Friday, November 17, 2017
Friday, November 11, 2016
Share
புன்னகைக்கு பஞ்சமிங்கு...!
என்னையறியாது
ஏதோ ஒரு ஏக்கம்..!!!
ஏழ்மையாய் என் உள்ளம்
ஏதுமறியாது தவிக்கிறது...!!!
ஏக்கமது இறக்கிபிடிக்கிறது
உள்ளமது உறங்க மறுக்கிறது..!!
விடைதேடி வினவுகின்றேன்
விடைதர யாரிங்கு....??
கண்ணீருக்கு கருவுண்டு
கருத்துடன் கண்டுவிட்டால்
காலமது கனித்திடும்
காதலும் இனித்திடும்-இருந்தும்
வினவிடவும் மனமும் இல்லை
விடைதேட முயலவில்லை..!!
புரிந்துணர்வு குறைந்ததினால்
புன்னகைக்கு பஞ்சமிங்கு...!
இரக்க குணம் வற்றியதால்
இரணியனாய் பலர் உள்ளம்..!!
நீரில்லா குளத்தினிலே
இரைதேடி அலைகின்றேன்..!!
விடைதேடி அலைகின்றேன்
கிடைக்குமென்ற நம்பிக்கையில்..!!
tholi Pirasha
11.11.2016
tholi Pirasha
11.11.2016
Sunday, October 30, 2016
Share
என் வாழ்க்கை.
நான்கு சுவர்களுக்கு நடக்கும்
அரச ஆட்சிக்கு
மாற்றம் ஒன்றை
வேண்டி நின்றேன்.
நகரத்தை மட்டுமன்றி
உலகையும் எதிர்கொள்ள
தற்துணிவு கொண்டு
களமாட எண்ணினேன்
காலத்தின் சுழற்சியும்
குடும்ப பிணைப்பும்
சூழ்ந்திருப்போரின் சதியும்
கட்டிப் போட்டு
தனிமையாக்கின
வெளிநாட்டு வாழ்க்கை எனும்
தாரக மந்திரத்திற்குள்....
Tholi Pirasha
31.10.2016
Friday, June 28, 2013
Thursday, June 13, 2013
Share
வாழ்வில் ஆயிரம் பாடம்
சொந்தங்கள் சொர்க்கமே-அவர்கள்
சுய குணங்கள் தெரயும்வரை...!
நல்லதாய் நீ உள்ளவரை
நட்பும் அதுவரை நலமே ...!
உன் முன் சிரிப்பவர்கள்- எல்லோர்
உள்ளத்திலும் உண்மையில்லை...!
உதட்டோரம் தேன் மொழிகள்-அவர்
மனதோரம் கொடிவிஷங்கள்...!
தேன் சொட்டும் வார்த்தைகளை
நம்பி தேளாக துடிக்காதே- நாளை
வான் கொட்டும் மழைபோல-உன்
விழி கொட்டும் கண்ணீர்த்துளிகள்...!
உன்னை புரியாமல் பல பேச்சு
புரிந்திடாதோர் முன் என்ன பேச்சு...!
காற்றுக்கேற்ப வழைந்து கொடுக்கும்
நாணலாய் நீ இருந்தால்...!
அவர் அவர் மனதிற்கெற்ப-நீயும்
வழைந்து கொடுக்க நேர்ந்துவிடும்...!
ஆலமரத்தின் ஆணிவேராய் நீயிரு
சூறாவளி வந்தாலும்
சரிந்திடாது உன் உள்ளம்...!
கூடிவரும் கூட்டம் நாளை ஓடிவிடும்
உண்மை பாசமுள்ள கூட்டம்
உன்னை என்றும் தேடி வரும்..!
நினைவுகளை தரும் சொந்தம்
நிழலாய் தொடர மறப்பது ஏனோ...?
தேவைக்கு தேடி வந்து
தேவையில்லையென தவிர்த்திட
உறவுகள் என்ன ஜடபொருளோ????
உறவுகளுக்கில்லை அரவணைப்பு
உணர்வுகளுக்கில்லை மதிப்பு..!
ஊரவர் முன் நடிப்பு-உண்மை
அன்புக்கு இல்லை மதிப்பு...!
ஆண்டவன் போடும் கணக்கு-வாழ்வில்
ஆயிரம் பாடம் நமக்கு-யாவும்
அனுபவம் ஆனது எமக்கு...!
--தோழி பிரஷா--
14.06.2013
Share
என் செல்ல மகளே..!
ஆனந்த யாழை
அன்புடன் மீட்டுகிறாய்..!
ஆயிரம் சொந்தங்களை
அன்பால் கூட்டுகிறாய்..!
தாயே தெய்வமென
தலைவணங்கும் தேவதையே..!
தந்தைக்கு என்றும்
தனி அன்பு தருபவளே..!
தோட்டத்து ரோஜா பார்க்குதடி
தேவதை உனக்காய் புக்குதடி..!
வானத்து நிலவு பார்க்குதடி
வண்ணமகள் அழகை கூட்டுதடி...!
என் தேவதை நீயடி-உன்
புன்னகை எனக்கு போதுமடி..!
அள்ளி அணைத்தால்
ஆயிரம் துன்பங்கள் ஓடுதடி..!
உன் மொழி எனக்கு போதுமடி
உலகை மறந்து வாழ்வேனடி..!
-தோழி பிரஷா-
07.06.2013
Subscribe to:
Posts (Atom)







