Saturday, April 30, 2011

Share

உழைப்பாளிக்கு.....


தேவைகளை பூர்த்தி செய்ய
தேடலில் இறங்கியவர்
ஆசைகள் அதிகரிக்க
ஆர்வமும் பெருகியதால்
அவற்றினை நிறைவு செய்ய
வேலைகளை தேர்தெடுத்து
சேவைகளை தாம் பகிர்ந்தனர்

சோம்பல்தனை தகர்தெறிந்து
சீரும் சிறப்புடனே நாட்டினிலே
செல்வ வளம் செழிப்பதற்காய்
சிரமமது பாராது உழைக்கிறார்
உடல், உள உழைப்பதனை
உவர்ந்துநீர் வழங்குவதால்
உற்பத்தி பெருகிடவே
உதயமாகும் பொழுதெல்லாம்
உளமகிழ்ந்து வாழ்ந்தனவே
உயிர்களெல்லாம் இவ்வுலகில்.

உயிர்களெல்லாம் உள மகிழ
உதிரத்தை உரமாக்கி
உழைத்திடும் உழைப்பாளி நெஞ்சங்களை 
உவ மகிழ்ந்து வாழ்த்துவோம்.

Thursday, April 28, 2011

Share

இவள் - அவன் - அவள்...


வசந்தகால பறவைகளாய்
பாசம் என்னும் சிறகடித்து
வான் உயர பறக்கையிலே
பாதை வழியெல்லாம்
பக்கதுணை தான் இருந்த
அவன் பண்பு அவளிடத்தே
அகிலமதில் ஆண்களுக்கெல்லாம்
அணிமுத்து அவனெனவே
அடையாளம் காட்டியதால்
ஆயுள்வரை உறவாக்கி
அகமகிழ்ந்து வாழ்ந்திடவே
இதயத்தில் இடமொதிக்கி
இரவுபகல் அவன் நினைப்பில்
இணைவதற்காய் இல்வாழ்வில்
காத்திருப்பதை அவனறிய
காரணமே இல்லை..

பாவை அவள் பார்வைபட்டு
பந்தமதில் இணையமலே
பாசத்தினால் மாளிகை கட்டி
நீங்காத அவள் நினைவை
நெஞ்சமதில் குடியிருந்தி
பாட்டாம்பூச்சிகளாய் 
பறந்து வரும் இவர்களை
பல வண்ண மலரெல்லாம்
தேன் சுரந்துநின்று
தென்றலுடன் வாழ்த்து சொல்ல
வரும் கால துணை இவனேனவே
எண்ணிய வஞ்சி அவளும் -அவன்
நினைவுகளைநெஞ்சில் புதைத்தே
பாசம் கொண்ட உள்ளங்கள்
வாசம் வீசியே வையத்தில
வளம் வர வாழ்த்துக் சொல்லி
தன் வ்ழிப்பயணத்தை
துணையேது மின்றியே தொடர்கின்றாள்..



Sunday, April 24, 2011

Share

அநாதை..


அவதரித்த அரை நொடியில்
அன்னை அருகே அருகாமலே
அரவணைக்க யாருமின்றி
அறியாமலே அழுகின்றேன்
அகிலமதில் எனை வி்ட்டு
தந்தை தன் வழி பற்றியே
தாய் இவளும் - தன் 
பயணத்தினை தொடர்ந்ததினால்

பசியறிந்து பால் ஊட்ட
பக்கதுணை யாருமின்றி
பாட்டிவழி சொந்தமின்றி
பதறியே துடிக்கின்றேன்

சொந்தபந்தம் ஏதுமின்றி
சொல்லியழ வழியுமின்றி
துன்பத்தில் எனை புதைந்து - விட
துளிநீர் கூட மிஞ்சாது
பஞ்சத்தில் வாடும் எனக்கு
பட்டமும் வழங்கி
கெளரவிக்கிறது சமூகம்
அநாதை என்றே என்னை..

Thursday, April 21, 2011

Share

பாவப்பட்டவளாய்....


விதி தேவன் வரைந்திட்டான்
விடியலில்லா இரவுகளாய் - என் மனம்
இருட்டில் இருக்க சபித்திட்டான்...
இறைவனிடம் வரம் கேட்டேன்
என்ன பாவம் நான் செய்தேனென்று
பதில் ஏதும் இன்றி
பாவங்களை சுமந்த
வாழ்க்கை வாழ பிறந்தவளாய்
வாழ்கின்றேன் பாரினிலே..
பரிகாரம் செய்து பாவம் போக்கி
  வாழ முயற்சிக்கிறேன் நானும்
ஆயிரம் போராட்டங்கள் மனதினுள்
தோல்வி மட்டும் எனை சூழ

சோர்வின்றி வாழ்கின்றேன் நடைமுறையில்
உறவுகள் நடுவில் போலியாய் சிரித்து
தனிமையில் மனம் சோர்ந்தவளாய்..

Thursday, April 14, 2011

Share

நாமும் வாழ்த்துவோம்..

 எனது நண்பன் சிறு வயிதினிலே தாய் தந்தை இழந்து தனித்த போது தாய்க்கு தாயாக இருந்து வாழ்வில் வழிகாட்டி சென்ற தனது அப்பம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தினை கவிதையாய் இங்கே பகிர்கின்றான்.
85 வது பிறந்தநாளை கொண்டாடும்  அப்பம்மாவுக்கு  எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
பாசத்தின் உறைவிடமே
பரந்த இப் பூமிகூட
போதுதில்லையும்
பாசத்திற்கு எல்லை சொல்ல...

தாய்மடி இழந்த போதும்
தலைவலி உணர்ந்த போதும்
உம்மடியே தந்து
உயிர் காத்த அன்னை நீ...

தந்தைதனை எமக்களித்து - எம்
தந்தையுமாய் தான் இருந்து
அறிவுரைகள் பல பகிர்ந்து
அகிலமதை திகழ வைத்தீர்...

கல்விக்கு ஆசானை
கடமையிலே சேவகியாய்
நோயுற்ற வேளையிலே
உடனிருந்து தாதியுமாய்
தோள் கொடுத்தே தோழியுமாய்
அப்பம்மா என்னும் உம்வுறவில்
அப்பா, அம்மா அன்புடனே
அறிந்து கொண்டோம்
பாசத்தின் பல வகையை
உங்கள் ஓர் உருவில்.

நாம் வாழும் காலமெல்லாம்
வளமுடனே எம்மருகே
எந்நாளும் நீர் இருக்க
நாளும் நாம் நலம் வாழ - நீங்கள்
தினம் அழைக்கும் ஆண்டவனை
நாமும் அழைத்தே
வரம் வேண்டி வாழ்த்துகின்றோம்..

-கம்ஷன்.-

Wednesday, April 13, 2011

Share

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


Tuesday, April 12, 2011

Share

அண்ணனுக்கு ஓர் வாழ்த்து.....

பல வண்ண பூக்கள்
அலங்கரிக்கும் சொந்தமதில்
உள்ளப் பாசமலராய்
வாசம் வீசியே
என்னோடு இணைந்தவரே

புவியிதனில் உம் வரவுக்காய்
புலர்ந்திருந்த பொழுதுபோல
பூவினம் மொட்டவிழ்க்க
புல்லினம் சிறகடிக்க
புலகாங்கிதம் அடைந்தனவே
சூழ்ந்திருந்த சொந்தமெல்லம்...

புதுவசந்தம் வீசிடவே
புறப்படும் முயற்ச்சி எல்லாம்
பூந்தென்றலுடன் இணைந்தே
புன்னகையை கொடுத்திடவே
இன்பமே உறவாக பொழுதெல்லாம்-உம்
இல்லமதில் இதம் வீச.....

அகிலமதை அலங்கரிக்க என்
அண்ணணாய் உருவெடுத்து
அவதாரித்த இன் நன்னாளில்
அனைத்து நலனும் பெற்றே
அகம் மகிழ்ந்தே என்னாளும் வாழ்ந்திடவே
ஆண்டவன் துணைநாடி- நானும்
அன்புடனே வாழ்த்துகிறேன்.

(தனது அண்ணனுக்காக வாழ்த்தும் ஹம்சன்)

Monday, April 11, 2011

Share

அவளுக்காய்...

 விதியேன எண்ணியே
விலகிட்ட போதிலும்
வழியதில் வந்தும்
நிழல் போல் வலியது
தொடருதே என்னை

உறவுகள் உருவாகும் போது
உணராத அர்த்தங்கள்
உருமாறும் போது
உதிரத்தை உறிஞ்சுதே
ஊமையாய் இருந்தே..

வஞ்சம்மில்லாத அவள்
நெஞ்சமதில் - நான்
நேசிக்கப்பட்டதினால்
வஞ்சியவள் வாழ்வில்
வளம் மிகுந்து ஒளிர்வதற்காய்
அன்பு எனும் அணையாய்
அகல்விளக்குக்கு ஒப்பாய்
மாய விம்பத்தினால்
திரியும்மிட்டு அதில்
யாரும் அறியாமலே
அகம் வடிக்கும்
கண்ணீராய் என்னையாக்கி
அதில் ஒளியை தேடுவதை
எனைத் தவிர யார் அறிவர்

Saturday, April 9, 2011

Share

அறியாமை....


என் வாழ்வின் பயணத்தில்
எங்கிருந்தோ வந்தவளே - எனை
தனதாக்கி சென்றதனை
நானே அறியவில்லை
வழிமாறி வந்ததினால்
பழியேதும் வந்திடுமோ?


அழியாத என் பாத சுடுகளில்
வழி தேடி வந்து என்னை - சொந்தம்
குழி தோண்டி புதைந்திடுமோ?

வெளியேற முயலுகிறேன்
துளிகூட முடியவில்லை - அவள்
இதய குழியில் விழுந்த என்னால்...

Wednesday, April 6, 2011

Share

காதல் தோல்வி....


சொல்லிக் கொடுத்திட்ட
பள்ளிக் கணக்குடனே
மன பாசத்தையும்
அள்ளிக் கொடுத்ததால்
அதில் மூழ்கிட்டாள் அவளும்

சோகம் மறந்து
துள்ளிக் திரிகையிலே
உள்ளம் கொள்ளை போனதினால்
கள்ளத்தனமாகவே அவர்கள்
காதல் வளர்த்தனர்.

ஒட்டி இருந்த சொந்தமெல்லாம்
திட்டியே தீர்த்தமையால் தினம்
வெட்டியே விலகி பகையினை
கிட்டிய நாட்டுக்கு சென்று - தாலி
கட்டியே வாழ்வதற்கு - இருவரும்
திட்டம் வகுத்தார்கள்

பெட்டியை கையிலேந்தி - கால்
முட்டியின் வலி மறந்து
எட்டியே பார்த்து நின்றான் தெருவை

கட்டிக் காத்து வளர்த்திட்ட
பெற்றவர் சிந்தையது
முட்டியே மோதியதால் மூளையை
வெட்டியே விட்டுவிட்டாள்
வெளிக்கிட்ட பயணத்துடன்
விரும்பிய உள்ளத்தையும்..

உயிரிலே கலந்திட்ட அவன்
உருவமதால் உடைந்த மனம்
ஊரார் எய்திட்ட - வார்த்தை
அம்புகளின் அவமானத்தினாலும்
மாத்திரையை துணைக்கணைத்து
மரண தேவதையின்
மடியினிலே தலை சாய்ந்தாள்..

Saturday, April 2, 2011

Share

தோழியே....

எங்கெங்கோ பிறந்து
எல்லையற்று மிதங்கும்
எண்ணங்களை எம் கைக்குள்
அடக்க நினைப்பது 
நிலையா? நியாயமா?

பிறக்கின்றே போதே
விதித்தி்ட்ட விதியை
விலகிட்டே நீயும்
வென்றிடலாமா வாழ்வை
நினைக்கின்ற போதே
கனக்கின்ற மனதை
களைத்திடத்தான் ஏதும்
மார்க்கமுண்டா தோழி?

வாழ்வின் உயர்ச்சிக்காய்
முயற்சிக்கின்றோம் தினம் - ஆனாலும்
மூழ்கியே எழுகின்றோம்
விதியெனும் சமூத்திரத்தில்..

விதிவழியாய் வரும்
வலியானது இங்கே
விழி வழியாய் விடும்
கண்ணீரோடு சங்கமம்