வசந்தகால பறவைகளாய்
பாசம் என்னும் சிறகடித்து
வான் உயர பறக்கையிலே
பாதை வழியெல்லாம்
பக்கதுணை தான் இருந்த
அவன் பண்பு அவளிடத்தே
அகிலமதில் ஆண்களுக்கெல்லாம்
அணிமுத்து அவனெனவே
அடையாளம் காட்டியதால்
ஆயுள்வரை உறவாக்கி
அகமகிழ்ந்து வாழ்ந்திடவே
இதயத்தில் இடமொதிக்கி
இரவுபகல் அவன் நினைப்பில்
இணைவதற்காய் இல்வாழ்வில்
காத்திருப்பதை அவனறிய
காரணமே இல்லை..
பாவை அவள் பார்வைபட்டு
பந்தமதில் இணையமலே
பாசத்தினால் மாளிகை கட்டி
நீங்காத அவள் நினைவை
நெஞ்சமதில் குடியிருந்தி
பாட்டாம்பூச்சிகளாய்
பறந்து வரும் இவர்களை
பல வண்ண மலரெல்லாம்
தேன் சுரந்துநின்று
தென்றலுடன் வாழ்த்து சொல்ல
வரும் கால துணை இவனேனவே
எண்ணிய வஞ்சி அவளும் -அவன்
நினைவுகளைநெஞ்சில் புதைத்தே
பாசம் கொண்ட உள்ளங்கள்
வாசம் வீசியே வையத்தில
வளம் வர வாழ்த்துக் சொல்லி
தன் வ்ழிப்பயணத்தை
துணையேது மின்றியே தொடர்கின்றாள்..
15 comments:
ஒற்றைக்குயிலின் சோக கீதம்....
கவிதைக்கு ஒரு வாழ்த்துக்கள்......
Nice!
இதயத்தில் இடமொதிக்கி
இரவுபகல் அவன் நினைப்பில்
இணைவதற்காய் இல்வாழ்வில்
காத்திருப்பதை அவனறிய
காரணமே இல்லை..
very nice
superb words..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
தமிழ் விளையாடியிருக்கிறது இந்தக் கவிதையில்..
வாழ்த்துக்கள் தோழி..
அருமை..
superb!
அப்பாடா மூச்சு விடாமல் எழுதினீங்களோ ஹா ஹா ஹா அருமையா இருக்கு வழக்கம் போல...சோககீதம்....
அப்பா... மூச்சு வாங்குதுங்க... இருங்க இன்னொரு தடவ படிச்சிட்டு வர்றேன்....
அகநானூற்றுக் கவிதை...
வரிகளில் எதுகையும், மோனையும் தூக்கலாவே இருக்கு...
Nice to read and feel...
அழகான கவிதை.. வரிகளில் தமிழ் விளையாடுகிறது ...
தமிழோடு விளையாடி உள்ளீர்கள். அருமை.
வணக்கம் பிரஷா
அருமையா இருக்கு கவிதை
அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை.அருமை
வார்த்தை கோர்வைகளில் மாயாஜாலம் வித்தை காட்டும் கவி வரிகள் அருமை
Post a Comment