நிச்சயமற்ற
நாளை பொழுது
புலரும் என்ற
நம்பிக்கையில்
கரைந்து போகின்றது
சூரியன்...
விருட்சமாய்
ஓங்கி எழுவோம் என்ற
நம்பிக்கையில்
மண்ணில் புதையுண்டு
தற்கொலை செய்து
கொள்கின்றன விதைகள்..
கடலை
சென்றடைவோம் என்ற
நம்பிக்கையில்
தட்டுத் தடுமாறி
திசைகளில் இன்றி
விரைந்து ஓடுகின்றன
நதிகள்...
திரும்பி வருவோம்
என்ற நம்பிக்கையில்
ஒவ்வொரு முறையும்
நுரையீரலை தொட்டு
வருகின்றது காற்று.
வருவான் சூரியன்
தமக்கும் வாழ்வு
கொடுப்பான் என்ற
நம்பிக்கையில்
தவமிருக்கும் மலர்கள்..
எழுந்தால்
நடக்கலாம் என்ற
அதீத நம்பிக்கையில்
தவளும் பிச்சுக்
குழந்தையின் பாதம்...
நாளைய பொழுதுகள்
நமக்காகவும் விடியலாம்
அன்று கனவில் வாழும்
உன் நினைவுகள்
நிஐயத்திலும் வாழும் என்ற
நம்பிக்கையில்
காத்திருக்கும் என் இதயம்...
7 comments:
நாளைய பொழுதுகள்
நமக்காகவும் விடியலாம்
அன்று கனவில் வாழும்
உன் நினைவுகள்
நிஐயத்திலும் வாழும் என்ற
நம்பிக்கையில்
காத்திருக்கும் என் இதயம்...
தேர்ந்தெடுத்த அருமையான வரிகள்
நம்பிக்கை வரிகள்
நம்பிக்கை ஊட்டுகிறது தோழி
அருமை பாராட்டுக்கள்
நம்பிக்கையில் தான் தினசரி நடவடிக்கைகளும் நீயும் நானும் என்பதை அழகா சொல்லியிருக்கீங்க
செம
வாழ்த்துகள் ப்ரஷா
நிஜங்களால் வரும்
மகிழ்ச்சியை விட
நினைவுகளால் வரும்
மகிழ்ச்சியே அதிகம்.
நிஜங்கள் ஒர் நாள்
நிசப்தமாய் போகலாம்-ஆனால்
நினைவுகள் நித்தம்
நிழழாடும் ஓவியங்களாய்
நிலைத்திருக்கும் என்றும்
//கடலை
சென்றடைவோம் என்ற
நம்பிக்கையில்
தட்டுத் தடுமாறி
திசைகளில் இன்றி
விரைந்து ஓடுகின்றன
நதிகள்...//
ரசித்தேன் இந்த அழகிய வரிகளை..
http://kbjana.blogspot.com/2012/03/blog-post.html
நாளைய பொழுது நமக்குத்தான். வலைச்சரம் மூலம் வந்தேன்.
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment