Tuesday, September 4, 2012

Share

அப்பாவின் பிரிவு.




நிச்சயமற்ற
இந்த உலகில்

தினம் தினம்
வந்து போகும் 
ஆயிரம் உறவுகள்


கருவறையில் 

களம் அமைந்து
வீரியம் மிக்க வித்தாக
அம்மாவுக்கு எனை சொந்தாக
புது உலகம் படைத்தவர் அப்பா.

ஈரைந்து மாதங்கள்
ஓர் உடலில் 
ஈருயிராய் வாழ்ந்துreep
தொப்புள் கொடியறுந்து
தரை விழும் நேரம்
தலைமறைவானது
அப்பா எனும் உறவு

பாசம் எனும் பிணைப்பில்
அப்பாவின் அரவணைப்பு
அஸ்தமனமானதில்
அவதியுறும் உறவாய்
அம்மாவும் நானும்

அம்மாவின்
கண்களின் ஓரம் பூக்கும் 
கண்ணீர் துளிகளின் 
வலி சொல்லும்
தொலைவாகிப் போன
அப்பாவின் பிரிவு.

Share

தாயாய் நானும் ...



கருவறை சுமந்து
உன் துயர் தீர்த்து
புவிதனில் தவழ விட்டு
பரலோகம் நீ போனாய்...
தலைபிள்ளையா நானும்
தரணியில் உதத்தால்
உன் பொறுமையின் வடிவில்
குடும்பம் எனும்
சுமை சுமக்கிறேன்
தாயாய் நானும் 
Share

உன் முக நிழலில்...



அம்மாவாக
 நீ இருப்பதால்
ஒளி தரும் 
உன் முக நிழலில்
கரையோதுங்கும் 
நேரங்களில்
இன்பத்தில் 
தள்ளாடும் 
குழந்தையாய் நான்.
Share

அத்மாத்தமான உறவில்



நிலவிலும்
பிரகாசமான நீ
என் கையில்
தவழும் போது
குழந்தையாய் நீயும்
தாயாய் நானும் மாறும்
அத்மாத்தமான உறவில்
திளைக்கும் நம் 
காதல்.
Share

என் உள்ளம்...!!!



கடும் வரட்சிக்குப் பின் 
பெய்த மழை போல
உன் பார்வை பட்டதினால்
செழிப்படைந்தது 
புதிதாய் பிறப்பதாய் 
ஆர்ப்பரிக்கின்றது 
என் உள்ளம்...!!!
Share

என் வாழ்வு...



பலருக்கு தெரிந்திட 
என் வாழ்வு
பௌர்ணமியாய்
மிளிர்கின்றது...
எனக்கு மட்டுமே
தெரிந்திடும் 
என் வாழ்வு 
தேய்பிறையென...
Share

என்னுள்ளே .....



பாசம் எனும் நூலெடுத்த
வானுயர பறந்தவளை
நூலை அறுத்து
பாதாளத்தில் தள்ளிவிட்டாய்
தனிமையிலே
பரிதவிக்கும் என் உள்ளம்
யாருக்கு புரிந்திடும்???
என்னுள்ளே யாவும்
 புதைந்து போகட்டும்
Share

வலிகளாய் நீ.


என் 
கடந்த கால
நாட்குறிப்புகளை 
புரட்டிப் பார்க்கிறேன்
இன்பமான நாட்கள்
அனைத்தும்
உன் பெயரையே
பதிவு செய்துள்ளன.
ஆனால்..
இன்றைய தினங்களை
பதிவு செய்ய முனைகிறேன்
யாவும் வலிகளாய்
நீ.