Monday, November 15, 2010

Share

எல்லாம் கனவாக போச்சு.......

 அன்றொரு நாள்
பூத்துக் குலுக்கும்
பூங்காவனத்தில்
நான் மட்டும் தனிமையில்
என் நினைவலைகளை
அவிழ்ந்து விட்டு
பெரு மூச்சோடு நான்...

எங்கும் நிசப்தம்
திடீரென...
யாரோ என்னை
அழைப்பது போல
நினைவுகளுக்கு ஓய்வு கொடுத்து
கூப்பிட்ட ஓசையை நோக்கி
பார்வைச் செலுத்தினேன்
என் கண் முன்
ஒரு அழகான தேவதை
ஒரு கணம் சொக்கி தான் போனேன்
எனக்கு இப்படி ஒரு அதிஷ்டமா...

மொட்டொன்று அவிழ்ந்து
இதழ் விரிப்பது போல
கட்டழகி உதட்டில்
புன்னகைகளை சிந்துகின்றாள்
என் பெயர் சொல்லி அழைத்து
உறைந்து போய் இருந்த என்னை
தான் அருகில் இருப்பதை
தெரியப்படுத்துகின்றாள்.

ஏதோ நானும் சுதாகரித்துக் கொண்டு
என் வினாவை தொடக்கும் முன்- அவளோ
தூறலின் பின் பெய்யும்
பெரும் மழையென
தன் மனதில் உள்ளவைகளை
கொட்டித் தீர்க்கின்றாள்.


'அவள் இதழோர புன்னகை
குறு குறு பார்வை
படபடக்கும் உன் இதயம்
இவற்றுக்கு முன்னால்
பறந்து தான் போகின்றேன்
பட்டாம் பூச்சியென"
என் கற்பனைகள்...

அவளும் காதலலை சொல்ல
நானும் அதனை ஆமோதிக்க
பரவசமாக நகர்கின்றது நாளிகைகள்
நேரங்களும் தேய்கின்றது
நெருக்கமோ அதிகரிக்கின்றது.
அவளோ நாணத்தில்
நானோ மயக்கத்தில்
சொர்க்கத்தை பிரசவிக்கும்
தருணத்தில்..
யாரோ என்னை 
தட்டுவதுபோல் உணர்வு
திடுக்கிட்டு விழிக்கின்றேன்
எல்லாம் கனவாக போச்சு..

18 comments:

பிரவின்குமார் said...

மிகவும் அருமையாக உள்ளது கவிதை.

rockzsrajesh said...

another rose from you
CUTE KAVITHAI . . .

நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய சாதி = எய்ட்ஸ் - 1 பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .
http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

பணிவுடன் ,
ராக்ஸ் . . . .

வெறும்பய said...

nallaayirukku sis..

அன்பரசன் said...

அட கனவா???

philosophy prabhakaran said...

ஏறுனா போதை எல்லாம் இறங்கிடுச்சு....

சிவா said...

நல்லா இருக்கு கவிதை

logu.. said...

\\எல்லாம் கனவாக போச்சு.. \\

Ha..Ha..

Kanavilum..manasilium mattume namakku pidithathai kanavo..ninaikavo mudium.

Super.

logu.. said...

Headingla irukum kavithai rombave azhaga irukku..

Athigalai thooral pola.

kavitha said...

கனவின் கற்பனைகள் அருமை

பிரபு . எம் said...

ரசனையான கனவு :)
இப்படியெல்லாம் கனவு வந்தால் விழிப்பை ரத்து செய்ய வேண்டியதுதான்...

அழகி said...

வ​டை ​போச்​சே......

ஆனந்தி.. said...

செம ஆர்வமா படிச்சுட்டே வந்தேன்...அட கவிதை கனவாய் முடிஞ்சுருசே..அட..இது தான் இந்த கவிதையின் சுவாரஸ்யம்..அடுத்து நம்மை யோசிக்க வைக்கும் யுத்தி இந்த கவிதையில் இருந்துச்சு.:))..வாழ்த்துக்கள்!!

NIZAMUDEEN said...

கவிதைக்காரன்(ரி) இன்னும் கனவு முழுசாய்க்
கண்டிருந்தால், இன்னும் என்ன நடந்தது என்று
இன்னும் கவிதை வந்திருக்குமே, அடடா, கவிதை
போச்சே!

rk guru said...

கவிதை அருமை .........வாழ்த்துகள்

ம.தி.சுதா said...

அக்கா நான் எப்போதோ சொன்னது நினைவிருக்க உங்களுக்கு கனவு கூட கவிதை தானென்று.. ஆனால் இவ்வளவு அருமையாக வருமென்று நினைக்கல
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
mathisutha.blogspot.com

பிரஷா said...

@பிரவின்குமார்
மிக்க நன்றி நண்பா....

@rockzsrajesh
நன்றி நண்பா... உங்கள் பதிவை படித்தேன்...

@வெறும்பய
நன்றி சகோதரா...

@அன்பரசன்
ம்ம்ம்... வருகைக்கு நன்றி நண்பா...

@philosophy prabhakaran
என்ன செய்வது நண்பா.. எல்லாம் கனவில தானே நடக்குது...வருகைக்கு நன்றி நண்பா....

@சிவா
மிக்க நன்றி

@logu..
மிக்க மிக்க நன்றி நண்பா...

@kavitha
நன்றி தோழி

@பிரபு . எம்
நன்றி நண்பா..

@அழகி
வருகைக்கு நன்றி

@ஆனந்தி..
வருகை்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி...

@NIZAMUDEEN
முழுதாய் கான முயற்சிக்கிறேன்... வருகைக்கு நன்றி

@rk guru
நன்றி நண்பரே.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் என் தளம் வந்துள்ளீரகள்...வருகைக்கு நன்றிஈ

@ம.தி.சுதா
மிக்க மிக்க நன்றி தம்பி...

Kalidoss said...

நல்ல கனவுங்க.இதே மாதிரி கனவு வர்றதற்கு என்ன பண்ணனும்.கொஞ்சம் யோசனை சொல்லுங்க சகோதரி .

sivarathy said...

திடுக்கிட்டு விழிக்கின்றேன்
எல்லாம் கனவாக போச்சு..
உங்கள் கற்பனை நல்லயிருக்கிறது சகோதர