தொலைத்தூரத்தில் இருந்து
தொடர்ந்து வருவதில்லை
நெஞ்சுக்குள் இருந்தே
நம்பிக்கை மீதினில்
நஞ்சினை கக்கியே
நாம் அறியாமலே
நம்முள்ளும் வளர்கிறது துரோகம்.
பொழிந்திடும் அன்பினை
இழந்திடும் போதினிலும்
பொங்கிடும் ஆசைகள்
கரைபுரை ஓடிடும் போதிலும்
தஞ்சமே இன்றி மனம்
தவித்திடும் எண்ணத்தில் - தான்
நினைத்ததை நிறைவேற்ற
போராடும் வேளையில்
பிறர் முன் துரோகி...
நேசிக்கும் நெஞ்சங்களுக்காய்
நினைவுகளை நெஞ்சினில்
புதைத்து பூட்டிடின்
உன்னத உணர்வுகளுக்கும்
உன் மனதுக்கும் நீ துரோகி..
புன்னகையோடு புகழ்ச்சியை
கெடுத்தே தினம்
இழப்புக்களோடு இகழ்ச்சியை
வளர்த்தே அதில்
தன்னை வளர்க்குது துரோகம்.
28 comments:
///நேசிக்கும் நெஞ்சங்களுக்காய்
நினைவுகளை நெஞ்சினில்
புதைத்து பூட்டிடின்
உன்னத உணர்வுகளுக்கும்
உன் மனதுக்கும் நீ துரோகி../// எவ்வளவு உண்மையான வரிகள், வாழ்நாளில் பல சமயங்கள் எம் உணர்வுகளுக்கும் மனதுக்கும் நாம் துரோகியாகவே இருந்துவிடுகிறோம்..
///புன்னகையோடு புகழ்ச்சியை
கெடுத்தே//// இதை தான் சொல்வார்கள் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று செய்தல் என்று...
உண்மையிலே ஆழமான வரிகள்.
WELDONE PIRASHA.SUPER POEM
>>உன் மனதுக்கும் நீ துரோகி..
பஞ்ச்
//நாம் அறியாமலே
நம்முள்ளும் வளர்கிறது துரோகம்.//
அருமை தோழி. இந்த இரு வரிகளே கவிதையை உணர்த்தி விடுகிறது.
//புன்னகையோடு புகழ்ச்சியை
கெடுத்தே தினம்
இழப்புக்களோடு இகழ்ச்சியை
வளர்த்தே அதில்
தன்னை வளர்க்குது துரோகம்.//
nice lines
ஒரு மனிதன் செய்கிற் வெலயை கவனமாக செயவேண்டும்
நம்பிக்கை மீதினில்
நஞ்சினை கக்கியே
நாம் அறியாமலே
நம்முள்ளும் வளர்கிறது துரோகம்.//
நாம் முனைப்புடன் அகற்றுவோம். கவிதைக்குப் பாராட்டுக்கள்.
உலகத்தில் உல்ல பெண்கள் அனைவரும் மென்மையன மனம் உள்ளவர்கள் ஆ ணால் இந்த உலகம் அவர்களை மாற்றி விட்டது,அசிங்கம் படுத்தி விட்டது மாடல்...
உலகத்தில் உல்ல பெண்கள் அனைவரும் மென்மையன மனம் உள்ளவர்கள் ஆ ணால் இந்த உலகம் அவர்களை மாற்றி விட்டது,அசிங்கம் படுத்தி விட்டது மாடல்...
VERY NICE!
//நேசிக்கும் நெஞ்சங்களுக்காய்
நினைவுகளை நெஞ்சினில்
புதைத்து பூட்டிடின்
உன்னத உணர்வுகளுக்கும்
உன் மனதுக்கும் நீ துரோகி..//
எல்லோருமே இது போன்ற துரோகிகள்தான்!
அதசத்தலான கவிதை...
முடிவு அருமை...
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் அம்மா.
அகம் தன் முகம் பார்க்கிறது
நல்ல ஆழமான சிந்ததனை தோழி பாராட்டுக்கள்
உண்மை உரைக்கும் வரிகள்...
அருமையான பதிவு தோழி.
யதார்த்த வரிகளில் நல்லதொரு கவிதை ..
வாழ்த்துக்கள்
nice
நேசிக்கும் நெஞ்சங்களுக்காய்
நினைவுகளை நெஞ்சினில்
புதைத்து பூட்டிடின்
உன்னத உணர்வுகளுக்கும்
உன் மனதுக்கும் நீ துரோகி..
அட..உண்மைதானே :)
//நேசிக்கும் நெஞ்சங்களுக்காய்
நினைவுகளை நெஞ்சினில்
புதைத்து பூட்டிடின்
உன்னத உணர்வுகளுக்கும்
உன் மனதுக்கும் நீ துரோகி//
மிக அருமையான உண்மையான உன்னதமான கவிதை வரிகள். இனிமையான கவிதை.
VERY NICE
துரோகத்துக்கு புது வரைவிலக்கணம் கூறும் கவிதை
கவிதையில் ரணம் கசிகிறது . அருமையான வார்த்தை அலங்காரம் . பகிர்ந்தமைக்கு நன்றி
நல்ல கருத்துள்ள வரிகள்
துரோகம் இழைக்கும் குணம் மட்டுமில்லை.அனைத்தும் நம்முள்ளே தான் இருக்கிறது. எது மிகுதியாக வெளிப்படுகிறதோ, அதற்கு நாம் இறையாகி விடுகிறோம்.
அதனால் தான் அய்யன்,
குணம் நாடி, குற்றத்தையும் நாடி அவற்றுள் மிகை நாடச் சொல்லியிருக்கிறார்.
ஆக, யாருமே பரிபூரணமானவர்கள் அல்லர்.
நெஞ்சுக்குள் இருந்தே
நம்பிக்கை மீதினில்
நஞ்சினை கக்கியே
நாம் அறியாமலே
நம்முள்ளும் வளர்கிறது துரோகம்.....
ஆழமான ,அற்புதமான வரிகள் .....
மனசு கனக்குறது, வலிகள் வரிகளில் தெரிகிறது\
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Post a Comment