அன்பினிலே.
தாயின் மறு உருவமானாய்
தந்தையின் பொறுப்பானாய்
அறிவுரையில் அக்காளானாய்
அதட்டுதலில் அண்ணானாய்
சம உரிமை அளித்திடும் தங்கையாய்
அறிவுரை சொல்லுகையில்
என் பாட்டி கூட - உன்னிடம்
பாடம் கற்கும் ஆசானாய்
தோழியே!!!
ஒரு உருவில் என்
குடும்பததைக் கண்டேன் உன்னில்....
காலமும் தன் கடமையாய் செய்ய
நாட்களும் அதுவாக தொலைய
எல்லைகளும் படிப்படியாக அதிக்கரிக்க
உள்வாங்கப்பட்ட புது உறவால்
ஊசல் ஆடத் தொடங்கியது நம் நட்பு
பூவாய்....
பிஞ்சாய்...
காயாய்....
கனியான நம் நட்பு
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பால்
அந்தரிக்கும் நிலையிது வேதனையே...
மாற்றம் என்பது மாறாததொன்று - இது
யாவரும் பிதற்றும் கோஷம்
வேண்டவே வேண்டாம்
மாற்றத்திற்கு புது அர்த்தம் கொடுபோம்
கை தொடுத்திடு என்னுடன்
நட்பில் ஏது வேற்றுமை
உலகிற்கே பறைசாற்றுவோம்
வெற்றி கோசம் முழங்குவோம்
இமயத்தையும் தாண்டி
விசாலமானது நம் நட்பு என்று....
16 comments:
காலமும் தன் கடமையாய் செய்ய
நாட்களும் அதுவாக தொலைய
எல்லைகளும் படிப்படியாக அதிக்கரிக்க
உள்வாங்கப்பட்ட புது உறவால்
ஊசல் ஆடத் தொடங்கியது நம் நட்பு
...... நேர்த்தியாக கவிதையில் சொல்லி இருக்கும் விதம், அருமை. வாழ்த்துக்கள்!
//கை தொடுத்திடு என்னுடன்
நட்பில் ஏது வேற்றுமை
உலகிற்கே பறைசாற்றுவோம்
வெற்றி கோசம் முழங்குவோம்
இமயத்தையும் தாண்டி
விசாலமானது நம் நட்பு என்று...//
மிக அழகிய வரிகள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
நட்புடன் vgk
கனியான நம் நட்பு
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பால்
அந்தரிக்கும் நிலையிது வேதனையே..//
மரணத்தைவிட கொடிய வேதனை நட்பின் பிரிவல்லவா??
நட்பு என்றென்றும் வாழ்க.
அருமையான வரிகள்.
//
மரணத்தைவிட கொடிய வேதனை நட்பின் பிரிவல்லவா??///
mm
பிரிவின் வலி எத்தகையது என உணர வைத்த கவிதை!!!
அருமை
வாழ்த்துக்கள்
//காலமும் தன் கடமையாய் செய்ய
நாட்களும் அதுவாக தொலைய
எல்லைகளும் படிப்படியாக அதிக்கரிக்க
உள்வாங்கப்பட்ட புது உறவால்
ஊசல் ஆடத் தொடங்கியது நம் நட்பு//
அருமை பிரஷா
நட்பின் பிரிவு தங்க முடியாத வலிதான்
நட்பு... இனிய கவிதை...
அனைவர்க்கும் நட்பு தேவையான ஒன்று..
நல்ல கவிதை தோழி.
எழுத்துப் பிழை கொஞ்சம் சரி செய்யவும். என்ன திடீர் என்று இவ்வளவு பிழைகள்?. (Newsletter தலைப்பை பார்த்து என்ன இது புது தலைப்பு என்று நினைத்தேன். )
//பூவாய்....
பிஞ்சாய்...
காயாய்....
கனியான நம் நட்பு
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பால்
அந்தரிக்கும் நிலையிது வேதனையே...//
அருமையான வரிகள்...
நன்று தோழி..!
அழகிய வரிகள்...
நல்ல கவிதை ...
வாழ்த்துக்கள் தோழி...
நட்பு பற்றி அழகான ,ஆழமான கவி, நல்லாய் உள்ளது .
அழகிய நட்பு கவிதை
nice lines
arumai.. natpin valigal...ellaiyillathathu thaan..
wwww.suresh-tamilkavithai.blogspot.com
Post a Comment