கரை தொடும் அலையினை ரசித்தபடி
கற்பனை அலைகளை மனமெனும்
கரையினில் மோத விட்டு
காத்திருந்தாள் அவனுக்காய்...
ஒருதலைக்காதலாய்
வளர்த்திட்ட அவள் முடிவை
அவனிடம் சொல்லிட
அழைத்திட்டாள் அவனை
அழைப்பை ஏற்ற அவனுக்காய்
காத்திருந்தாள் கடற்கரையினிலே.......
எதிர்கால வாழக்கையினை
ஏணிபோல் ஏற்றிட இவன் வேண்டும்
என்றெண்ணியவளாய் திரும்பினாள்
எதிரினிலே அவன் நின்றான்.....
அவனை பார்த்தவுடன்
அவசரமாய் எழுந்து நின்றாள்
ஆவலுடன் அவன் நலம் அறிந்து
அமரும்படி அழைத்திட்டாள்......
இடைவெளியுடன் இருவரும்
இரு கல்லில் அமர்ந்திட - அவன்
இரு கண்கள் இயற்கையின் விந்தையை ரசித்திட
இவள் பார்வை அவனை நோக்கி ஏக்கத்துடன்....
கற்பனை அலைகளை மனமெனும்
கரையினில் மோத விட்டு
காத்திருந்தாள் அவனுக்காய்...
ஒருதலைக்காதலாய்
வளர்த்திட்ட அவள் முடிவை
அவனிடம் சொல்லிட
அழைத்திட்டாள் அவனை
அழைப்பை ஏற்ற அவனுக்காய்
காத்திருந்தாள் கடற்கரையினிலே.......
எதிர்கால வாழக்கையினை
ஏணிபோல் ஏற்றிட இவன் வேண்டும்
என்றெண்ணியவளாய் திரும்பினாள்
எதிரினிலே அவன் நின்றான்.....
அவனை பார்த்தவுடன்
அவசரமாய் எழுந்து நின்றாள்
ஆவலுடன் அவன் நலம் அறிந்து
அமரும்படி அழைத்திட்டாள்......
இடைவெளியுடன் இருவரும்
இரு கல்லில் அமர்ந்திட - அவன்
இரு கண்கள் இயற்கையின் விந்தையை ரசித்திட
இவள் பார்வை அவனை நோக்கி ஏக்கத்துடன்....
ஆறு வருடங்களாக -அவன்
ஆருயிர் நண்பனாய் அவள் வாழ்வில்
அவள் உள்ளம் அறிந்தவனாய்....
காலங்கள் ஓடுகையில்....
சுற்றத்தார் பார்வை தப்பாகிட
சுற்றுகிறாள் அவனுடன் என்றிட
சூறாவளியாய் அவள் மனம்
சுதாரிப்பின்றி தனிமையில்.....
பிறர் சொல் கேட்டு
பிறந்திட்ட உடன் பிறப்புக்கள்
பிணைந்திட்ட சந்தேகத்தில்
சொந்தங்கள் நடுவினிலே
பரிதவித்தாள் தனிமையிலே....
உடன் பிறந்த உறவுகளே
உஷ்ணமாய் நோக்குகையில்
உறவுகள் அன்பை விட - நட்பாய்
உள்ளம் அறிந்த அவனை
உடையவன் ஆக்கிட எண்ணினாள்...
தனது விருப்பத்தை
தனிமையில் அவனிடம்
சொல்லிட எண்ணியவள்
அழைத்தால் தொலைபேசியில்
அனுமதியை பெற்றவுடன்
அவளிடத்தில் உற்சாகம்.
அனைத்தும் அறிந்தவன் போல்
அவன் பார்வை அவளை நோக்கிட
அழைத்ததன் காரணத்தை
அன்பாக வினவினான்..
மோதிய கற்பனைகளை
மொத்தமும் மறந்தவளாய்
உதடுகள் தடுதடுக்க
கண்களில் ஆறுபோல்
கண்ணீர் ஊற்றெடுக்க...
நடந்தவைகளையும்
நடக்க வேண்டியவகளையும்
நாவு தடுதடுக்க கூறிமுடித்தாள்...
சில நொடிகள் மெளனமாய்
சிந்தனையில் மூழ்கியவன்....
மெளனம் கலைந்தவனாய்
தலை நிமிர்ந்து அவளை நோக்க
அவள் பார்வை முடிவை வினவ
தன்னம்பிக்கை ஊட்டியவனாய்
தன் முடிவை செப்பினான்.....
தூற்றுவார் தூற்றட்டும்
தூறலில் முளைத்த செடியாய் -எம்
வாழ்வை தொடருவோம்
தீர்க்கமாய் தன் முடிவை
செப்பினான் அவளிடத்தில்....
வீண்பழி கூறியோர் வியந்திட
வாழ்ந்திடுவோம் எனும் அவன்
வார்த்தை அவள் மனதில் நம்பிக்கை
வார்த்திட பெருமூச்சை விட்டபடி
அவன் தோளில் அவள் சாய்ந்தாள்.....
44 comments:
பாசிடிவ் சிந்தனை...
ஆரம்பத்தை பார்த்து , இது ட்ராஜடியில் முடியும் என நினைத்தேன்,,,
வழக்கத்தை மீறி நன்றாக முடித்ததற்கு நன்றி
கஷ்டப்பட்டு வாசித்து முடித்தேன்சுப்பரா இருக்கு நல்ல திருப்தி
:)
டைட்டில் முடிவை சொல்லிடுது!
Positive thoughts?
:))
அத்தனை வரிகளையும் அனுபவித்து எழுதியது போல்
அழகாக எழுதியிருக்கிறீர்கள்
கடந்த வாரம் இப்படியான ஒரு காதல் சம்பவம் என்சொந்தத்தில் இடம்பெற்றது அதனை கருவாக கொண்டு ஒரு கவிதைபடைத்தேன் காதலிப்பது தவறல்ல மற்றவர்களை வெறுத்துவிட்டு அல்லது அவர்கள் விருப்பமில்லாமல் திருமணத்தில் இணைய நாடுவதுதான் தவறு
http://hafehaseem00.blogspot.com/2010/11/blog-post_22.html#comments எனது இந்த கவிதை உங்கள் கவிதையின் முடிவாகிடக் கூடாது என்பது எனது சிறிய ஆசை
அத்தனை காதலும் நிறைவேற வேண்டியவை அதற்காக எமக்காக உயிர்க்கும் உறவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டிய கடமை எமக்கிருக்கிறது
அதன் வலி வாலிபத்தில் தெரிவதில்லை
நடுத்தர வயதடையும் போது வருந்தும் நிலை அனைவரும் அடைவதை காண்கிறோம்
இவைகளையும் நாம் உணர்த்துவது சிறப்பாகுமே...
வாழ்த்துக்கள் அருமையான கவிதை
மிகவும் அழகாக அமைந்து விட்டது நன்றி
Now ok! :)
தேர்ந்த மன ஓட்டம்...பிரதிபலிக்கும் எழுத்துக்கள்..
தொடர என் வாழ்த்துக்கள்.
கவிதை நடையில் அழகிய கதை.... ரொம்ப நல்லாயிருக்கு.
mmm..iyalbai irukku...
super..
அருமையாக கூறியிருக்கிறீர்கள்...
நான் தங்கள் தளத்திற்கு வர ஆரம்பித்த பிறகு இன்று தான் இவ்வளவு பெரிய கவிதையாய் (கதையை) பார்க்கிறேன்..
Very nice acca. different type kavithai. i like very much this.
ஒரு கவிதையில் சிறு காவியமே வரைந்து விட்டீர் தோழி........ அருமையான அன்பான வரிகள்
கவிதையில் தெறிக்கும் காதலை விட அதை எழுத்தில் உணர்த்தியிருக்கும் உங்கள் நடை மிகவும் அருமை... காட்டாறை போல எங்கெங்கோ முட்டி ஏதேதோ திசையில் செல்லாமல் தெளிந்த நீரோடையாய் ஒரே திசையில் சென்று நானே புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிமையாய் இருக்கிறது உங்கள் கவிதை ...
கவிதை அருமைங்க.
என்ன கொஞ்சம் நீளமா இருக்கு அவ்வளவுதான்.
கவிதைக்கதை நல்லாருக்கு பிரஷா.
வீண்பழி கூறியோர் வியந்திட
வாழ்ந்திடுவோம் எனும் அவன்
வார்த்தை அவள் மனதில் நம்பிக்கை
வார்த்திட பெருமூச்சை விட்டபடி
அவன் தோழில் அவள் சாய்ந்தாள்.....
.... very nice and sweet!
மிக அழகான கவிதை!
கவி நடை கதை அருமையாய் இருக்கிறது. நல்ல எழுத்தோட்டம் அழகான் முடிவு. பாராட்டுககள.
@பார்வையாளன்
நன்றி நண்பா...
@யாதவன்
கஷ்டப்பட்டு வாசித்து முடித்ததற்க்கு மிக்க நன்றி நண்பா...
@ஜீ...
நன்றி நண்பா...
@நேசமுடன் ஹாசிம்
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி..
உங்கள் கருத்தையும் வரவேற்க்கிறேன் ...
@karthikkumar
நன்றி நண்பரே....
@சே.குமார்
மிக்க நனறி நண்பரே...
@logu..
நன்றி நண்பரே....
@வெறும்பய
மிக்க நன்றி சகோதரா.......
@Aruntha
நன்றி அருந்தா.........
@dineshkumar
மிக்க நன்றி நண்பா
@"ராஜா"
மிக்க நன்றி நண்பரே...
@அன்பரசன்
நன்றி நண்பரே.. கதை தானே அதனால் தான்...
@சுந்தரா
நன்றி நண்பி....
@Chitra
மிக்க நன்றி அக்கா..........
@எஸ்.கே
நன்றி சேர்...
@நிலாமதி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அக்கா...
@Kalidoss
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...
அருமை தோழியே வாழ்த்துக்கள் .இறுதி வரியில் தோளில் "ளகரம்' மாறி இருப்பதை கவனிக்கவும்
ஃஃஃஃஃஃமோதிய கற்பனைகளை
மொத்தமும் மறந்தவளாய்ஃஃஃஃஃ
இந்தளவு பெரிரிரியயயயய கவிதையா அருமையாக இருந்தது அக்கா...
சி.பிரேம் குமார்
மாற்றியுள்ளேன்.. நன்றி நண்பரே....
@ம.தி.சுதா
நன்றி தம்பி....
சொல்ல வார்த்தைகளே இல்லை...
உங்கள் வலை பூவை இன்றுதான் பார்த்தேன் .... பார்த்தவுடன் வியந்தே போனேன்... என்ன ஒரு கலை நயம் ! இவ்வளவு காலத்தில் இப்படி ஒரு வலை பூவை பார்த்ததே இல்லை... நான் நினைக்கிறேன் உங்களிடம் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது...
மிக்க நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும்...
thooralil mullaitha sedi.....padikkum podhu ninaithu pakka nalla irukku....
@jey
நன்றி நண்பரே..
நிகரில்லை..
வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-4.html?showComment=1391682719302#c5863664444865775074
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment