Wednesday, August 3, 2011

Share

அந்த நிமிடத்தில்...


நேற்று தொடங்கி
இன்று வரை நீடித்த
என் உள்ளத்து உணர்வுகள்
அடங்கியே போனது - இன்று
அந்த சில நிமிடங்களில்....

காதல் என்னும் வானத்தில்
சுற்றி திரியும் பறவைகளில்
நானும் விதிவிலக்கல்ல.
அவளை காணும் வரையில்...

இனிமையான நினைவுகளினால்
இதழ் விரிக்கும் உணர்வுகள் - என்னி்ல்
தினம் தினம் அதிகரிக்க
காத்திருக்கும் கணபொழுதுகள்
பெரும் மூச்சுடனே
கரைந்தே போய் இருந்தன
இன்று வரை....

கணிசமான கணப்பொழுதுகள்
கழிகின்றது அவளுடனேயே..
இருந்தும்
தனிமையும் வெறுமையும்
எனை ஆட்கொள்ள
தவியாய் தவிந்தது மனசு...

ஏதோ..
ஒரு வித உணர்வு பிறக்க
ஒப்புவித்தேன் என்
உள்ளத்து உணர்வுகளை.
பலமாக யோசித்தவள்
பரிவாக எனை நோக்கி
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று....

27 comments:

சக்தி கல்வி மையம் said...

ஒரு வித உணர்வு பிறக்க
ஒப்புவித்தேன் என்
உள்ளத்து உணர்வுகளை.
பலமாக யோசித்தவள்
பரிவாக எனை நோக்கி
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று..// Nice lines..

குடந்தை அன்புமணி said...

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

அஞ்சா சிங்கம் said...

முதல் வருகை ........

ஆமினா said...

nice......!!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

காதல் என்னும் வானத்தில்
சுற்றி திரியும் பறவைகளில்
நானும் விதிவிலக்கல்ல.
அவளை காணும் வரையில்...>>>

காதல்... எங்கு காணினும் காதல்..

Prabu Krishna said...

அருமை தோழி. ஆணின் எண்ணங்கள் உங்களுக்கு எப்படிதான் தெரிகிறதோ!!!

இராஜராஜேஸ்வரி said...

இனிமையான நினைவுகளினால்
இதழ் விரிக்கும் உணர்வுகள் /

அருமையான பகிர்வு பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று..../

உற்சாகம் ததும்பும் அழகிய வரிகள்.

S Maharajan said...

//பரிவாக எனை நோக்கி
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று....
//
ஆஹா அருமை தோழி. இப்படி
ஒரு காதல்(லி)கிடைக்க பெற்றவன் நிச்சயம் பாக்கியசாலி தான்

Harini Resh said...

//காதல் என்னும் வானத்தில்
சுற்றி திரியும் பறவைகளில்
நானும் விதிவிலக்கல்ல.
அவளை காணும் வரையில்...//

nice Prasha :)

Chitra said...

அருமையான கவிதைங்க. பாராட்டுக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்//

ஆஹா, அழகிய உற்சாகம் தரும் வரிகள். பாராட்டுக்கள்.

Anonymous said...

காதலில் தவிப்பை அழகாக சொல்லியுள்ளீர்கள் ...

சௌந்தர் said...

ஏதோ..
ஒரு வித உணர்வு பிறக்க
ஒப்புவித்தேன் என்
உள்ளத்து உணர்வுகளை.
பலமாக யோசித்தவள்
பரிவாக எனை நோக்கி
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று....///

நல்லா பறங்க :)) நைஸ் லைன்ஸ்

கிராமத்து காக்கை said...

அழகான காதல் கவிதை

மாய உலகம் said...

//சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்//

ஆஹா... கவிதை அற்புதமாக இருக்கிறது.....உங்க டெம்ப்ளேட் அருமை... வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
தனிமையும் வெறுமையும்
எனை ஆட்கொள்ள
தவியாய் தவிந்தது மனசு...

/////////

இதுதான் காதல் மனசு...

அசத்தலான கவிதை

Prem S said...

super love poem super

vidivelli said...

கணிசமான கணப்பொழுதுகள்
கழிகின்றது அவளுடனேயே..
இருந்தும்
தனிமையும் வெறுமையும்
எனை ஆட்கொள்ள
தவியாய் தவிந்தது மனசு...


நல்ல கவிதை...
படத்துக்கு அழகூட்டுகிறது கவிதை..
வாழ்த்துக்கள்..

Anonymous said...

அருமையான கவிதை..பாராட்டுக்கள்...
அழகிய வரிகள்..
வாழ்த்துக்கள்...

பிரணவன் said...

காதல் என்னும் வானத்தில்
சுற்றி திரியும் பறவைகளில்
நானும் விதிவிலக்கல்ல.
அவளை காணும் வரையில்...
காதலுக்கு எல்லையே இல்லை...
அவளை கண்டபின் என் காலம் என்னுடையது இல்லை. . .அவளுக்கா மட்டுமே துடிக்கின்றேன். . .பறக்கின்றேன். . .அருமை அருமை. . .

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

Unknown said...

//தனிமையும் வெறுமையும்
எனை ஆட்கொள்ள
தவியாய் தவிந்தது மனசு...//

தவிக்கும் உங்கள் மனது ,
நல்லதொரு கவிதை எங்களுக்கு தர காரணமாகி இருக்கிறது.

கவிதை பூக்கள் பாலா said...

too good friend

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை. வரிகளில் காதல் வழிகிறது.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

ஹேமா said...

சந்தோஷமான ஒரு கவிதை !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி கருன்