Friday, February 12, 2010

Share

மரணத்தின் வேதனை….காதல்!

ன்னிடத்தில் கொண்ட காதல் - சொல்ல
உலகத்தில் மொழி இல்லை எனக்கு
உன்னிடத்தில் சொல்ல – அதனை

ண்மையில் தைரியம் இல்லை – அதனால்
என்னை நான் வருத்திக் கொண்டு
எனக்குள் அதை புதைத்துக் கொண்டேன்
எனக்குள்ளே புதைத்த காதல்
என்னை இங்கு வாட்டுதம்மா…..!
Share

மனிதா நீ மாறவேண்டும்.....!

பிறப்பிற்கும் இறப்பிற்குமான
இடைவெளி வாழ்க்கை-அந்த
நீரோட்ட நீட்சிக்குள்
இன்பம்,துன்பம்.........
உயர்வு,தாழ்வு.....
 மாறி மாறி நகர்கிறது-மனித
வாழ்க்கைப் பயணம்
மனிதர்கள் பலவிதம்-அவர்
வாழ்க்கை ஒருவிதம்-அதில்
காணும் மாற்றங்கள்
ஏராளமே............

Thursday, February 11, 2010

Share

பிறவி

 பிறக்கின்றோம் பூமியல்
பிறவி  பெற்றது ஆறு அறிவு மனிதனாய்
பின் பூமியில் எம் வாழ்வு
பின்தள்ளப்பட்ட ஜந்தறிவு ஜீவன்களாய்

அறிவில் சிறந்தது மனிதப்பிறவி-ஆனால்
அன்பின் பிறப்பிடம் ஜந்தறிவு ஜீவன்களிடம்
Share

வளர்பிறையாய்...

ஓடுமும் ஓர் நாள்
ஒதுங்கிடும் கரையினில்..
வளர்பிறையானால் 
தேய்பிறை உண்டு.....

வளர்ந்திட்ட உன் நினைவு
வளர்பிறையாய் மட்டுமே
வளர்கின்றன என்னுள்...


Wednesday, February 10, 2010

Share

மௌனம்...

 உன் முகம் காணுகையில் 
உதட்டோரம் மெளனம்........
ஊமையாய் வார்த்தைகள்
ஊன்றியது மனதுள்.....

உன் மேலான  என் காதல்
உறங்கியது என்னுள் 
ஒருதலைக் காதலாய்......

Saturday, January 30, 2010

Share

தனிமையிலே....

காத்திருந்தேன் அவனுக்காய்
காணவில்லை அவன் நிழல்
காதலில் தோற்றுவிட்டேன்
காதலின் பிரிவாலே.....

பிரிந்திட்ட உன் பிரிவு
நிரந்தரம் என்றறிந்தும்
தேடுகிறேன் உன்னை
கூறிட என் கதையை......

தனிமையில் சில நிமிடம்
தவிப்பினில் சில நிமிடம்
இருட்டினில் அழுவதால்
அறிந்திடர் யாரும்......





Friday, January 29, 2010

Share

உன் நினைவலைகள்..

 இரவின் பிரிவில்
எனை தொடரும்
நிழல் பிரிகிறது
ஊர் உறங்குபொழுதிலும்
எனை விட்டு பிரியாமல்
தலையணை கண்ணீர்
தருகிறது
உன் நினைவலைகள்...l
Share

கண்ணின் வேதனை....

 அவனை கண்ட நாள் முதல்
இமைகள் துடிக்க மறுத்தன
விழிகள் தூங்க மறுத்தன
இருப்பினும்
விழிமூடி தூங்கினேன்
தூக்கத்திலும் கனவாக அவன்....

காதலில் தவித்தன என் மனம்
காதலை சொல்லிட துடித்தன உதடுகள்
தேடின என் கண்கள் அவனை
காட்சியாய் காதலியுடன்
கலகல சிரிப்புடன் என் எதிரில் அவன்...