கூண்டு கிளியாய் - நீ
சிறை இருப்பதால்
காற்றும் குளிர்ச்சியற்று
அனலைய் கொதிக்கிறது.
உன் தரிசனம் இன்றி
தனிமையில் தவிக்கிறது - இப்
பேதையின் மனசு.
சூரிய உதயமின்றி
தாமரைக்கு ஏது பிறப்பு?
உன் அன்பு இன்றி
இந்த ஏழைக்கு ஏது வாழ்வு?
பிறவிகள் பல தோன்றிடினும்
உன்னுடன் கொண்ட
உறவு மாறிடாது
தடைகள் பல
வந்திடும் போதிலும்
உண்மை பாசம்
என்றும் தோற்பதில்லை.
நீயே!
நினைவானதால் இன்று
உலைக்களமாக உள்ளம்,
பனிக்கட்டியாக விழிகள்
மரித்தும் உயிர் வாழும்
அற்புதம் என்னில்.....
என்னை மறந்து
உன்னை மட்டும்
நினைத்திருந்தேன்
இன்று குரல் கேட்டதினால்
மீண்டும் உயிர் பெற்றேன்!
ஏக்கங்களுக்கு விடை கொடுக்க
வரமாய் வருவாய்
என்ற நம்பிக்கையுடன்
இயல்பு வாழ்க்கையில்....
10 comments:
நினைவானதால் இன்று
உலைக்களமாக உள்ளம்,
பனிக்கட்டியாக விழிகள்
மரித்தும் உயிர் வாழும்
அற்புதம் என்னில்.....
அற்புதமான அசத்தலான கவிதை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தோழி
விருது ஓன்று பகிர்ந்துள்ளேன்
நேரம் கிடைப்பின் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்
///பிறவிகள் பல தோன்றிடினும்
உன்னுடன் கொண்ட
உறவு மாறிடாது///
...அழகா சொல்லிட்டீங்க. நல்லா இருக்குங்க. :)
''..ஏக்கங்களுக்கு விடை கொடுக்க
வரமாய் வருவாய்
என்ற நம்பிக்கையுடன்...''
நல்ல கவிதை வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
தடைகள் பல
வந்திடும் போதிலும்
உண்மை பாசம்
என்றும் தோற்பதில்லை.
அழகான வரிகள்.. அருமை...
அழகான கவிதை நல்ல கற்பனை
தொடருங்கள் தோழி.
தடைகள் பல
வந்திடும் போதிலும்
உண்மை பாசம்
என்றும் தோற்பதில்லை.
நல்ல வரிகள் ! வாழ்த்துக்கள் ! நன்றி சகோதரி !
அருமை,தோழி.
alagana kavithaigal tholi prasha
அருமையான கவிதை சகோதரி...
என்னை மறந்து
உன்னை மட்டும்
நினைத்திருந்தேன்...
ஏக்கங்களுக்கு விடை கொடுக்க
வரமாய் வருவாய்
என்ற நம்பிக்கையுடன்
இயல்பு வாழ்க்கையில்....
Post a Comment