இதமான பூங்காற்றுடன்
இனிய ராகத்தையே
தினம் தினம் மீட்டியவள் - இன்று
ஸ்வரங்களை தொலைந்து
சுருதியில் சேர்ப்பதால்
இசை தான் பிறக்குமா?
சுகம் அது கிடைக்குமா?
ராகங்கள் பலவிதம்
அதன் ரசனைகள் பல சுகம்
தாளத்திற்கு இசையவே
காலத்திற்கு ஒத்துபோகுதே
இனிய ராகத்தையே
தினம் தினம் மீட்டியவள் - இன்று
ஸ்வரங்களை தொலைந்து
சுருதியில் சேர்ப்பதால்
இசை தான் பிறக்குமா?
சுகம் அது கிடைக்குமா?
ராகங்கள் பலவிதம்
அதன் ரசனைகள் பல சுகம்
தாளத்திற்கு இசையவே
காலத்திற்கு ஒத்துபோகுதே
வாழ்க்கை என்னும் பாடலில்
வசந்தம் எனும் சுகம் காண
பாசம் என்னும் ஸ்வரங்கள்
காலம் என்னும் தாளத்தோடு தப்பாது
சுருதியில் சுய விருப்புடன்
இணையும் இதயங்களிலிருந்தே
இசை மீட்ட காத்திருக்கையிலே
ஸ்வரங்கள் இடம் மாறியதால்
இசை வரும் இசையின் திசையிலே
இனிமையும் மறந்தது....
வசந்தம் எனும் சுகம் காண
பாசம் என்னும் ஸ்வரங்கள்
காலம் என்னும் தாளத்தோடு தப்பாது
சுருதியில் சுய விருப்புடன்
இணையும் இதயங்களிலிருந்தே
இசை மீட்ட காத்திருக்கையிலே
ஸ்வரங்கள் இடம் மாறியதால்
இசை வரும் இசையின் திசையிலே
இனிமையும் மறந்தது....
16 comments:
கவிதையின் திசையிலேயே நானும் ரசித்தேன் தோழி...... !!!!!
வாழ்க்கை என்னும் பாடலில்
வசந்தம் எனும் சுகம் காண
பாசம் என்னும் ஸ்வரங்கள்
காலம் என்னும் தாளத்தோடு தப்பாது
சுருதியில் சுய விருப்புடன்
இணையும் இதயங்களிலிருந்தே
இசை மீட்ட காத்திருக்கையிலே
ஸ்வரங்கள் இடம் மாறியதால்
இசை வரும் இசையின் திசையிலே
இனிமையும் மறந்தது....
....... அருமை. அர்த்தங்களும் இசையும் கை கோர்த்து, கவிதையில் சரளமாக வந்து உள்ளன. வாழ்த்துக்கள்!
கவிதை நீட்
@பலே பிரபு நன்றி பிரபு
@Chitra மிக்க நன்றி சித்திராக்கா..
@சி.பி.செந்தில்குமார் நன்றி சார்.
இருமுறை வாசித்தேன் இசையோடு இதழ் பேசும் கவிதை
கவிதை கலக்கல்.. கவிதாயினி தாமரை போன்ற வார்த்தை ஜாலங்கள்.
வாழ்த்துக்கள்...
இசையின் சுகம் கவிதையில் கிடைக்கிறது...
வாழ்த்துக்கள்..
அசத்தல் கவிதை,,
கோடைக்கு சுற்றுலா போகலாம் வாங்க ...
.நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
/////ராகங்கள் பலவிதம்
அதன் ரசனைகள் பல சுகம்
தாளத்திற்கு இசையவே
காலத்திற்கு ஒத்துபோகுதே
//////
அருமையான சிந்தனை என்பதா இல்லை ரசனை என்பதா இரண்டிலும் ஒத்துப் போகிறது வார்த்தைகள்
ஸ்வரங்கள் இடம் மாறியதால் இசையும் திசை மாறியதே...
.நல்ல இசை ஞானம் உங்களுக்கு பாராட்டுக்கள்.
ஸ்வரங்கள் இடம் மாறியதால்//
i understood.
nice..
http://zenguna.blogspot.com
வாழ்க்கையும் இசையை போல் தான்.. மீட்டுபவர் மீட்டினால்... என்று சொல்வது போல இருக்குங்க.. உங்க கவிதை..!!
சூப்பர்... ;))
////தாளத்திற்கு இசையவே
காலத்திற்கு ஒத்துபோகுதே////
அருமை அக்கா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?
Post a Comment