எம்முள்ளே உருவாகின
எம்மை அறியாமல்
எல்லை அற்று விரிகின்றன
அவை தினம் தினம்...
ஏக்கங்களுக்குள்ளே
தாக்கு பிடிக்காது
சிக்கித் தவிக்கும்
மனம் இதற்காய்
எல்லையை உருவாக்க
எண்ணங்களை முந்தியே
விரைதிட்ட போதிலும்
அங்கேயும் முடியவில்லை
ஒருவித ஊக்கம்
உள்ளுக்குள் உத்வேகம்
சிற்சில மாற்றம்
சில நேரம் தயக்கம்
சொற்ப நேரத்தில்
செயலுடன் இணைந்தே
சிந்தையும் பயணிக்குது
முயற்சியால் புரட்சியில்
எழுச்சி பெற்றிட்ட
எண்ணங்களால் என்றுமே
புன்னகை முகத்தினிலே
பிறர் எழுச்சியில்
வீழ்ச்சியே எண்ணிடும்
நெஞ்சங்கள் முகத்தில்
எள்ளளவில் கூட எங்கையும்
காணவில்லை இன்பத்தில்
எழுவதில் தவறில்லை
எண்ணங்கள் பலவும் - அதை
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும்
-தோழி பிரஷா-
27 comments:
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும்//
அதுதானே வாழ்க்கை !!
தன்னம்பிக்கை!!
>>எழுவதில் தவறில்லை
எண்ணங்கள் பலவும் - அதை
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும்
ஃபினிஷிங்க் பஞ்ச் செம
நல்ல கவிதை ,அத்துனை வரிகளும் மனதி தொட்டன ...உங்களின் அணைத்து கவிதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது .
நல்ல கவிதை ,அத்துனை வரிகளும் மனதி தொட்டன ...உங்களின் அணைத்து கவிதைகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது .
//ஒருவித ஊக்கம்
உள்ளுக்குள் உத்வேகம்
சிற்சில மாற்றம்
சில நேரம் தயக்கம்
சொற்ப நேரத்தில்
செயலுடன் இணைந்தே
சிந்தையும் பயணிக்குது//
எனக்கு இந்த வரிகள் ரொம்பப் பிடிச்சிருக்கு!
மனித மனங்களின் சிந்தனைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனைத் தத்துவமாய் உங்களின் கவிதை உரைக்கிறது சகோ.
எழுவதில் தவறில்லை
எண்ணங்கள் பலவும் - அதை
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும்
கவிதையிலும் பஞ்ச் சூப்பர்
அருமையான வரிகள்...அனைத்தும்...
இன்பமும் துன்பமும் பிரர்தர வாரா....
மனதுக்குள் இருக்கும் ஏக்கதம்தில் வெளிப்பாடு தங்கள் கவிதை...
தங்களின் எண்ணங்கள் இன்பத்தை மட்டுமே கண்டெடுக்க வேண்டுகிறேன்...
///பிறர் எழுச்சியில்
வீழ்ச்சியே எண்ணிடும்
நெஞ்சங்கள் முகத்தில்
எள்ளளவில் கூட எங்கையும்
காணவில்லை இன்பத்தில்/// உண்மையான வரிகள் தானே...
///எழுவதில் தவறில்லை
எண்ணங்கள் பலவும் - அதை
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும்/// பல சமயங்களில் சிந்தனையும் செயல்களும் ஒன்றித்து போவதில்லை..
நல்ல கவிதை சகோதரி ..
உள்ளத்தையும், அதன் எண்ணத்தையும் உணர்த்தும் கவிதை. அருமை தோழி.
எழுவதில் தவறில்லை
எண்ணங்கள் பலவும் - அதை
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும
நல்ல கவிதை
அருமையான கவிதை தோழி
////
எழுவதில் தவறில்லை
எண்ணங்கள் பலவும் - அதை
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும்
//////
உண்மையான வரிகள்
///
முயற்சியால் புரட்சியில்
எழுச்சி பெற்றிட்ட
எண்ணங்களால் என்றுமே
புன்னகை முகத்தினிலே
பிறர் எழுச்சியில்
வீழ்ச்சியே எண்ணிடும்
நெஞ்சங்கள் முகத்தில்
எள்ளளவில் கூட எங்கையும்
காணவில்லை இன்பத்தில்
///
கலக்கிடிங்க தோழி
மிக அருமை
முயற்சியால் புரட்சியில்
எழுச்சி பெற்றிட்ட
எண்ணங்களால் என்றுமே
புன்னகை முகத்தினிலே
பிறர் எழுச்சியில்
வீழ்ச்சியே எண்ணிடும்
நெஞ்சங்கள் முகத்தில்
எள்ளளவில் கூட எங்கையும்
காணவில்லை இன்பத்தில்
ஆழமானவரிகள்..
எழுவதில் தவறில்லை
எண்ணங்கள் பலவும் - அதை
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும்
மிகவும் பிடித்த வரிகள்.
//எண்ணங்களெல்லாம் - ஏன்
எம்முள்ளே உருவாகின
எம்மை அறியாமல்
எல்லை அற்று விரிகின்றன//
...முற்றிலும் உண்மை. நம்மை கேட்டா நம் எண்ணங்கள் சிறகு விரித்துப் பறக்கிறது.. ஹ்ம்ம்.. நல்லா இருக்கு பா.. :))
எழுவதில் தவறில்லை
எண்ணங்கள் பலவும் - அதை
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும்
நல்ல கவிதை பிரஷா..வாழ்த்துக்கள் தோழி
தோழி பிரஷா இறுதியில் உள்ள ஐந்து வரிகள் மிக அருமை. இதற்க்காக உங்களுக்கு அவார்டு தரலாம். ஆனால் அவார்டு தரும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை அதனால் எனது வாழ்த்துகளையே உங்களுக்கு அவார்டாக தருகிறேன்.
Note : உங்கள் பதிவுகளையெல்லாம் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். நேரமின்மை என்ற காரணத்தால் பதில் கருத்துக்கள் இடமுடியவில்லை, அத்ற்க்காக மன்னிக்கவும் ஆனால் எனது ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு தோழியே
அருமை. வாழ்த்துக்கள்.
வாழ்வியல் தத்துவங்களோடு கோர்த்திருக்கிறீர்கள்
கவிதையை.அற்புதம் !
நிதர்சன வரிகள் தோழி
வாழ்த்துகள்
ஏற்று நடப்பவர் கைகளில் உள்ளது,இன்பமும்,துன்பமும் அருமையான வரிகள்!
Post a Comment