தோழியே!!
மறைந்தாயோ என்னை? - இல்லை
மறக்கடிக்கபட்டாயோ?
என் கவலைகள் மறந்து
மனம் விட்டு பேச
மணிக் கணக்கில்
அரட்டை என்னும் பெயரில்
ஆயிரம் கதை சொல்லி
குதுகலித்திடும் அலைபேசிகள்
சலனமின்றி சமாதியானது
உன் மெளனத்தினால்,
தொலைவாகி போனதால்
தொலைந்து போனதா
உன் இதயம்...?
நெருங்கிட நினைத்தாலும்
வார்த்தையால் வெடிக்கிறாய்
உதிர்ந்திடும் நிமிடங்களில்
சிலிர்த்திடும் சினங்களினால்
சின்னாபின்னமாகிறது
நட்பின் ஆயுள்.
அறியாமையில் நீயூம்
ஆணவத்தில் நான் மட்டுமோ?
பூக்களுக்கு சொந்தகாரியே!
மென்மையான உன் இதயம்
அணுகுண்டாய் மாறும்
அபாயநிலை அறியாயோ?
மனம் விட்டு பேச
ஆயிரம் கதைகள்
சிந்தியே கிடக்கிறது - ஆகையால்
சிதறுகிறது என் மனம்.
சோகங்களை மட்டும் - எனக்கு
வரமாய் தந்துவிட்டு சென்றதினால்
நாடி தளர்த்து,
உடல் சோர்த்து
உயிர் போகும் வரை
ஓயப்போவதில்லை
என் புலம்பலும்.....
20 comments:
//சிலிர்த்திடும் சினங்களினால்
சின்னாபின்னமாகிறது
நட்பின் ஆயுள்.//உண்மையான வரிகள் அருமை
சுகமான தவிப்பு. . .
மனம் விட்டு பேச
ஆயிரம் கதைகள்
சிந்தியே கிடக்கிறது - ஆகையால்
சிதறுகிறது என் மனம்.
சோகங்களை மட்டும் - எனக்கு
வரமாய் தந்துவிட்டு சென்றதினால்
நாடி தளர்த்து,
உடல் சோர்த்து...
நிறைய கதைகள் சொல்கிறது இந்த கவிதை.
கண்ணீர் சிந்தும் கண்கள் நிறையவே இருக்கும் இந்த வரிகளுக்கு...
மென்மையான உன் இதயம்
அணுகுண்டாய் மாறும்
அபாயநிலை அறியாயோ? //
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
@பிரேம் குமார் .சி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ந்னறி பிரேம்
@நண்டு @நொரண்டு -ஈரோடு வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ
@பிரணவன்நன்றி பிரணவன்.
@Tamilraja k வருகைக்கும் பிக்குட்டத்திற்கும் நன்றி சகோ
:-).. Romba Nallarukunga..
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன். பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.
http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_16.html
தாரிக்
அலைபேசிகள்
சலனமின்றி சமாதியானது
உன் மெளனத்தினால்,//
அசத்தல் வரிகள் வலிகள்...!!!!
கவிதையின் புலம்பல் ரசிக்க வைத்தது..
வாழ்த்துகள்..
அழகிய வரிகள் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
சோகங்களை மட்டும் - எனக்கு
வரமாய் தந்துவிட்டு சென்றதினால்
என்ன மனசு.. சோகத்தையும் வரமாய் பாவிக்க..
good
அருமை.தொடருங்கள்
nice lines ...keep it up//
கவிதையின் நயம் மெய் சிலிர்க்க வைக்கிறது தோழி...
வாழ்த்துக்கள்...
அன்புடன்
மதுரை அருண்
அருமை! வாழ்த்துக்கள்!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
Post a Comment