Thursday, June 13, 2013

Share

என் செல்ல மகளே..!

ஆனந்த யாழை
அன்புடன் மீட்டுகிறாய்..!
ஆயிரம் சொந்தங்களை
அன்பால் கூட்டுகிறாய்..!

தாயே தெய்வமென
தலைவணங்கும் தேவதையே..!
தந்தைக்கு என்றும்
தனி அன்பு தருபவளே..!

தோட்டத்து ரோஜா பார்க்குதடி
தேவதை உனக்காய் புக்குதடி..!
வானத்து நிலவு பார்க்குதடி
வண்ணமகள் அழகை கூட்டுதடி...!

என் தேவதை நீயடி-உன் 
புன்னகை எனக்கு போதுமடி..!
அள்ளி அணைத்தால் 
ஆயிரம் துன்பங்கள் ஓடுதடி..!
உன் மொழி எனக்கு போதுமடி
உலகை மறந்து வாழ்வேனடி..!

-தோழி பிரஷா-
07.06.2013
Share

மனித வாழ்வில்..!

வாழ்க்கை
அது பட்டம்
போன்றது!
நுாலைப் பிடித்திருப்பவரின்
திறமையின் நிமித்தம்
அது உயரப் பறக்கும்.
அதுபோல்
வாழ்க்கையும்
பாசம் எனும்
பிணைப்பில் சரியாக 
அமைந்து விட்டால்
வேதனைகளும் 
சோதனைகளும்
வேண்டாத 
விருத்தாளிகளாவர்
மனித வாழ்வில்..!

-தோழி பிரஷா-
26.05.2013
Share

உள்ளம்...!


பாசம் கொண்ட 
உள்ளங்கள்
ஏனோ..!
பாசாங்காய் பேசி 
மறையும் போது
வேர் அறுந்த மரமாய்
உள்ளம் வாடி தான் 
போகின்றது...!

-Tholi Pirasha-
24.05.2013
Share

வாழ்வில்...!

காதல்..!
சிரித்து வாழ
கற்றுக் கொடுத்தது...!

நட்பு...!
வலியால்
துடிக்கும் போது
எழுந்து வாழ
கற்றுக் கொடுத்தது...!

-தோழி பிரஷா-
23.05.2013
Share

தேடி தேடி தோற்றேன்..!

எங்கே 
பாசமான உள்ளம்..!
உண்மையான பாசம்..!
விசுவாசமான நேஷம்...!
எதற்காகவும் என்னை 
இழக்காத உறவு...!
எனக்காகவே வாழும் 
ஜீவன்...!
தேடி தேடி தோற்றேன்..!
தோல்வியே வாழ்வானது
யாவுமே போலியானது..!

-தோழி பிரஷா-
22.05.2013
Share

ஒரே ஒரு சொர்க்கம்

காலத்தின் 
ஆளுகைக்குள்
எங்கும் கிடைக்காத
ஒரே ஒரு
சொர்க்கம்
அம்மா.

-தோழி பிரஷா-
12.05.2013
Share

மனதின் போராட்டம்...!

நேற்றய பொழுதில்
நிச்சயம் உன் 
மனதை ஆழமாய் 
தெரிந்து கொண்டேன்
உன்னுள் நானில்லையென..!

துடுப்பில்லா படகாய்
தள்ளாடும் என் மனம்
புரிந்திடா உன் முன்
போலியாய் பேசிடத்தான்
முடியவில்லை...!

என் மேல் 
பலமுறை வலியெனும் 
நெருப்பை வீசி சென்றாய்...!
மிண்டும் அணைத்திடும்
நீராய் என் முன் நீ!!!!

ஆனால்
அணையாத வலி தீயை
அள்ளி வீசி 
மறைந்தாய் நேற்றய 
பொழுதினில்...!
அணைத்திட என்னாதே..!
உன்னையும் 
வலியெனும்
தீ பற்றி கொள்ளும்..!

உன் எண்ணங்கள் மாறலாம்
உடை நடை மாறலாம்
பாசங்கள் மாறலாம்
என் மேல் வீசிய வலியனை
உன்னை நம்பும் 
இன்னொருவர் மேல்
வீசிவிடாதே...!

உன் எண்ணம் போல்
யாவும் அமையாது..!
நீ நினைப்பது போல்
எல்லோர் உள்ளங்களும்
இருக்காது..!
மீண்டும் தப்பு செய்யாதே
மீண்டிட முடியாது 
துடிக்காதே...!

உன்னை நம்பும் ஜீவனை
உயிருள்ளவரை 
உயிரை கொடுத்து 
காத்து நில்..!

உன் வாழ்வில் 
யாவும் என்னுடன்
முடிவுற வேண்டும்
உன்னிடம் பாசத்துக்காய்
யாரையும் ஏங்க வைத்த 
ஏழ்மை படுத்தி விடாதே..!

பணத்தில் வறுமை-மனதில்
பாதிப்பு ஏனோ குறைவு..!
பாசத்தில் வறுமை
புற்று நோயாய்
நாளும் இறக்க 
வைத்து விடும்...!

-தோழி பிரஷா-
03.05.2013
Share

என்னுள் நீ...!

பெளர்ணமிகள் பல
கடந்து விட்டன
எனினும்
அவள் நினைவுகள்
மட்டும்
பட்டை தீட்டிய
வைரமாய் 
என்னுள்.....

-தோழி பிரஷா-
27.04.2013