Monday, July 12, 2010

Share

காத்திருக்கிறேன்....

வான்மதி தொட்டு வலம்வரும்
கற்பனையை வளர்த்து விட்டவனே..
உன் வருடலுக்காய் காத்திருக்கிறேன்.

விழிகளை மூடி உன்னை நினைக்கையில்
விந்தைகள் நிகழ்வது ஏன்?
மொழியினைத் தாண்டி மனம் உறவாட
மகிழ்வினில் மிதப்பது ஏன்?
அளவில்லாத உன் அன்பினை நினைக்க
அழுகை வருவதன் நியாயமென்ன?
உன்னைக் கண்டு கவலைகள் கூற
சுமைகள் கலைந்திடும் மாயமென்ன?
என் வேதனை கண்டு காத்திடும் மௌனம்
விளங்கவில்லை அது ஏன்?

உன்னை நேசிக்கிறேன் என்பதைவிட
உன்னை சுவாசிக்கிறேன் என்பதுவே மெய்............

Sunday, July 11, 2010

Share

என் தாயே......


நினைவில் உன்முகம் மறந்தேன் - தாயே
கனவிலாவது வந்துவிடு!

மீண்டும்
ஒருமுறை மறுமுறை
வாழ்திட வேண்டும் - உன்
மடியில் எனக்கு மரணமும்
வேண்டும்.

கைகள் பிடித்து நடந்த
காலங்கள் மறந்தேன் - என்
கண்ணீர் துடைத்த கைகளையிழந்தேன்

எத்தனை பிறவிகள் எடுப்பினும்
அத்தனை பிறவியும் தாயாக வந்துவிடு...

அரை தசாப்பதம்
ஆகியும் கூட - நேற்று
வாழ்ந்தாற்போல்
இன்னும் நெஞ்சில் சில நினைவுகள்....

வீட்டு முற்றத்தில்
நிலாச் சோறு.......

பட்டு மடியில்
தாலாட்டு....

செல்லம் என்ற
சிறு அணைப்பு.....

சில சமயம் - நீ
அருகிலிருப்பதாய்
உணர்கிறேன் - என்
கண்கள் திறக்க மறுக்கின்றேன்

மற்றவர் இல்லை - தாயே!
பெற்றவள் உன் தூயன்புக்கு நிகர்.....

Friday, July 9, 2010

Share

சாபம்....

ஏனிந்த கோபம்...
என் மேல்
ஏனிந்த சாபம்
எனக்கு !!!....

அனுப்பி இருந்தேனே
என் கனவை....
காணவில்லையோ
நீயும் அதனை....

சொல்லிவிட்டேனே
தூது... அதனை ...
சொல்லவில்லையோ
அந்த நிலவு !!!...

நீர்..
ஊற்றாக பொங்குதே
உன் நினைவு...
அடக்கவும் முடியவில்லை...
அலை பாய வழியும் இல்லை....

நீறு பூத்த நெருப்பாக
உன் உருவம் !!!...
உள்ளில்...
நீர் தெளிக்க ஆளில்லை
ஈரமாக நீயும் இல்லை.....

சூன்யமாக
போகும் முன்னே
வந்து விடு !!!... நானும்
சூடமாக
கரைகின்றேன்
காற்றினிலே !!!....

Tuesday, July 6, 2010

Share

அழகிய ஓவியம்


எனக்குள் நீ விதைத்த
நம்பிக்கை ஓளிக்கீற்று
விண்ணளவு வளர்கின்றது...

வாழ்க்கை பற்றிய கனவுகள்
வானவில்லென கோலமிட்டு
மின்னலென பளிச்சிடுகின்றது...

நீ புதைத்த சோகங்கள்
எனக்குள் உறங்கி என்னில்
துளிர்த்த இன்பங்கள் உனக்குள்
துள்ளி விளையாடுகின்றது....

உன்னோடு கரைந்த நிமிடங்கள்
ஓவ்வொரு பூக்களென பூத்து
பூங்காவனமென பூத்துக்குலுங்குகின்றது
இன்பங்கள் வண்ணத்துப் பூச்சியென
சிறகடித்துப் பறக்கின்றது.....

உன்னோடு கலந்து விட்ட வாழ்க்கையிது
இன்பங்கள் பகிர்ந்து துன்பங்கள் துடைத்து
புன்னகைகள் பரிமாறிக் கொள்ளும்
அழகிய வாழ்க்கைப் பயணம்....

பாதகைகள் நீடிக்க
கண்கள் அகல விரிகின்றது
உன்னோடு நான் பயணிக்க இருக்கும்
வாழ்க்கைப் பயணம் தொடர்வதை
நினைத்து....!

இதயம் போடும் ஆனந்தக் கூச்சல்
கண்கள் போடும் சந்தோஷ கோலம்
வாய்கள் முணுமுணுக்கும் மெல்லிசை
அனைத்தும் உன் பெயரே...

என் நினைவுகள் - உன்
நினைவோடு கலக்க
என் நிஜங்கள் - உன்
நிஜங்களைத் தேடித்தேடி அலைகின்றது
என்றாவது என் கண்கள் உன்னைச்
சந்திக்கும் நேரம் அழகிய ஓவியமென
எம் நினைவுகளைப் பரிசளிக்க..........

Monday, July 5, 2010

Share

உன் மெளனம்......


அன்புக்கேது அளவுகோல்
அளந்தளந்து அன்பு வைத்திட....

நிலவு தேய்ந்திட
வானம் அழுவதில்லையே - நீ
தேய்வதால் நான் அழுகின்றேன்......

தேய்ந்திட்ட நிலவு வளர்ந்திட
மலர்ந்திட்ட பூ வாடியதே
உன் சினம் கண்டு.....

மழை நீரென அன்பை நீ பொழிந்திட
சிலிர்த்துப் போகுதே எனதுயிர்....

கனிந்திட்ட பழமென இனித்திடும்
உன் புன்னகையின் தித்திப்பில் என்னிதயம்....

என் பூவாசல் தேடி வந்த தேவதையே
உன் அன்புக் கனிகளை
மரமென விதைத்திடு என் மனதினிலே
என் ஆயுள் முழுவதும் புசித்திடுவேன்...

என் தேகம் தீண்டிடும் தென்றல் காற்றே
என்னுயிரின் தேகம் தீண்டி வந்தாயா
என் ஆருயிரின் ஸ்பரிசம் உன் தீண்டலில்.....

பூக்களே பூக்களே - என்
கவிதையில் மலர்ந்திட்ட பூக்களே
என்னவள் கூந்தலில் அடைக்கலம் தேடுங்கள்
உயிர்த்திடுவீர்கள் என்னவள்
தொடுகையில்....

உன்னோடு நான் பேசியதை விட
உன் மெளனத்தோடு இரண்டறக் கலந்தது
அதிகமன்பே...

உன்னை விட - உன்
மெளனம் பிடிக்குமெனக்கு
என்னை அணுஅணுவாய்
சித்திரவதை செய்வதால்...

அதில் கூட சுகமுண்டு உயிரே
என் உயிரே நீயாகி போனதால்.....

Sunday, July 4, 2010

Share

ஆசை.......

உன் அரவணைப்பினில்
கொஞ்சிடும் குழந்தையாய்
தவழ்ந்திட ஆசை...

உன் இன்னிசையில்
ராகமாய் மாறிட
ஆசை...

உன் சுவாசத்தின்
காற்றாய் மாறிட
ஆசை...

உன் உதட்டில்
புன்னகையாய்
வாழ்ந்திட ஆசை...

உன் இதயத்தில்
இரத்தோட்டமாய்
ஓடிட ஆசை...

உன் மனதினிலே
எண்ணங்களாய்
உருப்பெற ஆசை...

கடைசி வரை உன்
நாமத்தை உச்சரிக்க
ஆசை...

உன் கண்களில்
ஓளியாய் வாழ்ந்திட
ஆசை...

என் வாழ்வின் துன்பமான
உன் காதல் நினைவுகளை
தென்றலாய் கலைத்திட
ஆசை....

வானத்தில் நிலவாய்
இயற்கையின் பசுமையாய்
பூக்களில் வாசமாய்
என் வாழ்வின் வலிகளை
புற்களாய் கலைந்திட
ஆசை...

Friday, July 2, 2010

Share

பிரிவும் ஒரு காதல் தான் !!!...

 பிரிவும்  ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் ஆசைகளை
பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் விழிகள்
உறக்கத்தை பிரிந்தபோது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
உனக்காக
என் உறவுகளை
நான் பிரிந்த போது ...

பிரிவும் ஒரு  காதல் தான் !!!...
எனக்கான
என் வாழ்வை
நான் மறந்த போது ...

பிரிவுகளின் அர்த்தத்தை
உணரவைத்து பிரிந்தவளே ..
காதலிக்க தொடங்கிவிட்டேன் ..
காதலாக உன் பிரிவை கூட !!!...

Thursday, July 1, 2010

Share

மௌனம்

மௌனம் கூட ஒரு மொழிதான்
அழகும் அர்த்தமும் நிறைந்ததுதான்
அதற்காக அதையே கட்டி கொண்டு வாழ வேண்டுமா ?

சோதனைகள் பல கடந்து விட்டேன்
சாதனைகள் ஏதும் படைக்கவில்லை
துன்பத்தையும் சமாளித்துவிடுகிறேன்
இன்பம் எதையும் காணவில்லை..

சோதனைகள் வாட்டும் போதும்
சோர்ந்து நான் விழும் போதும்
சோகங்கள் தீர்த்து வைக்கும்
சொற்கமான உன் மடி வேண்டும் தாயே!