கண்களில் சிறைப்பட்டு
இதயத்தில் உயிர் பெற்று
நினைவுகளில் படர்ந்து
பரிதவிக்கும் காதலே
வந்த வழியே
மீண்டும் செல்வாயோ?
முட்களில் உறங்கும்
இதயக் கூட்டில்
உனக்கேது வேலை இங்கு?
நேற்று வரை இல்லாத
தவிப்புகளை என்னில்
தொடரலையாய்
ஏற்படுத்தும் உன்னை
அரவணைக்கும் எண்ணமில்லை.
சிந்தனையை கலைத்து
சிதறடிக்கும் உன்
உன்னத உணர்வால்
சீர்குலைகின்றது
என் வாழ்க்கை..
ஆயுதமின்றி
எனை தாக்கும் உன்னை
தாக்கும் பிடிக்கும் தைரியம்
என்னிடம் இல்லை.
நிம்மதி நிலை குலைந்து
நிர்கதியாக நிற்கும்
என்னை விட்டு ஓடு..
நாளைய பொழுதுகள்
எனக்காகவும் விடியலாம்
அன்று சந்திக்கலாம்.
அதுவரை
நினைவுகளை மட்டும்
எனதாக்கி விட்டு செல்
காலமெல்லாம்
நானாகவே வாழ்ந்திடுவேன்.
16 comments:
//நேற்று வரை இல்லாத
தவிப்புகளை என்னில்
தொடரலையாய்
ஏற்படுத்தும் உன்னை
அரவணைக்கும் எண்ணமில்லை. //ஏனோ ?
சிந்தனையை கலைத்து
சிதறடிக்கும் உன்
உன்னத உணர்வால்
சீர்குலைகின்றது
என் வாழ்க்கை..
..... உணர்வுகளை அருமையாகப் படம் பிடித்து காட்டும் வரிகள்.
அருமையான கவிதை
காதலுக்கும் மரணத்திற்கும் ஒரு வழிப்பாதை என்பார்கள்
வந்த காதல் எப்படித் திரும்பும் ?
காதல்அவஸ்தையைச் சொல்லிப் போகும் விதம் மிக மிக அழகு
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
நன்றாக உள்ளது. வாழ்த்துகள்
காதலை வேறு ஒரு விதப் பார்வையில் அனுகியிருக்கிறீர்கள்.
புது உணர்வு
இதையும் கொஞ்சம் படித்துப் பார்க்கவும்
http://tamilraja-thotil.blogspot.com/2011/12/blog-post_31.html
கவிதை அருமை தோழி
உணர்வுபூர்வமான வரிகள்
கவிதை அருமை.ஈரமும் தாபமும் இழையோடுகிறது. வாழ்த்துக்கள்
நல்ல கவிதை ! பாராட்டுக்கள் ! நன்றி !
அன்பரே எனது தளத்தில் உங்கள் தளத்தை பரிந்துரைத்துள்ளேன் பார்க்கவும்சிறந்த கவிதை தளங்கள்-2
அன்பரே உங்கள் தளத்தை எனது தளத்தில் பரிந்துரைத்துள்ளேன் பார்க்கவும் சிறந்த கவிதை தளங்கள் -2
காதல் படுத்தும்பாடு பெரும்பாடுதான்..கவிதை சிறப்பு தொடர்கிறேன் தோழி..வாழ்த்துகள்..
தங்கள் தளம் மிகவும் அழகாக வடிவமைக்க பட்டுள்ளது..
நாளைய பொழுதுகள்
எனக்காகவும் விடியலாம் very good delivery.
அருமை அருமை கவிதை
ஆயுதமின்றி
எனை தாக்கும் உன்னை
தாக்கும் பிடிக்கும் தைரியம்
என்னிடம் இல்லை.
நிம்மதி நிலை குலைந்து
நிர்கதியாக நிற்கும்
என்னை விட்டு ஓடு..
அருமையாகயிருக்கிறது.இந்தக் கவிதையைஉ உங்கள் குரலில் பதிவு செய்துyou tube il போட்டால் சிறப்பாகயிருக்கும்...
Post a Comment