Thursday, January 17, 2013
Wednesday, January 16, 2013
Share
புரியவில்லை..
பாசங்கள் பறிபோகின்றதா?
பாசங்கள் கூட வேசமானதா?
புரியவில்லை..
பாசத்தால் இங்கே
பாவப்பட்டவளாய்
பரிதவிக்கின்றேன்...
எங்கு உண்மை பாசம்
தேடி தேடி தோற்றேன் என்பதா?
தோற்கடிக்கப்பட்டேன் என்பதா?
புரியவி்ல்லை...
கண்கள் கூட கசிய மறுக்கின்றன
கல்லாகிய மனிதர்களால்..
வெந்நீரில் மேலே வாழ்வதாய்-மனம்
வேகின்றது உஷ்ணமாய்...
வெறுத்து ஒதுக்கிட நினைக்கின்றேன்
வேதனைகள் முன் வந்த நிற்கின்றது
உரிமையே இல்லாத உறவுகள் எதற்கு
உள்ளம் கேட்குது என்னிடம்
பதில் என்னவென்று புரியவி்ல்லை...
கசிய மறுக்கும் மனங்கள் நடுவே
கல்லெறிபட்ட மான் ஆனேன்
பாசத்தால் அணைபோட்டு
வளர்த்திட்ட உறவுகள் எல்லாம்
பாசாங்கு செய்து மறைகின்றன
பாழாய் போன சுயநலத்தால்..
மனிதர்களையும் புரியவில்லை
நேரத்துக்கு நேரம் மாறும்
அவர்கள் மனங்களையும்
புரியத்தான் முடியவி்ல்லை.....
Tuesday, January 15, 2013
Share
உணர்வுகள்.
அன்று
உன் முகம்
காணாத நேரமதில்
முரண்பட்டு
வெளியானது
முரண்டுக்குணம்!
அறியும் வயதிருந்தும்
அறிய முடியாத
சூழ்நிலை கைதியாய்
உணர்வுகள்.
தலைக்கேறிய
கோபம்
தணிய மறுத்த
தனிமையின் கொடுமையது!
குழந்தையாய்
சிரிக்கின்றாய் இன்று
கூனிக்குறுகி
தலை குனிகிறது
உணர்வுகளுடன்
முரட்டுக்குணமும்!
பாவம் போக்கிட
புலம்பி அலைகிறேன்
நெஞ்சில் சுமந்து
திரிகிறேன்.
நாமத்தை உச்சரிக்கிறேன்
இருந்தும்
மீண்டும் ஒரு
வன்முறையாய்
தடைகள் விதிக்கிறது
தலைமை!
ஐ.நா சென்று
முறையிட முடியாத
பாவியாய்
மீண்டும் ஒரு
கைதியாய்
போராடிக் கொண்டிருக்கிறேன்...
Monday, January 14, 2013
Share
உன் நினைவுகளை சுமந்தபடி.
பரந்து
இருட்டிக் கிடக்கிறது
வானம்.
அதில்
ஆங்காங்கே
பூத்துக் கிடக்கிறது
நட்சத்திரங்கள்
மனிதர்களின்
இன்பமும் துன்பமும் போல..
வானத்து சூரியன்
மறைந்து போயாச்சு
உச்சத்து நிலவும்
பயணிக்க தொடங்கியாச்சு,
ஊரும் உறங்கி
வெறிச்சோடிக் கிடங்கிறது
தெருக்கள்.
ஆனால்,
ஓய்வின்றி
துடித்துக் கொண்டிருக்கிறது
இதயம்
மறக்க முடியாத
உன் நினைவுகளை
சுமந்தபடி.
-தோழி பிரஷா-
Thursday, December 6, 2012
Share
மாறாத என் மனதோடு..!
நம்பிக்கையை தொலைத்து
நாளாகி லிட்டது....!
நீ சொல்லும் வார்த்தைகளை
நம்பிடத்தான் சொல்கின்றாய்...!
நிஜம் எதென தெரிந்திடும்
திறன் இருந்திருந்தால்
நிம்மதியாய் உறங்கிட முடிந்திருக்கும்..!
நடைமுறைக்கு ஏற்ப
மாறத்தான் முடியவில்லை
தெரிந்திருந்தால் நானும்
சந்தோஷமாக இருந்திருப்பேனோ?
மாறும் மனிதர்கள் நடுவில்
மாறாத என் மனதோடு
தினம் போராடுகின்றேன்....!
Subscribe to:
Posts (Atom)
+copy.jpg)





+copy.jpg)

