம் தருவாயா?

அருமையான கற்பனை
அருமையான கவிதை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நிலாமதி said...

நிலவுக் கவிதை அழகோ அழகு பாராட்டுக்கள்

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

"அமாவசையான என்னுடன் " அழகான வரிகள் .கலங்குங்கள் பிரஷா வாழ்த்துக்கள்

arasan said...

ஆசைகளை கோர்க்க எடுத்துக்கொண்ட வரிகள் பிரமாதம் .. வாழ்த்துக்கள் தோழி

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான கவிதை !

கலையன்பன் said...

சொற் பிரயோகங்கள் அருமை.

குணசேகரன்... said...

superb imagination...keep it up

Murugeswari Rajavel said...

சிறப்பான கவிதை ப்ரஷா!உங்கள் வலைப்பூ வெகு அழகு.