Tuesday, December 14, 2010

Share

மதி கெட்ட பேதை உனக்கு...

("உன் மேல் கொண்ட காதலால்"(01) கவிதைக்கான பதில் கவிதை அவனால் எழுதப்பட்டதாக....யாவும் கற்பனை)
 
 என் சுவாசமாய் நீ என்னுள்
உன் பெயர் சொல்லியே
துடிக்கிறது என் இதயம்
புரியவில்லையா பேதையே உனக்கு?
என் விழிகளை பார் அதில்
சுடராய் தெரிவது உன்முகம்
என் உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகள் யாவும் உன் பெயரையே..
பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
உன்னைக் காணும் பொழுதில்யெல்லாம்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றனவே
காணவில்லையா நீ?
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி? 

(இதற்கான பதில் கவிதை அடுத்த பதிவில்)

Monday, December 13, 2010

Share

உன் நினைவுகள்

தேய்பிறையாய்  என் காதல்-ஆனால்
வளர்பிறையாய் உன் நினைவுகள்
என்னுள்  நித்தமும்
வளர்கின்றன....
 

Saturday, December 11, 2010

Share

உன் மேல் கொண்ட காதலால்....

 உன்னை நேசித்த பின்
உலகம் அறிந்தேன்..
உண்மை அன்பை புரிந்தேன்
உறவுகளின் போலித்திரைகள் தெரிந்தேன்
உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்

உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தெரிந்தேன்
ஆனால்
உன்னை மட்டும் என்னால் 
புரிந்து கொள்ள முடியவில்லை.....


Thursday, December 9, 2010

Share

மீண்டும் கிடைத்திடுமா???

  இயற்கை காற்று  அள்ளி வீசம்
இதமாய்  வீசும் காற்றுடன் முல்லை வாசம்
இயற்கையாய் வளர்ந்திட்ட வேப்பமரம் 
சோலை நடுவே எம் வீடு  
சோதனையிலும் சந்தோஷங்கள்
ஆலமரமாய் சொந்தங்கள்  
ஆயிரம் ஆயிரம் இன்பங்கள்.....

பட்டினி இருந்திருப்போம் - அப்போதும்
பசி மறந்திருப்போம்
வறுமையிலும் சந்தோஷம் 
வாடிடாத அன்னை முகம்.......

எல்லயைில்லா வானமதில்
எண்ணமுடியா நட்சத்திரங்கள்
நடுவிலே வலம் வரும்
 முழு மதியை ரசத்திருப்போம்
முற்றத்தில் ஒன்று கூடி ....

எம் மண்ணின் இனிய வாழ்வு
கிடைத்திடுமா மீண்டும் ...
சோலைவனமாய் இருந்த இடம்-இன்று
பாலைவனமாய் ஆனதே..

ஆசையாய் வளர்த்திட்ட சோலை இல்லை
இயற்கையாய வளர்ந்திட்ட ஏதுமில்லை
தனித்தனியே  சிதறுண்டது உறவுகள்
தனிமையில் கதறுகிறாள் அன்னையவள்...


"நீர் அடித்து நீர் இங்கு விலகாது அம்மா
நெஞ்சில் உந்தன் பாசம் என்றும் அகலாது அம்மா"



Tuesday, December 7, 2010

Share

துரோகி உனக்காக....

 என் உள்ளமறிந்த நீயே
என்னை விட்டு பிரிந்தாய்
என்னை பிரிந்த உன்னை மட்டும்
என்னால் மறக்கத்தான் முடியவில்லை.. 
உன் நினைவுகள் 
என்னுள் மந்திரமானதால்
துரோகம் நீ செய்தும்
துடிக்கிறது என் இதயம்
துரோகி உனக்காக....

Monday, December 6, 2010

Share

வாழ்வும் இல்லை சாவும் இல்லை...

 சோதனைகள் மட்டுமே சூழலாய்-இதனால்
வேதனைகள் மட்டுமே சுவாசமாய்..
அணைத்திட அன்னை இல்லை...
ஆறுதல் கூற தந்தை இல்லை
கை கொடுக்க சகோதரம் இல்லை
தனிமையில் வேதனைகள்.....

ஆறுதல் சொல்ல ஓர் உயிராய்
அவள் மட்டும் மிஞ்சிட அவளுக்காய்
உயிர்வாழ எண்ணிய என்முன்னே
அவளுடலும் சாய்ந்தது மண் மீது...
போரினால் அனைத்தும் இழந்து
அனாதையாய் நானின்று.....


Friday, December 3, 2010

Share

விழியிலே என் விழியிலே...



 இதய ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்த்தைக்காக
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றன சாபங்கள்....

Thursday, December 2, 2010

Share

நீயிட்ட முத்தங்கள்...

  நீண்ட இரவினிலே
நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்
அன்றய இரவு என் சந்தோச இரவு
அன்பான உன் அழைப்பு
அழகான உன் அணைப்பு
அழுத்தமான உன் முத்தம்
அனைத்தையும் மறந்தவளாய்
உன் தோளிலில் குழந்தையாய்...