Friday, November 11, 2016

Share

புன்னகைக்கு பஞ்சமிங்கு...!

என்னையறியாது
ஏதோ  ஒரு ஏக்கம்..!!!
ஏழ்மையாய் என் உள்ளம்
ஏதுமறியாது தவிக்கிறது...!!!
ஏக்கமது இறக்கிபிடிக்கிறது
உள்ளமது உறங்க மறுக்கிறது..!!
விடைதேடி வினவுகின்றேன் 
விடைதர யாரிங்கு....??

கண்ணீருக்கு கருவுண்டு
கருத்துடன் கண்டுவிட்டால்
காலமது கனித்திடும்
காதலும் இனித்திடும்-இருந்தும்
வினவிடவும் மனமும் இல்லை
விடைதேட முயலவில்லை..!!

புரிந்துணர்வு குறைந்ததினால்
புன்னகைக்கு பஞ்சமிங்கு...!
இரக்க குணம் வற்றியதால்
இரணியனாய் பலர் உள்ளம்..!!
நீரில்லா குளத்தினிலே 
இரைதேடி  அலைகின்றேன்..!!

விடைதேடி அலைகின்றேன்
கிடைக்குமென்ற நம்பிக்கையில்..!!

tholi Pirasha
11.11.2016

2 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை....

ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி... தங்களை மீண்டும் இணையத்தில் பார்ப்பதில்...

தொடர்ந்து எழுதுங்க...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மிக்க நன்றிகள்
இயந்திர வாழ்வினில்
இணையத்துக்கு ஒதுக்கிட
இயலாது போய்விடுகின்றது.