மனந்தனிலே காதலாய் மலர்ந்தாள்
மலர்களிலே முல்லையாய் மணந்தாள்
நினைவினிலே தேன்சுவையாய் இனித்தாள்
நீங்காமல் உள்ளமெல்லாம் நிறைந்தாள்
கனவினிலே கலர் கலராய் பறந்தாள்
கண்களிலே தன்னுருவம் வரைந்தாள
செவிகளிலே தமிழிசையாய் இசைத்தாள்
செவ்விதழை தாமரையாய் விரித்தாள்
முகம்தனையே திரைபோட்டு மறைத்தாள்
முத்தமிழால் கவிமழை பொழிந்தாள்
எனக்கெனவே இவ்வுலகில் உதித்தாள்
என்னுயிரில் சரிபாதி எடுத்தாள்
அவனியிலே மறுபிறவி இருந்தால்
அவளுடனே வாழும் வரம் அளித்தாள்
உள்ளத்திலே அவளெண்ணம் அளித்த
சுகத்தால்
உலைக்கும் துயரமெல்லாம் மனதினின்றும்
கழித்தாள்
வாழ்வினிலே நானென்றும் மணந்தால்
வஞ்சியன்றி வேறோருத்தி கிடையாள்.
மலர்களிலே முல்லையாய் மணந்தாள்
நினைவினிலே தேன்சுவையாய் இனித்தாள்
நீங்காமல் உள்ளமெல்லாம் நிறைந்தாள்
கனவினிலே கலர் கலராய் பறந்தாள்
கண்களிலே தன்னுருவம் வரைந்தாள
செவிகளிலே தமிழிசையாய் இசைத்தாள்
செவ்விதழை தாமரையாய் விரித்தாள்
முகம்தனையே திரைபோட்டு மறைத்தாள்
முத்தமிழால் கவிமழை பொழிந்தாள்
எனக்கெனவே இவ்வுலகில் உதித்தாள்
என்னுயிரில் சரிபாதி எடுத்தாள்
அவனியிலே மறுபிறவி இருந்தால்
அவளுடனே வாழும் வரம் அளித்தாள்
உள்ளத்திலே அவளெண்ணம் அளித்த
சுகத்தால்
உலைக்கும் துயரமெல்லாம் மனதினின்றும்
கழித்தாள்
வாழ்வினிலே நானென்றும் மணந்தால்
வஞ்சியன்றி வேறோருத்தி கிடையாள்.
2 comments:
//கனவினிலே கலர் கலராய் பறந்தாள்
கண்களிலே தன்னுருவம் வரைந்தாள
செவிகளிலே தமிழிசையாய் இசைத்தாள்
செவ்விதழை தாமரையாய் விரித்தாள்
முகம்தனையே திரைபோட்டு மறைத்தாள்//
அவளையே மணக்க வாழ்த்துக்கிறேன். கவிதை அருமை.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மதுரை சரவணன் :-)
Post a Comment