கன்னியவள் கை பிடிக்க
கண் தூங்கும் நேரம் முதல்
காலை வரை திரண்டு வரும்
கனவுகளில் தினம் மூழ்கி
கடந்தோடும் மணிந்துளிகள் ஒவ்வொன்றும்
கலந்து பெருக அவள் நினைவு - இன்ப
களிப்பினிலே அவன் மனம்.
கானும் காட்சியெல்லாம்
கன்னியவளாய் தோன்றிட
ஒலிக்கின்ற ஓசையிலே - அவள்
நாமம் தித்தித்திட
இசையும் இனிமையும்
இணைந்த இன்பத்தில்
இவ்வூலகில் அவன் இன்று
மனதினிலே மாளிகை கட்டி
மன கற்பனையில் வாழும் அவன்
மண மஞ்சமதில் மாலை சூட்டி - தன்
மனைவியாய் மனைதனை
அலங்கரிக்கும் அன்நாளுக்காய்
அல்லும் பகலும் காத்திருக்கின்றான்.....
22 comments:
காத்திருப்புகள் நிறைவேறட்டும்...
அழகிய கவிதை
//கண் தூங்கும் நேரம் முதல்
காலை வரை திரண்டு வரும்
கனவுகளில் தினம் மூழ்கி//
கவிதை கலக்குதுங்க... வாழ்த்துக்கள்
//கடந்தோடும் மணிந்துளிகள் ஒவ்வொன்றும்
கலந்து பெருக அவள் நினைவு//
அருமையான வரிகள்
எனக்கு கடந்த வருடத்தில் என் மனைவிக்காக நான் காத்திருந்த
நினைவுகள்வருகின்றது.நினைவுகளை மீட்டு தந்த உங்கள் கவிக்கு
நன்றிகள் தோழி
மனம், மனை. மனம். வார்த்தை விளையாட்டுதான்.. அருமை.
அவரின் காத்திரிப்புக்கள் நனவாகட்டும்
காத்திருத்தல் சுகமானது.
வலையாக்கம் அழாககவுள்ளது.
எழுத்து வண்ணங்கள் பின்புலவண்ணங்களால் படிக்க இடைஞ்சலாக இருக்கிறது..
voted 4 to 5 in Indli
இது போன்ற காத்திருப்புகள் மிகவும் சுகமானவை. நல்ல படைப்பு. பகிர்வுக்கு நன்றி.பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
NICE! :-)
கன்னியவள் கை பிடிக்க
கண் தூங்கும் நேரம் முதல்
காலை வரை திரண்டு வரும்
கனவுகளில் தினம் மூழ்கி
கடந்தோடும் மணிந்துளிகள் ஒவ்வொன்றும்
கலந்து பெருக அவள் நினைவு - இன்ப
களிப்பினிலே அவன் மனம்.
....sweet!!!! :-)
காத்திருப்பு அழகிய வரம் :)
மனதினிலே மாளிகை கட்டி
மன கற்பனையில் வாழும் அவன்
மண மஞ்சமதில் மாலை சூட்டி>>>>
சூப்பர் வரிகள்.
வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!
காத்திருப்பும் இந்த காத்திருப்பு கவிதையும் எனக்கு பிடித்தது....தோழி...
காத்திருப்பு சுகமானது.அதை அழகிய கவிதையாக்கியுள்ளீர்கள்.அருமை.
காத்திருப்பு சுகம் தான் , அதை விட கவிதையாக்கும் போது அதை விட சுகம் .........
அழகான காத்திருப்புகள். நிறைவேற
வாழ்த்துக்கள்.
////கானும் காட்சியெல்லாம்
கன்னியவளாய் தோன்றிட
ஒலிக்கின்ற ஓசையிலே -////
எப்போதும் தங்கள் வரிகளில் அந்த உணர்வகள் கொப்பளிக்கும் அந்த இடங்கள் மிகவும் கவர்ச்சியானது..
அழகிய கவிதை வாழ்த்துக்கள். . .
அற்புதமான கவிதை
நன்று மகளே பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
நல்ல எதிர்பார்ப்பு.
வாழ்த்துக்கள்.
vallkain yethir parppukal anaivar vaallkaiyom ippati ththan arumai
Post a Comment