Friday, May 13, 2011

Share

அவன் நினைவுகள்..

 பார்த்தவுடன் புரியவில்லை
பழகும் போது தெரியவில்லை
பாசம் தந்து கொல்லும் என்று
பிரிவே என்னை வதைக்கிறது
இதுவரை உணராத
உயிர் கொல்லி நோய் போன்று..

அணி வகுந்து வந்தே
இதய ரணத்தில் மேலும்
துளைக்கிறது அவன் நினைவுகள்
காணும் பசும் காட்சிகளெல்லாம்
கானெல் என வெறுக்கிறது
கரும்பு கூட கசக்கிறது
தென்றல் கூட சுடுகிறது.

வாசம் வீசிட்ட
மலர் இதனை வண்டு
அரிந்து சென்றதினால்
வழியில் உதிர்ந்து வாடிற்றே

தேவை எது என அறியாமல்
தேவையற்று புலம்புகிறேன் - காரணம்
காதல் என்னும் பாதையிலே
கற்பனைகள் பல வளர்த்து
கை கோர்த்து வந்தவன்.
கண்னெதிரே இன்னொருத்தி
கைபிடித்து மங்கை இவள்
என் மனையாள் என்றதினால்..... 

26 comments:

ம.தி.சுதா said...

////கண்னெதிரே இன்னொருத்தி
கைபிடித்து மங்கை இவள்
என் மனையாள் என்றதினால்....////

இறுதி வரியில் உறுதிபட உரைத்த விட்டீர்கள் அக்கா..

ம.தி.சுதா said...

எங்கே இன்ட்லி நாளை வாறன்..

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான உணர்வுக்கவிதை வாழ்த்துகள் தோழி

இராஜராஜேஸ்வரி said...

அருமையான கவிதை வாழ்த்துகள் ....

Mahan.Thamesh said...

மிக மிக நன்றாக உள்ளது சகோதரி

கவி அழகன் said...

உணர்வை தொடும் கவிதை

சி.பி.செந்தில்குமார் said...

>>கை கோர்த்து வந்தவன்.
கண்னெதிரே இன்னொருத்தி
கைபிடித்து மங்கை இவள்
என் மனையாள் என்றதினால்.....

உங்கள் சோகத்தை எங்கள் சோகமாக பகிர்ந்து கொள்கிறோம்

குறையொன்றுமில்லை. said...

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

VELU.G said...

நல்ல கவிதை

jayakumar said...

why so sad thozhi prasha?..

Anonymous said...

இறுதி வரியில் ஒரே அடி..நல்லாய் இருக்கு கவிதை

குணசேகரன்... said...

"தேவை எது என அறியாமல்
தேவையற்று புலம்புகிறேன்"-
அருமை..தோழி..இன்னும் நிறைய பதியுங்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@♔ம.தி.சுதா♔ நன்றி சுதா..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@நேசமுடன் ஹாசிம்நன்றி நண்பரே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@இராஜராஜேஸ்வரி நன்றி சகோதரி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Mahan.Thamesh நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@யாதவன் நன்றி யாதவன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@சி.பி.செந்தில்குமார் உங்கள் நல்ல மனதிற்கு நன்றி சார்..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Lakshmi நன்றி லக்ஷ்மி அம்மா

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@Rathnavel நன்றி சகோ

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@VELU.G நன்றி வேலு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@jayakumarகவிதை தான் சோகம் சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@கந்தசாமி. நன்றி கந்தசாமி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@குணசேகரன்... நன்றி குணசேகரன்.

ஹேமா said...

காதல் கைகூடாவிட்டால் உயிர் பிரியும்வரை வலிதான் தோழி !

"தாரிஸன் " said...

Apdiya?!