காகிதத்தில் வடித்தி்ட்ட
மூன்றெழுத்து
சொர்க்கத்தில் மூழ்க்கி
குதூகலிக்கிறது
மனித குலம்.
உறவுகளில் உதடுகளில்
புன்னகை மழை பொழிய
கொட்ட வேண்டும்
பண மழை
மரணத்தையும்
பிரசவமாக்கும்
மூன்றொழுத்து
மந்திர வார்த்தை
பணம்..
பணத்திற்காக
உருவங்கள்
பல கொண்டு
வேசம் போடும்
மனித கூட்டம்
பாசம் எனும்
போர்வையில்
போலியாய் சிரித்து
நடிப்புலக நாயகர்களாய்
ஒரு கூட்டம்
காதல் எனும்
போர்வையில்
மனசை விற்கும்
ஒரு கூட்டம்
காமம் எனும்
போர்வையில்
உடம்பை விற்கும்
ஒரு கூட்டம்
வேசங்கள் பல
போடும் மனிதனே!
பணத்திற்கு பேசும்
சக்தி இருந்திருந்தால்
கறி துப்பும் உன்னை
பணத்தினை
படைத்த
பிரமனான உன்னை
கேட்கும் பல கேள்வி
பணத்தின்
மீதான உன்
காதலை எண்ணி....
4 comments:
இன்று மனித மனங்களை கெடுக்கும் பணத்தை கவிதை மூலம், நன்றாக சாடி இருக்கிறீர்கள்... நன்றி சகோ !
பணம் ....
Panam patri kunamaana varikal valthukal sakotharam
கவிதை நன்றாக சாடியிருக்கிறது.
Post a Comment