Saturday, November 19, 2011

Share

கண்ணீர்..




மனித மனங்களின்
தாரக மந்திரம்
கண்ணீர்..

கடல் என நீண்டு செல்லும்
நினைவலைகளில்
சிக்கித் தவிக்கும் உள்ளங்களின்
உண்மையான நட்பு
கண்ணீர்...

வலிகளை மறக்க செய்ய,
கடவுளின் அன்பு பரிசு,
கண்களை சுத்தப்படுத்தி
இதயங்களை இதமாக்கி
பாவங்களின் மன்னிப்பாய்
கண்ணீர்...

இரவின் மடியில்
தனிமையின் பிடியில்
படுக்கையறையில்
தலையணையுடன்
சண்டையிட்டு - இளம்
பெண்கள் பேசும்
மெளன பாஷை
கண்ணீர்..

பிறப்பிலும் கண்ணீர் 
மனித இறப்பிலும் கண்ணீர்
நட்பிலும் கண்ணீர்
காதலிலும் கண்ணீர்
வலியிலும் கண்ணீர்
சந்தோசத்திலும் கண்ணீர்
இழப்பிலும் கண்ணீர்
ஒன்றை பெறுவதிலும் கண்ணீர்
கண்ணீர்!!!
இன்றைய மனித வாழ்வில்
உயிர் காவியம்....


17 comments:

கவி அழகன் said...

இரவின் மடியில்
தனிமையின் பிடியில்
படுக்கையறையில்
தலையணையுடன்
சண்டையிட்டு - இளம்
பெண்கள் பேசும்
மெளன பாஷை
கண்ணீர்..

சூப்பர் வரிகள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கவிதையிலும் கண்ணீர் .கண்ணீரிலும் கவிதை .

arasan said...

kanner thaan மனிதனின் சிறந்த மருந்து... கவிதைக்கு வாழ்த்துக்கள்

பனிவிழும்இரவு said...

கடல் என நீண்டு செல்லும்
நினைவலைகளில்
சிக்கித் தவிக்கும் உள்ளங்களின்
உண்மையான நட்பு
கண்ணீர்...

வலிகளை மறக்க செய்ய,
கடவுளின் அன்பு பரிசு
கண்களை சுத்தப்படுத்தி
இதயங்களை இதமாக்கி
பாவங்களின் மன்னிப்பாய்
கண்ணீர்...

Unknown said...

இரவின் மடியில்
தனிமையின் பிடியில்
படுக்கையறையில்
தலையணையுடன்
சண்டையிட்டு - இளம்
பெண்கள் பேசும்
மெளன பாஷை
கண்ணீர்..///

கவிதை நன்று.

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html


Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Unknown said...

நல்ல கவிதைங்க.. வாழ்த்துக்கள்..

அஹ்ஸன் said...

ஹ்ம்ம் கண்ணீர் பற்றிய அழகான கவிதை .. வாழ்த்துக்கள்

Unknown said...

கண்ணீர் கவிதையை பார்க்க கண்களில் கண்ணீர் வருகிறது

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

கண்ணீர் நன்று. பாரட்டுக்கள்

SURYAJEEVA said...

கண்ணீர் கவிதை அருமை... கடவுள் தந்த வலிக்கு, கடவுளே பரிசும் தருவதும் இடிக்கிறது

ச. ராமானுசம் said...

Good concept !!!

Thoughts are placed in the poem randomly.

Need to be further organized well.

With Luv,
Rams

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! அருமையான பதிவு! தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

A.M.Askar said...

உங்கள் கண்ணீர் கவிதை தனித்துவமாக இருக்கிறது வாழ்த்துக்கள் தொடர்ந்தும் இன்னும் இன்னும் எழுதுங்கள்...
என்றும் இவன்.
ஏ.எம்.அஸ்கர்

நிலாமதி said...

welwritten. congrats.

சுஜா கவிதைகள் said...

கண்ணீர் இல்லையென்றால் மனதின் சுமை இறங்காது .....

nadarasa sritharan said...

கண்ணீர் இதயத்தின்
பாஷை......Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥ .Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ