அம்மா என்ன சொல்லில்
நடமாடும் தெய்வமே!
சுமையின் வலி பொறுத்து
உன்னை எனதாக்கி
மண்ணுலகில் எனை விட்டு
விண்ணுலம் சென்றாயோ?
படிநிலைகள் மாறி
பருவ நிலைகள் பல கடந்தும்
பாசம் என்னும் ஒன்றுக்கு
ஏக்கும் குழந்தையாய்
இன்றும் என் வாழ்வு..
வாழ்வில் சுழற்சியில்
சந்தித்திட்ட
பல்முகம் கொண்ட
பல சொந்தங்கள்
ஒன்றையொன்று போட்டி போட்டு
போடுது நல்ல வேசங்கள்
தினம் தினம்.
சுயநலம் கொண்ட உலகில்
பாசம் ஒன்றை தேடி
நெடுந்தூரம்
சென்ற விட்டேன்
எங்கும் காணல் நீராய்
எதிலும் வெறுமையாய்...
பணம் இருந்தால்
இதயம் திறக்குமாம்
பாசம் சுரக்குமாம்
மனிதர்களுக்கு...
வாழ்க்கை பயணத்தில்
சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து போக
பேருந்து நிலையமாய்
என் இதயம்..
வலிக்குதம்மா மனசு
சோகத்தை சொல்லியழ
அரவணைப்பு தர
யாருமற்ற அநாதையாய்
அவதியுறும் உன் பிள்னளயின்
நிலையினை கண்டாயா?
ஆசைகளை எனதாக்கி
ஏக்கங்களில் தவித்து
சித்திரைவதைகளை
அனுபவிக்கும் எனக்கு
தாய்மடியில் தலை
சோகங்களை சொல்லிழ
அருகில் வந்து எனை
அணைத்துக் கொள்வாயா?
இல்லை உன் அருகில்
இணைத்துக் கொள்வாய்யா?
10 comments:
விலை மதிப்பில்லா அன்னையின் பாசத்திற்கு ஏங்கும்
உள்ளத்தின் குமுறலைச் சொல்லிப் போகும்
பதிவு மிக மிக அருமை
படித்து முடிக்கையில் கண் கலங்கிப் போனது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக அருமையான கவிதை
///வலிக்குதம்மா மனசு
சோகத்தை சொல்லியழ
அரவணைப்பு தர
யாருமற்ற அநாதையாய்
அவதியுறும் உன் பிள்னளயின்
நிலையினை கண்டாயா?
ஆசைகளை எனதாக்கி
ஏக்கங்களில் தவித்து
சித்திரைவதைகளை
அனுபவிக்கும் எனக்கு
தாய்மடியில் தலை
சோகங்களை சொல்லிழ
அருகில் வந்து எனை
அணைத்துக் கொள்வாயா?
இல்லை உன் அருகில்
இணைத்துக் கொள்வாய்யா//
மேலே கூறியுள்ள வரிகளை படிக்கும் போது மறைந்த என் தாயை நினைத்து கண்ணிர்விட்டேன். அவளுக்கு இணையான இடம் யாருக்கும் இல்லை தோழி
உலகில்
நிர்ணய விலைக்குள்
என்றும் அகப்படாதது
பாசம்
வரிகள்
ஏனோ வதைக்கிறது
மனதை
வாழ்க்கை பயணத்தில்
சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து போக
பேருந்து நிலையமாய்
என் இதயம்..
பாசத்தின் விலை கனக்க வைக்கிறது...
மனதை நெகிழ வைக்கும் கவிதை.
வாழ்த்துகள்.
"படிநிலைகள் மாறி
பருவ நிலைகள் பல கடந்தும்
பாசம் என்னும் ஒன்றுக்கு
ஏக்கும் குழந்தையாய்
இன்றும் என் வாழ்வு.."
இது உங்களின் மனநிலை மட்டுமல்ல.. பெரும்பாலோரின் நிலை இதுவே. எதார்த்தத்தை தெறித்து மனதை கனக்க வைத்த கவிதை!
மனதை பாதித்த கவிதை ! அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் !
பேருந்து நிலையமாய்
என் இதயம்..//
sharp.....
வாழ்வில் சுழற்சியில்
சந்தித்திட்ட
பல்முகம் கொண்ட
பல சொந்தங்கள்
ஒன்றையொன்று போட்டி போட்டு
போடுது நல்ல வேசங்கள்
தினம் தினம்.
வாழ்க்கை பயணத்தில்
சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து போக
பேருந்து நிலையமாய்
என் இதயம்..
விலைக்குள் அகப்படாதது
என்றும் பாசம் .
பழகிய உறவுகள் பாசத்தை
பாதியில் பிரிந்திட்ட-அந்த
பாரத்தைக் குறைத்திட
பசுமை நினைவுகளை
பாலமாய் ஆக்கி அழகாய்
பயணத்தை தொடரும் பலர்.
Post a Comment