Thursday, August 25, 2011

Share

சிறகினை தந்து பறிப்பது நியாயமா?

இவ் உலகில் என்னையறிந்து
அன்பெனும் சிறகினை தந்து
உறவெனும் உரிமை தந்து
உயரப்பறக்க வைத்தாய்
உல்லாசமாய் ரசித்து சிலிர்க்கையிலே
அன்பெனும் சிறகினை
அடிமையென ஆயுதங் கொண்டு
வெட்டியே சரிக்கின்றாய்
சிறகினை தந்து பறிப்பது நியாயமா?

குடும்பமாய் கூடு கட்டி
வாழ்ந்திட ஆசைகொண்டேன்

மரமான உன்னை தாக்கியது யாரோ-ஆனால்
கூட்டை தாக்கியது நியே...!
விதியா இல்லை சதியா தெரியவில்லை
கூடு இழந்து தவிக்கும் என் சிறகினை
மீ்ண்டும் மீண்டும் பறிக்கின்றாய்....!
பறக்க தான் நினைக்கின்றேன்
மரமாய் என்னை தாங்கும்
உன்னை விட்டு பறப்பதற்காய் அல்ல
உன் உணர்வுகளை மதிக்கும்
ஓர் பறவையாய்.....!

அன்பெனும் அமுதத்துடன்
செளிர்ப்பாய் இருந்த உன் உள்ளம்
அடிமையெனும் விசம் கலக்க பட்டு
பட்டமரமாய் உன் உள்ளம்...
விசத்தனை கக்கி  அன்பெனும் அமுதத்தை விழுங்கி
மீண்டும் செழித்து வளந்திடு
மீண்டும் உன்னில் கூடு கட்டி 

உறவாடிட உதவிடு
சிறகொடிந்த பறவையாய் காத்திருப்பேன்
உனக்காக அல்ல
நீ தரும் அன்பெனும்  சிறகுக்காய்......

16 comments:

Prabu Krishna said...

அருமை தோழி.... எல்லோரின் காத்திருப்பும் அன்புக்கே..

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது..

முனைவர் இரா.குணசீலன் said...

வலையமைப்பும் நன்று..

பின்புல வண்ணங்கள் தான் கண்ணை சோர்வடையச் செய்வனவாகவுள்ளன.

இராஜராஜேஸ்வரி said...

அன்பெனும் சிறகினை
அடிமையென ஆயுதங் கொண்டு
வெட்டியே சரிக்கின்றாய்
சிறகினை தந்து பறிப்பது நியாயமா? //

அருமை

ஓசூர் ராஜன் said...

nallathu! mennmaiyana unarvukalai kondulla ungal kavithaigal valimaitanathu! valthukkal.

கோகுல் said...

அன்பெனும் சிறகு நிச்சயம் வருடும்!அழகிய கவிதை!

F.NIHAZA said...

நன்றாய் இருக்கிறது

F.NIHAZA said...

நன்றாய் இருக்கிறது

Chitra said...

அன்பெனும் அமுதத்துடன்
செளிர்ப்பாய் இருந்த உன் உள்ளம்
அடிமையெனும் விசம் கலக்க பட்டு
பட்டமரமாய் உன் உள்ளம்...
விசத்தனை கக்கி அன்பெனும் அமுதத்தை விழுங்கி
மீண்டும் செழித்து வளந்திடு


.... அருமையாக எழுதி இருக்கீங்க.

Anonymous said...

அருமை....அருமைத்தோழி...

Suresh Subramanian said...

nandra irukirath... thangalin kavithai nadai enakku pidithirakirathu..

Please read my blog and give me more suggesstion. Also, please mail me to sureshteen@gmail.com or mail me.. I will contact to you.

www.suresh-tamilkavithai.blogspot.com

Nandri,

Suresh

Yaathoramani.blogspot.com said...

அன்பைப்போல வளரும் தன்மை கொண்டதுதான்
சிறகும்.நிச்சயம் சிறகுகள் முளைக்கும்
காதல் பறவையும் வானில் பறக்கும்
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

நல்ல கவிதை சகோ

கிராமத்து காக்கை said...

உண்மையான அன்பு ஒன்று சேர்க்கும்
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்

கிராமத்து காக்கை said...

உண்மையான அன்பு ஒன்று சேர்க்கும்
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்

S Maharajan said...

அருமையாக எழுதி இருக்கீங்க.