Sunday, May 22, 2011

Share

ஆயுள் கைதி


உள்ளத்தால் இணைந்து
உறவில் கலந்திட்ட
உள்ளங்கள் இரண்டிங்கு
உண்மை உணர்வினை சொல்லிட
உதடுகள் துடிக்குது
உள்ளே ஏதோ தடுக்குது

காதலின் விதியா?
காலத்தின் சதியா?
உணர்ந்திட்ட போதிலும்
உரைக்க மறுக்குது
உள்ளம் உண்மைதனை இங்கு.

நிலையது என்ன
நெஞ்சத்தில் ஏக்கம்
நினைவினில் தாக்கம்
தூக்கமும் போச்சு
வேதனையே வாழ்வின்
அடுத்த நிலையாச்சு

சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
மெளனத்தினை துணைக்கழைத்து
விழிநீரை பலியாக்கி
கனவுலகில் காலத்தை கழித்து
காதல் என்னும் இராச்சியத்தில்
ஆயுள் கைதியாக 
இன்று நானிங்கு..

29 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
மெளனத்தினை துணைக்கழைத்து
விழிநீரை பலியாக்கி
கனவுலகில் காலத்தை கழித்து
காதல் என்னும் இராச்சியத்தில்
ஆயுள் கைதியாக
இன்று நானிங்கு..


கனத்த வரிகள்! நெஞ்சை கனக்க வைக்கும் வரிகள்!

Prabu Krishna said...

//சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
மெளனத்தினை துணைக்கழைத்து//

அருமை தோழி.. !!

Anonymous said...

சொல்லாத காதல் வலி, கவி நல்லாய் இருக்கு சகோதரி

Anonymous said...

////நிலையது என்ன
நெஞ்சத்தில் ஏக்கம்
நினைவினில் தாக்கம்
தூக்கமும் போச்சு
வேதனையே வாழ்வின்
அடுத்த நிலையாச்சு/// அருமையான நடை ......

கீதமஞ்சரி said...

மனச்சிறையில் அடைபட்டபின் மற்றொரு சிறை எதற்கென்றோ துணியவில்லை மனம் உண்மை சொல்லி உடன்செல்ல? அழகான கவிதை.

Unknown said...

மனச்சிறையில் இருப்பது மகிழ்ச்சியான விசயம்தான்....

கவி அழகன் said...

தோழி
நெஞ்சுக்குள் முள்ளை வைத்து
யார் தைத்தது
கண்ணுக்குள் கண்ணீர் வந்து
ஏன் சிந்துது

இராஜராஜேஸ்வரி said...

ஆயுள் கைதிக்கு அனுதாபங்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

லே அவுட் கலக்கல்.. கவிதை நீட்

Yaathoramani.blogspot.com said...

தலைப்பும் அதை ஒட்டி நீங்காது செல்லும்
படைப்பும் மிக மிக அருமை
உங்களுக்கு இயைபுத் தொடை
மிக இயல்பாக வருகிறது
அதனைப் பயன்படுத்தி தொடர்ந்து கவிதைகள் செய்ய
உங்கள் படைப்பு இன்னும் அதிகம் பரிமளிக்கும்

test said...

nice!

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

கவிதைகள்
மிக மிக அருமை சகோதரி

Unknown said...

ரொம்ப வலி போல...

Unknown said...

அவரு யாரு லே அவுட் கலக்கல் இது நீட் அது ஷோர்ட்'னு கமெண்டு போடுறது?>

குறையொன்றுமில்லை. said...

கவிதை நல்லா இருக்கு தோழி.

Chitra said...

சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
மெளனத்தினை துணைக்கழைத்து
விழிநீரை பலியாக்கி
கனவுலகில் காலத்தை கழித்து
காதல் என்னும் இராச்சியத்தில்
ஆயுள் கைதியாக
இன்று நானிங்கு..


..... அருமையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைங்க.

தினேஷ்குமார் said...

கனத்த காதல் வரிகள் சோகம் பாடி சுவையான சுமையாக எங்கும் கலந்திருக்கும் காதல் ....

அருமைத் தோழி

MANO நாஞ்சில் மனோ said...

நெஞ்சி கனக்க வச்சிட்டீங்களே....!!!!

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

சிசு said...

அருமை...

Ram said...

அருமையான வரிகள்..

கவிதை பூக்கள் பாலா said...

காதலின் விதியா?
காலத்தின் சதியா?
உணர்ந்திட்ட போதிலும்
உரைக்க மறுக்குது
உள்ளம் உண்மைதனை இங்கு.

yrthaartha varikal kavithai arumai aanaal valikonda kavithai

சரியில்ல....... said...

காதல் என்னும் இராச்சியத்தில்
ஆயுள் கைதியாக
இன்று நானிங்கு..///

காதல் என்றால் இராச்சியம்.. அது சரி ஒத்துக்கொள்கிறேன்....

காதலித்தால் ஆயுள் கைதியா? இது.............................................
இது ஒத்துக்க முடியல...
இது காதலின் தவறு...
மத்தபடி கவிதை.... கலக்கல் ரகம்...
(காதலின் பீலிங்க்'சை கவிதையில் கொட்டுவதற்கு காதல் தோற்றிருக்கத்தான் வேண்டுமா?)
வாழ்த்துக்கள்... இன்னும் புதிய முயற்சி எடுங்கள்....

சரியில்ல....... said...

உங்கள் டெம்பிளேட்டை கொஞ்சம் எளிதாக இருக்கும்படி மாற்றுங்களேன்... எனது இசைப்பேழையில் ஒருமணிநேரம் லோட் ஆகிறது... இத்தனைக்கும் wi-fi மூலமாகவே....

சரியில்ல....... said...

ரொம்ப படுத்துகிறேனோ.....???
அடுத்த வாட்டி எனக்கு உங்களுடைய புதிய பதிவின் லிங்க் அனுப்பமாட்டீர்கள் தானே?

arasan said...

நெஞ்சத்தை கிள்ளும் வரிகள் தோழி ..

Jana said...

சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
மெளனத்தினை துணைக்கழைத்து
விழிநீரை பலியாக்கி
கனவுலகில் காலத்தை கழித்து
காதல் என்னும் இராச்சியத்தில்
ஆயுள் கைதியாக
இன்று நானிங்கு..


..... அருமையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை

Me too

ஹேமா said...

காதலுக்குள் அகப்பட்டவர்கள் எல்லோருமே ஆயுள்கைதிகள்தானோ !

நிரூபன் said...

காதலினால் சிறை வைக்கப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வலைகளைச் சொல்லி நிற்கிறது ஆயுள் கைதி.