சொல்லிக் கொடுத்திட்ட
பள்ளிக் கணக்குடனே
மன பாசத்தையும்
அள்ளிக் கொடுத்ததால்
அதில் மூழ்கிட்டாள் அவளும்
சோகம் மறந்து
துள்ளிக் திரிகையிலே
உள்ளம் கொள்ளை போனதினால்
கள்ளத்தனமாகவே அவர்கள்
காதல் வளர்த்தனர்.
ஒட்டி இருந்த சொந்தமெல்லாம்
திட்டியே தீர்த்தமையால் தினம்
வெட்டியே விலகி பகையினை
கிட்டிய நாட்டுக்கு சென்று - தாலி
கட்டியே வாழ்வதற்கு - இருவரும்
திட்டம் வகுத்தார்கள்
பெட்டியை கையிலேந்தி - கால்
முட்டியின் வலி மறந்து
எட்டியே பார்த்து நின்றான் தெருவை
கட்டிக் காத்து வளர்த்திட்ட
பெற்றவர் சிந்தையது
முட்டியே மோதியதால் மூளையை
வெட்டியே விட்டுவிட்டாள்
வெளிக்கிட்ட பயணத்துடன்
விரும்பிய உள்ளத்தையும்..
உயிரிலே கலந்திட்ட அவன்
உருவமதால் உடைந்த மனம்
ஊரார் எய்திட்ட - வார்த்தை
அம்புகளின் அவமானத்தினாலும்
மாத்திரையை துணைக்கணைத்து
மரண தேவதையின்
மடியினிலே தலை சாய்ந்தாள்..
43 comments:
////ஒட்டி இருந்த சொந்தமெல்லாம்
திட்டியே தீர்த்தமையால் தினம்
வெட்டியே விலகி/////
அருமை.. அருமை.. அருமையாக இருக்கிறது...
மன பாசத்தையும்
அள்ளிக் கொடுத்ததால்
அதில் மூழ்கிட்டாள் அவளும்//
வணக்கம் சகோதரம், இன்று பள்ளிக் காதல் பற்றிய கவிதையினைப் புனைந்திருக்கிறீர்கள்...
இது பள்ளிக் காதல் போலவும் இருக்கிறது, கணக்கு வாத்தியார் மாணவி மீது கொண்ட காதல் போலவும் இருக்கிறது...
மிகுதி வரிகளைப் படித்து விட்டு வருகிறேன்.
கள்ளத்தனமாகவே அவர்கள்
காதல் வளர்த்தனர்//
ம்...ம்.. எங்களூர்க் காதலை அப்படியே, அச்சில் வடித்தது போலப் புனைந்திருக்கிறீர்கள்.
தாலி
கட்டியே வாழ்வதற்கு - இருவரும்
திட்டம் வகுத்தார்கள்//
ஆஹா.. ஓடிப் போகப் பிளான் பண்ணிட்டாங்களா?
உயிரிலே கலந்திட்ட அவன்
உருவமதால் உடைந்த மனம்
ஊரார் எய்திட்ட - வார்த்தை
அம்புகளின் அவமானத்தினாலும்
மாத்திரையை துணைக்கணைத்து
மரண தேவதையின்
மடியினிலே தலை சாய்ந்தாள்..//
வீட்டை விட்டு, ஓடிப் போயும் வாழ முடியாத காதலின் முடிவினை மரணத்தில் முடித்திருக்கிறீர்கள்..
கவிதை இக் உண்மைக் காதலின் யதார்த்தத்தைத் சொல்லி நிற்கிறது.
உங்களுக்கு மரபுக் கவிதை மீது ஆர்வம் அதிகம் என்று நினைக்கிறேன், காரணம் மரபுக் கவிதையாக, சந்த நடையில் இக் கவிதையினை எழுத முயற்சி செய்துள்ளீர்கள் என்பது கவிதையின் வரித் தொடுப்பினூடாக அறியக் கூடியதாக உள்ளது.
உயிரிலே கலந்திட்ட அவன்
உருவமதால் உடைந்த மனம்
ஊரார் எய்திட்ட - வார்த்தை
அம்புகளின் அவமானத்தினாலும்
மாத்திரையை துணைக்கணைத்து
மரண தேவதையின்
மடியினிலே தலை சாய்ந்தாள்..
...That is very sad.... :-(
வழக்கம் போல ஒரு அசத்தலான கவிதை..
சோகக்கவிதையா..?
மேடம் நீங்க ஏன் ஒரு கட்டுரை எழுத கூடாது? கவிதை மட்டுமே எழுத வேண்டும் என்பதுதான் உங்கள் ஆசையா? ஏன் கேட்கிரேன் என்றால் எவ்வளவு நாளைக்குதான் நல்லாஇருக்கு நல்லா இருக்குன்னே போட முடியும் :-) எங்களையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன்
இன்றைய காதலில் முடியும் கண்ணீருக்காக சோகம் இங்க உணர முடிகிறது..
என்ன, ஏன், திடீர்னு சோகக்கவிதை?
நல்லாத்தான் இருக்கு!
கவிதை அடுக்கு மொழியில் மிகவும் அருமையாக உள்ளது. பாராட்டுகள்.
கதை போல கவிதை சுவாரசியமா போகேக்கே கடைசியில் சோகமா முடிசிடின்களே தோழி
//உயிரிலே கலந்திட்ட அவன்
உருவமதால் உடைந்த மனம்
ஊரார் எய்திட்ட - வார்த்தை
அம்புகளின் அவமானத்தினாலும்
மாத்திரையை துணைக்கணைத்து
மரண தேவதையின்
மடியினிலே தலை சாய்ந்தாள்..//
இப்பிடி மனசை பிசைய வைக்குரீங்களே...
காதலர்கள் பிரியலாம்.
காதல் அல்ல.
//மேடம் நீங்க ஏன் ஒரு கட்டுரை எழுத கூடாது? கவிதை மட்டுமே எழுத வேண்டும் என்பதுதான் உங்கள் ஆசையா? ஏன் கேட்கிரேன் என்றால் எவ்வளவு நாளைக்குதான் நல்லாஇருக்கு நல்லா இருக்குன்னே போட முடியும் :-) எங்களையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன்//
நான் வழி மொழிகிறேன் :)
அருமையான காதல் கவிதை. சோகத்தில் முடிந்ததுதான் சோகம்.கண்ணீரில் முடிந்த காதல் கதை(கவிதை)
ஓ திரும்பவும் ஆரம்பிச்சாச்சா.???
சோகமான காதல் கவிதை.. நல்லாதான் இருக்கு.!!
sogaththulaiyum 'ethugai' 'monai' la pichchu utharreengalea
கவிதைக்குள் ஒரு காதல் கதையே இருக்கு.படம் அழகு.நிரூபன் பின்னோட்டம் பிச்செடுக்கிறார் !
மிகுந்த பாதித்துவிட்டது இக்கவிதை.
குறிப்பு:
உங்கள் வலைத்தளம் மிகவும் அழகு
ரொம்ப பிரமாதம் தோழி பிரஷா
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
Yes
உயிரிலே கலந்திட்ட அவன்
உருவமதால் உடைந்த மனம்
ஊரார் எய்திட்ட - வார்த்தை
அம்புகளின் அவமானத்தினாலும்
மாத்திரையை துணைக்கணைத்து
மரண தேவதையின்
மடியினிலே தலை சாய்ந்தாள்..
waaw...
நல்ல கவிதை தோழி.
@♔ம.தி.சுதா♔ நன்றி சுதா
@நிரூபன் உங்கள் பல விதமான கருத்துக்களுக்கு நன்றி நிரூபன்.
@Chitra நன்றி சித்திராக்கா
@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருன்.
@சி.பி.செந்தில்குமார் ம்.ம். பிடிக்கவில்லையா
@இரவு வானம் உங்கள் கருத்தினை ஏற்கின்றேன் முயற்சிக்கின்றேன்.
@ஜீ... பல மாதிரி யயோசிக்கிறது தானே ஜீ.. நன்றி
@பிரவின்குமார் மிக்க நன்றி பிரவீன்.
@யாதவன் அக்கதையில் நிஜமாகவே சோகமான முடிவாச்சு...யாதவன்.
@MANO நாஞ்சில் மனோ இன்பதுன்பம் கலந்ததே வாழ்வு..
நன்றி
@Rathnavel நன்றி
@Nagasubramanian நிச்சயமாக உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன் .செயல்படுத்தவும் முயற்சிக்கின்றேன்.
@KADAMBAVANA KUYIL நன்றி
@தம்பி கூர்மதியன் நன்றி மதியன்.
@சுண்டெலி(காதல் கவி) நன்றி சகோ
@ஹேமா நன்றி அக்கா.. நிரூபன் பின்னூட்டத்தில் பிச்செடுக்கின்றார். எங்கும்.. உண்மையில் அவர் ஆராய்ச்சியாளன் போல இருக்கின்றது.
@செல்வன் நன்றி செல்வன்.
@Jana நன்றி ஜெனா...
@பலே பிரபு நன்றி பிரபு..
Post a Comment