என்னை சுற்றி பல உறவுகள்
இருந்து என்ன பயன்..?
மனதில்
தனிமையை சொந்தமாக்கி..
நடிப்பே வாழ்க்கையாகி...
நாடித்துடிப்பின்றி நடைப்பிணமாய்...
நால்வர் முன் போலியாய் சிரித்து...
தனிமையிலே கண்ணீர் சிந்தி...
என்னை நானே சமாதாப்படுத்தி..
இறைவனிடம் முறையிட்டு...
என் மனதை திடப்படுத்து...
காலத்தை நகர்த்துகின்றேன்...
மரண வாசல் திறக்கும் வரை...
7 comments:
ரொம்ப நாள் கழித்து இந்தபக்கம் வந்தால், ஏன் இந்த தற்கொலைவெறி தோழி ???
நம்முடைய
இந்த வாழ்க்கை அதிகமா ஒருவருக்கு அவசிப்படுகிறது
அவர் வேறு யாரும் இல்லை நாம் தான்
உறவுகள் என்றாலே அப்படித்தான்
நம்மை நம்மால் நேசிக்கபடுகையில்
தானாகவே பிற மனிதர்களால் (உறவுகளால் ) நாம் நேசிக்கப்டுவோம்
நீண்ட நாள்க்குப்பின் கவிதையில்
நலமா சகோ
வாழ்க்கையில் இவை எல்லாம் சகஜம் சகோதரி ....................வாழ்ந்து தானே ஆகணும். புயலுக்கு பின் அமைதி போல துன்பத்துக்கு பின் இன்பம் வரும்
ஏன் இவ்வளவு சோகம்?
உலகம் ஒரு நாடக மேடையாகிய பின் நடிப்பே நமது வாழ்க்கையாகி போனதில் வியப்பேது இல்லை தோழியே
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் தோழி.
மரண வலி கொண்ட அனுபவக் கவிதை
Post a Comment