இன்று எனது வலைதளம் வருகை தரும் அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வருக வருக என வரவேற்கின்றேன்( ஓர் ஆண்டு பூர்த்திக்காக)
2009 இல் இலங்கையில் வசித்து வரும் காலப்பகுதியில் எனக்கு பிளாக் என்றால் என்னவென்று தெரியாது. என் நண்பன் பிளாக் பற்றி கூறினான். எனக்கும் ஆரம்பிக்கனும் என்ற ஆர்வம் இருந்தாலும் சொந்தமாக கணினி இல்லாமையால் யோசித்தேன். இருப்பினும் எப்படி என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் 2009 வைகாசி
தகவல் தொலில்நுட்ப செய்திகள் வலயத்தை தொடங்கினேன்
(பிளாக் பற்றி படிப்பதற்காக ஆரம்பித்த தளம்) 2009 இல் 2 பதிவுகள் மட்டுமே பதிவிட்டேன் அது சோகக்கதையுங்க...
பின்பு கணினி கற்றுக்கொண்டிருந்தேன். அக்காலகட்டத்தில் என் கணவர் எனக்கு தெரியாமல் என் நண்பன் மூலம் 2010 .01.01 புதுவருட பரிசாக புதிய Laptop என் வீட்டுக்கு அனுப்பி இருந்தார். சந்தோசத்துக்கு எல்லையே இல்லை. சொந்தக் கணினி கையில் கிடைத்ததும் என் ஆர்வத்தை கூட்டியது படிப்பதற்காக ஆரம்பித்த தளத்தில் பதிவிட தொடங்கியதுடன் 08.01.2010 றோஜாக்கள் தளத்தையும் ஆரம்பித்தேன். ஆரம்பித்து இன்றுடன் 1 வருட பூர்த்தி.
ஆரம்பித்த காலத்தில் படித்ததில் பிடித்த கவிதைகளை பதிவிட்டு வந்தேன். பின் 2010.05 இல் விசா கிடைத்ததும் கனடா வந்து சேர்ந்தேன். கனடா வந்த பின் தான் எனது சொந்த முயற்சியில் கவிதை எழுத ஆரம்பித்தேன் தொடர்கின்றேன்.
கவிதை எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து நண்பர்களாகிய உங்கள் வருகையும் பின்னூட்டங்களுமே என்னை மென்மேலும் எழுத தூண்டின. என் தளம் வருகை தந்து என்னை ஊக்குவித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றிகள் நன்றிகள் நன்றிகள்... மற்றும் இன்ட்லியல் வோர்ட் போட்டு என்னை பிரபல்ய படுத்திய சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள்.
எனது தள ஓருவருட பூர்த்தியன்று என் சார்பில் 2010 BEST BLOGS Award கொடுத்து சிறப்பிக்கின்றேன்.
பெற்றுக்கொள்ளும் சகோதரிகள்:-
சித்ரா,
ஆமினா,
கல்பனா,
ஆனந்தி,
நிலாமதி,
Harini Nathan,
ஜெ.ஜெ.,
ஹேமா, (அன்புடன் ஆனந்தி),
sakthi,
kousalya,
பெற்றுக்கொள்ளும் சகோதர்கள்:-.
எஸ்.கே , வெறும்பய,
Balaji saravana ,
பதிவுலகில் பாபு, நேசமுடன் ஹாசிம், இரவு வானம், எம் அப்துல் காதர், சே.குமார் , logu...,
பால் [Paul],
டிலீப்,
பாரத்... பாரதி....,
யாதவன்,
ஜீ,
சிவகுமாரன்,
nr prabhakaran, மதிசுதா, dineshkumar,
karthikumar,
சி.பி.செந்தில்குமார்,
பிரவீன்குமார்,
பனித்துளி சங்கர்,
மாணவன்,
FARHAN,
வைகை ,
கலாநேசன்
நன்றியுடன்
தோழி பிரஷா