அதிகாலை
சூரிய ஒளியில்,
லேசாக வீசும் காற்று
பனித்துளிகளில் உரசலில்
துளிரும் பூக்கள் போன்று
அரங்கேறுகின்றது
உன்னோடான காதல்.
கண் நோக்கும்
இடமெங்கும்
பரந்தே கிடங்கும்
பசுமை நிறைந்த
வயல்வெளிகள் போல்
நீண்டே செல்கின்றது
உன் நினைவுகள்..
நந்தவனமெங்கும்
நாணத்துடன் சிரிக்கும்
பூக்கள்
சுண்டி இழுக்கின்றன
உன் கண்களை போல்..
தென்றலில் மிதந்து
அசைந்தாடும் மரங்கள் போல்
உன் கொடியிடை நடை..
ஓராயிரம் நட்சத்திரங்கள்
கூடி நின்று
கும்மாளம் போடுவதாய்
உன் புன்னகை..
இப்படி நீண்டே
செல்கின்றது
இயற்கையின் ஒட்டத்தில்
நீழலாய் ஆடுகின்றது
உன் நினைவுகளும் சேர்ந்து.
4 comments:
காற்று வெளியிடை கண்ணம்மாவின் காதலை
எண்ணிக் களிக்கும் பாரதி போல்
இயற்கையின் பேரழகில் காதலை எண்ணிக் களிக்கும்
தங்கள் கவிதை மிக மிக அற்புதம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இயற்கையும்
அதில் ததும்பும் காதலும்
அழகு
இயற்கையும் காதலும் நினைவுகளில் வருந்த விலகிச்சென்ற காதலிக்காக விட்டு விட்டு துடிக்கிறது பழாய்போன மனசு..! www.kavithaimathesu.blogspot.com
" பூக்கள்
சுண்டி இழுக்கின்றன
உன் கண்களை போல்.." இப்படி பல வரிகள் ரசிக்கும் படி உள்ளன
Post a Comment