தாயே!!!
சிசுவான என்னை
சிறை பிடிக்கின்றது
ஆயிரம் எண்ணங்கள்
எதிர்காலத்தை எண்ணி...
அன்னையே!
என்முகம் அறிந்திருக்க
உனக்கு வாய்ப்பில்லை
உன் ஒவ்வொரு அசைவிலும்
உன்னை வடிவமைகிறேன்.
உன் உணர்வுகளின் துடிப்பில்
உன்னை புரிகிறேன்
உன் மூச்சின் ஒலியின்
வெளியுலகின் நிலையை உணர்கிறேன்
சொர்க்கமான
உன் குட்டி வயிற்றில்
செழுமையாய் வாழுகிறேன்
உன் வாய் மூணு மூணுக்கும்
இசை கேட்டே
நிம்மதியாய் உறங்குகின்றேன்.
உன் கண்களில்
கண்ணீர் குளமாகும் போது
நானும் அழுகிறேன்.
உன்னில் சிரிப்பனை காண
எட்டி உதைகிறேன்
உன் முகம் மலர்கிறது
இவற்றை நானும் ரசிக்கின்றேன்
உன் அசைவுகளின் மூலம்..
இருந்தும்
நாளைய தினம்
நான் வெளி உலகம்
காண வேண்டிய நிர்ப்பந்தம்
ஆகையால்,
அச்சம் என்னை அரவணைக்கின்றது
நாளைய என்
எதிர்காலத்தை எண்ணி..
11 comments:
arumai tholi!
அருமை
நல்ல கவிதை,எதிகாலம் எண்ணி வருத்தப்படும் கரு குழந்தைக்கு தைரியம் சொல்லுங்கள்.
உன்னில் சிரிப்பனை காண
எட்டி உதைகிறேன்
உன் முகம் மலர்கிறது
இவற்றை நானும் ரசிக்கின்றேன்
உன் அசைவுகளின் மூலம்.
மிகவும் அருமையான வரிகள் பாரட்டுக்கள்
தாய்மையின் அரவணைப்பு என்றுமே சுகம்தான், அருமையான வரிகள் கலக்கல்...!!!!
சிசுவின் கற்பனையாக உங்கள் எண்ணங்கள். சபாஷ். வெளி உலகிற்கு வர இருக்கும் குழந்தைக்கு “அச்சம் தவிர்” என்று ஊக்கமூட்டுங்கள்.
நளினமான வரிகளில் நெகிழ்வான கவிதை .. வாழ்த்துக்கள்
தாய்மைக்கவிதைகள் எப்போதும் அருமைதான் தோழி....
நல்ல கவிதை வாழ்த்துக்கள்..தோழி உங்கள் கவிதையில் எழுத்துக்களை சரி பார்த்துக்கொள்ளுங்கள்..
அழகிய சிசு.சிசுவின் பேச்சும் அழகு.
Good & different thought !!!
Post a Comment