உண்மை உறவுகள்
உலகத்தில் எத்தனை
உள்ளம் அறியாமல்
உருகுதே நெஞ்சம்
கருவினிலே எனை தாங்கி
உதிரத்தை எனதாக்கியவள்
உறவாடி மகிழ முன்னே
உலகத்தை நீந்து விட்டாள்
மடி தந்து பசியாற்றி
பாசத்தை பகிர்ந்திட்ட
வாழ்வின் வழிகாட்டி - பாதி
வாழியினிலே ஏனோ தவிக்க விட்டு
தாயிடம் தானும் சென்றதினால்...
பள்ளித் தோழமையால்
பசுமைதனை உணர்கையில்
பருவகாலம் முடிந்தமையால்
பல திசையில் பறந்து சென்றோர்
பாசத்திலும் வறுமை..
தாங்கிட வேண்டிய நேரத்தில்
தவிக்க விட்டு சென்றதினால்
ஏங்கிய உள்ளமிது
ஏற்க மறுக்குது
அன்புதனை உறவாக....
59 comments:
உள்ளுணர்வுகள் பேசும் வரிகள் சகோ அருமை மிகவும்
அசத்தலான உள்ளுணர்வு கவிதை, வழக்கம் போல சூப்பப்....!!!
பிரிவென்னும் உணர்வை
வரிகளில் காண்கிறேன்
கருவினிலே எனை தாங்கி
உதிரத்தை எனதாக்கியவள்
உறவாடி மகிழ முன்னே
உலகத்தை நீந்து விட்டாள்
தாய்மையின் இழப்பு தாங்கமுடியாது அது வரிகளில் தெரிகிறது , கண்கள் கனக்குறது
--
Nice!
அன்பு உள்ளடங்கியதாக
உறவுகள் இல்லாது போனதனால்
வெறுத்துப்போன மனது
அன்பைக்கூட உறவாக
ஏற்க மறுக்கிற அவல நிலையை
அழகாகச் சொல்லிப்போகிறது
உங்கள் கவிதை
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
..
தாங்கிட வேண்டிய நேரத்தில்
தவிக்க விட்டு சென்றதினால்
ஏங்கிய உள்ளமிது
ஏற்க மறுக்குது
அன்புதனை உறவாக....
அன்புதான் உறவு.
நான் முன்னரே சொன்னேனே உணர்வுகளை கவிதையாக கொண்டுவர உங்களால் எப்படி முடிகின்றது என்று
ஏக்கங்கள் நிறைந்த கவிதை..
அருமையானதொரு கவி அக்கா
உங்களது ரெம்பிளேட் கண்குத்தும்படியாக உள்ளது.. தொடர்ந்து படிக்கமுடியவில்லை.. மென்மையான ரெம்பிளேட் ஒன்றை தெரிவு செய்யலாமே
மீண்டும் ஒரு உணர்வுபூர்வமான கவியுடன் ,
ஒரு விதத்தில் பார்த்தால் ஒவ்வொரு உறவுகளும் எதோ ஒரு இடத்தில் நம்மை கடந்து சென்றுவிடும் இல்லை நாம் கடந்து சென்றுவிடுவோம்...நல்ல கவிதை சகோதரி ...
பல திசையில் பறந்து சென்றோர்
பாசத்திலும் வறுமை..
தாங்கிட வேண்டிய நேரத்தில்
தவிக்க விட்டு சென்றதினால்
ஏங்கிய உள்ளமிது
ஏற்க மறுக்குது
அன்புதனை உறவாக....
என்னமோ கனத்து போகுது உங்கள் கவிதை உணர்வின் ஆழம் அதிகமோ கவிதையில் நல்ல வார்த்தைகள் வலியால் இணைந்து கவிதை ஆனதோ தோழியே , இணைத்த இரும்பு ஜன்னல் அருமை (கவிதை ) வாழ்த்துக்கள்
//தாங்கிட வேண்டிய நேரத்தில்
தவிக்க விட்டு சென்றதினால்//
இதுதான் நிதர்சனமான வரி இன்றைய அனைவரது நிலையிலும் இதுவே வேதனையான விடயமாகிவிட்டது
வாழ்த்துகள் தோழி
உங்க கவிதை பல விஷயத்தை சொன்னாலும் அதில் இருக்கும் தனிமை எனும் விஷயம் கொடுமை சகோ!
இருக்கும்போது மதிக்காத நேசிக்காத உறவுகள் இறந்த பின் தான் நேசிக்கத்தூண்டும்
நல்ல கவிதை.
//பாசத்திலும் வறுமை..//
அருமையான சொற்பிரயோகம்..
பிரிந்த உறவுகள்
சுடும் தனிமை
உணர்வுகளை சுமந்த வரிகள் தோழி
nalla சமூக எண்ணம் ..
வாய்வுக்கு என்ன செய்யலாம்??? ஹி..ஹி..ஹி
அதையும் சொல்லுங்கப்பா..
http://zenguna.blogspot.com
////பாசத்திலும் வறுமை.////
உண்மை தான் வரிகள் அருமை...
//தாங்கிட வேண்டிய நேரத்தில்
தவிக்க விட்டு சென்றதினால்
ஏங்கிய உள்ளமிது
ஏற்க மறுக்குது
அன்புதனை உறவாக....//அசத்தலான உள்ளுணர்வு கவிதை......
உணர்வுகளை உள்ளடக்கிய விதம் அருமை.
நிரந்தரமில்லா இவ்வுலகில் நிரந்தரத்தைதேடும் நம்மனங்கள்..
http://niroodai.blogspot.com/2011/05/blog-post_31.html
@தினேஷ்குமார்நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் வந்துள்ளீர்கள் வாருங்கள் சகோ..
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
நல்ல கவிதை;உணர்வுகளை அழகான வார்த்தைகளால் அடுக்கியிருக்கிறீர்கள்.
@MANO நாஞ்சில் மனோ தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோ சார்
@யாதவன் யாதவன் உங்கள் தொடர் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துக்கும் நன்றி யாதவன்
@ஜீ...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஜீ..
@Ramani வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜயா
@Lakshmi தொடர் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி லக்ஷ்மி அம்மா
@Jana வலியை உணரமுடிந்தால் வரிகள் தானாக வரும் சகோதரா... தொடர்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
# கவிதை வீதி # சௌந்தர்
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
@மதுரன் நன்றி மதுரன்..
@மதுரன் உங்கள் கருத்தை பரிசீலனை செய்கின்றேன் மதுரன். கருத்துக்கு நன்றி
@கந்தசாமி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
@Rathnavel உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
@balaவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ
@நேசமுடன் ஹாசிம் மிக்க நன்றி நண்பரே..
@விக்கி உலகம் தனிமையே பல பாதிப்புக்களை கொண்டு வருகின்றன வாழ்வில்... அதனாலே தனிமை என்னும் சொல் முதன்மையெடுத்து நிற்கின்றது கவிகளில்.. நன்றி சகோ
அழுத்தமான உணர்வை உணர்த்தும் வரிகள் பா..
இந்த வரிகள்.. ரொம்ப பிடிச்சிருக்குங்க..
//தாங்கிட வேண்டிய நேரத்தில்
தவிக்க விட்டு சென்றதினால்
ஏங்கிய உள்ளமிது
ஏற்க மறுக்குது
அன்புதனை உறவாக....//
அருமையா எழுதுறீங்க.!
உணர்வுகள் வரிகளில்
பாராட்டுக்கள் தோழி
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
பாசம்கூட வறுமைக்குள் சிக்குகிறது.
சில வரிகள் அழவைக்கிறது தோழி !
@சி.பி.செந்தில்குமார் நீங்கள் சொல்வது போல் பலர ்உள்ளனர். இருப்பினும் கள்ளம் கபடமற்ற பிஞ்சு வயசிலே இழப்புக்களை கண்டவர்கள் வாழ்வில் பாசத்திற்கான ஏக்கம் மாறுவது கடினம் தானே.
@சிசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிசு
@செய்தாலி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செய்தாலி...
@குணசேகரன்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
@♔ம.தி.சுதா♔ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுதா
@மாலதி வாங்க மாலதி.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி
@அன்புடன் மலிக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா
@Murugeswari Rajavel நன்றி சகோ.. உங்கள் தொடர் வருகைக்கு நன்றி சகோ
@Ananthi (அன்புடன் ஆனந்தி) வாங்க ஆனந்தி ... தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ஆனந்தி நன்றி...
@தமிழ்த்தோட்டம் நன்றி சகோ..
@ஹேமா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அக்கா..
கவிதைகள் அனைத்தும் மிகவும் நன்று.பாராட்டுகள் வாழ்க வளமுடன் மென் மேலும் சிறந்துஎழுத்துலகில் வளர வாழ்த்துக்கள்
உண்மை உறவுகள்
உலகத்தில் எத்தனை
உள்ளம் அறியாமல்
உருகுதே நெஞ்சம்
நிஜமான வார்த்தைகள்
Nice one
நெஞ்சை கனக்கவைக்கும் கனமான கவிதை வரிகள்..!! தங்களது எழுத்துநடை மிக அருமைங்க...!!
அருமையான கவிதை. வாழ்த்துக்கள் தோழி
அருமையன மிகவும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள் என் அன்பு தோழி
Post a Comment