Tuesday, December 27, 2011

Share

மரணத்தின் பின்னால்...



மனித சிந்தனைக்கு
அப்பாலும் சில
புதிய தேடல்கள்
விரிந்தே கிடக்கின்றது

சிலரது ஒரு நாள்
ஒரு சரித்திரம்!.
சிலரின் வாழ்நாள்
முழுவதும் சூனியம்.

வாழும் போது தெரியாத
வாழ்வின் தத்துவம்
இறுதி மூச்சில்
மரணம் எனும்
வேள்வியில் உணர்கிறான்
மனிதன்!

மரணத்தை தெரிந்த
மனிதர்கள்
வாழ்கின்ற போதே
வளர்கின்றனர்.

மாலையில் மரணிப்போம்
என அறிந்துதான்
மலர்கள் மகிழ்சியாய்
இதழ் விரிக்கின்றன..

கடலோடு கலந்திடுவோம்
என அறிந்தும்
சலனமின்றி சலசலத்து
ஆறுகள்
மகிழ்ச்சியாய் 
கடலினை முத்தமிடுகின்றன..

இறப்பை உணர்ந்து
இருக்கின்ற காலத்தை
இன்பமாய் கழிக்கும்
இயற்கையின் லாபவம்
மனிதனுக்கு
பிடிபடுவதே இல்லை என்பதே
துரதிஷ்டம்...

6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//மரணத்தை தெரிந்த
மனிதர்கள்
வாழ்கின்ற போதே
வளர்கின்னர்.//
அருமை.

செய்தாலி said...

வாழ்கையின்
தத்துவம் சொல்லும் இயல்பான வரிகள்
ரெம்ப அழகா சொல்லிடீங்க தோழி

test said...

//சிலரது ஒரு நாள்
ஒரு சரித்திரம்!.
சிலரின் வாழ்நாள்
முழுவதும் சூனியம்//
True!

MANO நாஞ்சில் மனோ said...

கடலோடு கலந்திடுவோம்
என அறிந்தும்
சலனமின்றி சலசலத்து
ஆறுகள்
மகிழ்ச்சியாய்
கடலினை முத்தமிடுகின்றன..//

ஆஹா அருமையான வரிகள்.....!!!

ஓசூர் ராஜன் said...

மரணத்தை நினைத்து வாழ்கையை தொலைபவர்கள் அதிகம்! ஆனால், வாழ்பவர்கள் மரணத்தை வென்றவர்கள் என்பேன்!

arasan said...

படித்ததும் சிலிர்க்க வைக்கும் வைர கவிதைக்கு வாழ்த்துக்கள்