குட்டிப் பெண்னே
என்னை சிறையேடுக்கும்
உன் சிரிப்பொலி
சில்லறையாய் சிதறுதடி...
அள்ளி எடுத்து ரசிக்கிறேன்...
உன் விழிமொழி
பிரம்மிக்க வைக்குதடி கண்னே...
குதூகலிக்கும் உன் மனம்
வெளிப்படுத்த நீ சிரிக்கும் சிரிப்பு...
சிரிப்போடு உன் கண்சிமிட்டல்
சிந்தித்து துடிக்கும் உன் உடல் மொழி
சீராக புரியுதடி அன்னை எனக்கு...
பசித்திட்டால் தெரிவிக்கும்
உன் இருமலுடன் சினுங்கள்
பார்க்காமல் இருப்பது போல்
நான் நடித்தால்
குழந்தைமொழியில் உன் ஏச்சு
அப்பப்பா இத்தனை அதிசயங்கள்
குட்டிப்பெண்ணே உன்னிடத்தில்
கண்டு நான் வியக்கின்றேன்...
கருவில் சுமந்த நாளை எண்ணி
பெருமையுடன் உன்னை இன்று
கையில் சுமக்கின்றென்...
தந்தை குரல் கேட்கும் திசை
தானாக உன் தலை சாயுதடி....
தந்தையிடம் தாவிட வேண்டி
சிரிப்புடன் உன் தாவல்
சிறுபிள்ளை மொழி பார்த்து
தந்தை முகம் ஆனந்தத்தில்....
அக்கா குரல் கேட்டிட்டால்
ஆனந்தத்தில் உன் துள்ளல்
குட்டிப்பெண்ணாய் தானிருந்தும்
உன்னை தூக்கி அள்ளிட
கொள்ளை ஆசையில்
துள்ளி குதிக்கின்றாள் அக்கா.....
அள்ளி எடுத்து துள்ளி விளையாட்டு
ஆனந்தத்தில் நம் இல்லம்...
குழந்தையே உன் குறும்பில்
நாளும் தெலைகின்றோம்
3 comments:
ஆஹா... ரசித்தேன் பலமுறை...
வாழ்த்துக்கள்...
@திண்டுக்கல் தனபாலன் நன்றி தனபாலன்
குட்டிப் பெண் போலவே அழ...கு கவிதையும். ரசித்தேன்.
Post a Comment