என் வாழ்வின் பயணத்தில்
எங்கிருந்தோ வந்தவளே - எனை
தனதாக்கி சென்றதனை
நானே அறியவில்லை
வழிமாறி வந்ததினால்
பழியேதும் வந்திடுமோ?
அழியாத என் பாத சுடுகளில்
வழி தேடி வந்து என்னை - சொந்தம்
குழி தோண்டி புதைந்திடுமோ?
வெளியேற முயலுகிறேன்
துளிகூட முடியவில்லை - அவள்
இதய குழியில் விழுந்த என்னால்...
30 comments:
அழியாத என் பாத சுடுகளில்
வழி தேடி வந்த என்னை
குழி தாண்டி புதைந்திடுமோ -என்னே வரிகள்.. அருமை..
அருமையான வரிகள்.... சகோதரி..
அவதி.. இங்கே அவதரித்துள்ளது..
கவிதை வரிகள் கலக்குது.
ம்... வலிமிகுந்த கவிதை....
தேடுதலே வாழ்க்கை...
வாழ்த்துக்கள்..
கவிதை வரிகள் அழகுடன் கருத்தையும் சொல்லுகின்றன
அழியாத என் பாத சுடுகளில்
வழி தேடி வந்து என்னை - சொந்தம்//
சுவடுகளில் என்று வந்தால் நன்றாக இருக்கும் சகோதரி.
இக் கவிதையினை ஒரு ஆண் பாடுவதாக எடுத்துக் கொண்டால்,தன் காதலிக்குப் பாடுவதாகப் பொருள் கொள்ளலாம், பெண் பாடுவதாக பாவனை செய்து படித்தால். பெண் தன் தோழிக்குப் புனைந்த கவிதையாகவும் இக் கவிதை பொருளுணர்த்தி நிற்கிறது.
அனலிடைப் பட்ட மெழுகாகத் தத்தரிக்கும் ஒரு ஜீவனின் உள்ளத்து உணர்வுகள் கவிதையில் வெளிப்பட்டு நிற்கிறது.
வலிகள் நிறைந்த வரிகளால் கவிதை வடித்த தோழிக்கு வாழ்த்துக்கள்
இதுவன்றோ ரணத்தோடு பாடும் சங்கீதம் :)
நல்ல வரிகள்.நல்ல கவிதை.எப்படியாயினும் இதயக்குழியிலிருந்து வெளியேறித்தானே ஆக வேண்டும்.
கவிதை ஓக்கே
ம்ம்ம்...!
உன் அழியாத இந்த வார்த்தைகளால்!
வழி தேடி வந்து என்னை - சொந்தம்
குழி தோண்டி புதைந்திடுமோ?
"இது எப்புடி நாங்களும்"
இவன் அறிமுகம் இல்லாத நண்பர்
ஜெமிநிவிவேக்.k
@♔ம.தி.சுதா♔ நன்றி சுதா
@தம்பி கூர்மதியன் நன்றி மதியன்.
@Lakshmi நன்றி அம்மா
நன்றி சௌந்தர்.
@யாதவன் நன்றி யாதவன்.
@Part Time Jobs தகவலுக்கு நன்றி
@Nagasubramanian நன்றி சகோ
@யாதவன் வாழ்த்துக்கு நன்றி யாதவன்.
@நிரூபன் பலவிதமாக கருத்துக்களை வீசுவதில் நீங்கள் வல்லவன். நன்றி நிரூபன்.
@Jana நன்றி ஜெனா
@விமலன் வெளியேறுவது கடினம் இதயத்துள் புதைக்கவே முடியும் நன்றி
@சி.பி.செந்தில்குமார் ஓகே அப்ப மாரக்ஸ் சொல்லவே இல்ல... நன்றி சார்.
@ஜீ...ம்ம்ம்ம் வருகைக்கு நன்றி ஜீ
@jeminivivek.k நன்றி விவேக்.
Post a Comment