Sunday, December 11, 2011

Share

மனசு....



திசைகள் இன்றி
திண்டாடிய மனம் ஒன்று
பாவை அவள்
பார்வை தீண்டலினால் 
பக்குவமானது அன்று...

இதய கூட்டினை உடைத்து - அதில்
அவளை தான் இருத்தி
நேசிக்கத் தொடங்கியது அன்று..
படிப் படிப்யாக - அது
இமயமாக வளர்த்து
காதல் என்னும் போர்வையில்
ஆட்சி செய்கின்றது இன்று...

உதிரத்தில் கலந்திட்ட அவள்
உயிருள்ள வரை
உயிர்நாடியாய் தன்னுள்
என்றும் இருப்பாள் என்னும் 
நம்பிக்கையில் காலம் நீள்கிறது.

நினைவெல்லாம அவளானதால்
நிம்மதியின்றி தவிக்கின்றது தினமும்
யாரும் அறியாமல் தன்னுள்
புகுந்து அவள் புரியும்
சிந்து விளையாட்டக்களால்
சித்தம் கலக்கி நிற்கின்றது மனசு...

இருளின் கருமையில்
இமைகளின் ஓரம்
துளிரும் கண்ணீர் துளியில்
சுகமான அவள் நினைவுகள்
ஆறுதல்படுத்துகின்றது
மூன்றாவது கையாய்.....

பெண்ணே!
உயிர் தொலைந்தது உன்னிடத்தில்
இருந்தும்..
இதயத்தில் உருவாக காதலை
உனக்காக கவிதையாய்
எனக்குள் மெளனமாக்கிறேன்...

7 comments:

Yaathoramani.blogspot.com said...

காதல் கொண்ட மனதின் நிலையை மிக மிக அழகாக
உணர்த்திப்போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

நினைவெல்லாம அவளானதால்
நிம்மதியின்றி தவிக்கின்றது தினமும்
யாரும் அறியாமல் தன்னுள்
புகுந்து அவள் புரியும்
சிந்து விளையாட்டக்களால்
சித்தம் கலக்கி நிற்கின்றது மனசு..//

ஆஹா மிகவும் ரசித்தேன்...!!!

ஹேமா said...

காதலின் தவிப்பை அழகாக வெளிப்படுத்துகிறீர்கள் பிரஷா !

கவி அழகன் said...

அழகு வரிகள்

ad said...

உங்களால மட்டும் எப்பிடி முடியுது?
சூப்பர்.